Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் உரிமைப் பசிக்கு உணவு புல்லுத்தானா?

Featured Replies

தமிழரின் உரிமைப் பசிக்கு உணவு புல்லுத்தானா?

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு மேல் எத்தனை தடவைகளுக்கும் வகிக்கலாம் என்ற அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் அவசரப்படமாட்டாது என்று தகவல் கசிந்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய முடிவை மூத்த அமைச்சர் ஒருவரே வெளிவிட்டிருக்கிறார் என்பது செய்தி.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அரசின் முதல் வேலை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் விதத்தில் அரசமைப்பைத் திருத்துவது தான் என்று இதுவரை பிரசித்தப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது அதனை அடக்கி, அமுக்கி வாசிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாட்டின் இனப்பிரச்சினை மற்றும் நல்லாட்சி, அபிவிருத்தி, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், சாதாரண பிரசையின் அன்றாடச் சீவியத்துக்கான நிலையை மேம்படுத்துதல் போன்ற எத்தனையோ விடயங்கள் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியிருக்க ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் விடயத்துக்கு மட்டும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் தரப்படவேண்டுமா என்ற கேள்வி நாட்டு மக்களில் பெரும் எண்ணிக்கையினரிடம் எழுந்தது.

அதனைக் கவனத்தில் கொண்டுதான், ஜனாதி பதியின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசின் திட்டம் பின்தள்ளப்பட்டதாக நினைக்க வேண்டாம்.

உடனிருந்து கொல்லும் வியாதியாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் விவகாரம் குணம்குறி கண்டுள்ளது குறித்து இப்பத்தியில் விரிவாக, விலாவாரியாக எடுத்துரைத்திருந்தோம். ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இப்போதுள்ளதைவிட அதிகரிக்கும் யோசனைக்கு அல்லது திட்டத்துக்கு உள்வீட்டிலிருந்தே எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

அவரது சொந்தக் கட்சி யான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அமைச்சர்கள் சிலரே இவ்விடயத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதனையும் தெரியப்படுத்தி இருந்தோம். அதனால் இப்போதுள்ள வெப்பியாரம் தணிவதற்கு சிறிது காலம் பொறுப்பதே உகந்தது என்று மேலிடம் புத்திசாலித்தனமாகப் பின்தள்ளி வைத்துள்ளதாக அனுமானிக்கலாம்.

அது நிற்க. உள்ளூராட்சித் தேர்தல் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவருவது, மூதவை (மேல்சபை) இரண்டா வது சபை ஒன்றை நிறுவுதல் ஆகிய இரண்டு விட யங்களிலேயே அரசு உடனடிக் கவனம் செலுத்த உள்ளதாக மூத்த அமைச்சர் தகவல் சொல்லியுள்ளார். அரசாங்கத்தின் மூதவையை உருவாக்கும் முயற்சி அல்லது முடிவு, தேசியப் பிரச்சினைக்கு இனப்பிரச்சி னைக்கு தீர்வுகாணும் முயற்சியின் ஒரு பகுதி என்று அரசுத் தரப்பு கிளிப்பிள்ளை போன்று திரும்பத் திரும் பக் கூறிவருகிறது.

மாகாணத்திலிருந்து நியமிக்கப்படும் அல்லது தெரிவாகும் அங்கத்தவர்களைக் கொண்டதாக மூதவை அமையும் என்றும், மாகாண அபிவிருத்தி தொடர்பான விடயங்களை அது கவனத்தில் எடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மாகாண சபைகள் இயங்கும் போது அந்தந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்து, மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், மாகாணங்களின் அபிவிருத்தியைத் திட்டமிட்டுச் செயற்படுத்தவும் மாகாண சபைகள் இயங்கும்போது அவற்றின் பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வை செய்யவும் உருவாக்கப்படும் மேல்சபை ஒன்று தேவைதானா? அதுவே நோக்கம் என்றால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் செயற் பாடுகளைத் தணிக்கை செய்யும் ஒரு நிறுவனமாக மூதவை மாறும் சாத்தியம் பெரிதும் உண்டு. ஒவ் வொரு மாகாணத்திலிருந்தும் தலா ஐந்து உறுப்பினர்கள் மூதவையில் அங்கத்துவம் பெறும் பட்சத்தில், மூதவை, தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திப் பணி களை நோண்டிப் பார்த்துத் தடைபோடும் சந்தர்ப்பங்களே அதிகமாக இருக்கும். மொத்தத்தில் அரசாங்கம் பிரமாதமாகப் படம் வரைந்து காட்டும் மூதவை, ஒரு வெள்ளை யானையாக மாறும் அபரபக்கமே வெளிப்படும் தென்படும்.

தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்கும் பயனுள்ள பணியைப் புற மொதுக்கி விட்டு, மூதவை என்ற பம்மாத்துத் திட் டத்தை அரசு முதன்மைப்படுத்துவது, எந்தவிதத்தி லும் தமிழர்களின் உரிமைகளை வழங்க ஏதுவாக இருக்கமாட்டாது. அதனை உருவாக்குவதில் காலத்தை யும் பணத்தையும் செலவிடுவது அர்த்தமற்றது.

தமிழ் மக்களுக்குச் சேரவேண்டிய அளவுக்கு அதிகாரத்தைப் பரவல் செய்யும் ஓர் உகந்த, நியாயமான அரசியல் பொறிமுறையை உருவாக்குவதில் முழுமை யான புலனையும் செலுத்த வேண்டிய தேவை அவசியமானதாகவும், அவசரமாகவும் இருக்கும்போது, மூதவை, ஜனசபா என்ற அமைப்புகள் குறித்து அலட்டிக் கொள்வது நனைத்துச் சுமக்கும் ஒவ்வாத, அரசியல் ஏய்க்காட்டலாகும். இது, பசிக்கிறது என்று சாப்பாடு கேட்பவ னுக்கு, "பொறு பொறு சிறந்த உணவு தருகிறேன்' என்று கூறிப் புல்லுப் பிடுங்கிக் கொடுக்கும் வம்புத் தனமே அன்றி வேறென்ன?!

http://www.uthayan.com/Welcome/afull.php?id=472&L=T&1278495423

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.