Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை எங்களோட கதையுங்கப்பா

Featured Replies

நேற்று சனிக்கிழமை சில விடுவிக்கப்பட்டa போராளிகளுடனான உரையாடல் ;

பெயர் ஒளி, நான் வன்னிக்கு வந்துவிட்டேன்; என்னை விடுதலை செய்துவிட்டார்கள். ஏனென்றால் எனக்கு ஒரு கால் இல்லை மறு காலிலும் மார்பிலும் காயம். முள்ளிவாய்க்காலில் மே மாதம் காயப்பட்டேன் .காயங்கள் எல்லாம் மாறிவிட்டுது. நான் இப்போ என் பெற்றோர் வீட்டில் இருக்கின்றேன். செயற்கை உறுப்பு போடுவதற்காக நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன்.

செயற்கை உறுப்புக்கள் வன்னி மற்றும் வவுனியாவில் இலவசமாக போடமுடியும். ஆனால் முற்பதிவுகள் செய்தே போடமுடியும். பிறைவேற்றாகவும் சிங்கள என்.கி.ஓ க்கள் கம்பனிகள் செய்கின்ரார்கள். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இலவசமாக போடமுடியும். நான் அரசியல் துறையில் பணியாற்றிய படித்த போராளி. எனக்கு இயக்கத்தில் மூன்று வருடம் ஆங்கிலம் , கணனி மற்றும் பல கல்விகள் கற்பிக்கப்பட்டதனால் என்னால் வேலை செய்ய முடியும் அல்லது சுயமாக ஏதாவது செய்ய முடியும்.

இப்போ ஒரு கடையில் கைசியராக தற்காலிகமாக வேலை செய்கின்றேன்.

வன்னிக்கு என்னைப்போல 25 இற்கு மேற்பட்ட போராளிகள் வந்துள்ளார்கள் ( கால் இல்லாதவர்கள்) சிலருக்கு தாமாக தொழில் தேடும் தகுதி இல்லை பாவம் அவங்களிற்குத்தான் ஏதாவது உதவி செய்யவேண்டும்.

ஏதாவது தொழில் முயற்சிக்கு உதவி செய்தால் நல்லது.

எனக்கு உதவி பெரிசா தேவை இல்லை ஆனால் தேவைப்படுவோர் விபரத்தினை அனுப்பி வைக்கிறன் ஏதாவது உதவி செய்யுங்கோ.

எங்களோட கதைச்சாலே போதும். உதவிகள் உங்களால முடின்சா செய்யுங்கோ. கதைக்காமல் விடுவது, எங்களை குற்ற உணர்வோட பார்ப்பதுதான் வேஎதனை.

நாங்கள் வேணும் என்று சரணடையவில்லை.

பயந்தும் சரணடையவில்லை. இறுதிவரை முடிந்தவரை செய்தோம், சண்டை செய்வதற்கான எந்தவிதமான வளங்களும் இன்றியும் சண்டை பிடித்தோம். இறுதியில் தலைவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகவும் நாங்கள் சரணடைவோம் என்றும் பொறுப்பாளர்கள் கூறியதற்கு அமைய சரணடைந்தோம். என்றார்.

எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாங்கள் எங்கள் குடும்பத்துடன் எங்கள் பாட்டில் எதாவது செய்து வாழ விரும்புகின்றோம். ஆனால் சிலர் எங்களுடன் கதைக்கின்றார்கள் இல்லை. அதுதான் வேதனை.

இப்போதும் பெரும்பான்மை இனத்தவரும் வாறவங்களும் போறவங்களும் எங்களை பார்த்து நக்கலும் நளினமும் செய்யுறாங்கள். எங்களுக்கு சாகும்வரை இந்த அவமானமும், கொட்டியா பட்டமும் மாறப்போவதில்லை. அந்தளவிற்கு உள ரீதியாக காயப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றோம். அந்த வலி எமக்குள்ளே இருக்கட்டும். ஆனால் வெளி நாட்டிற்கு சென்ற எங்கள் நண்பர்களும் , மக்களும் எங்களுடன் பேசுங்கள்.

--------------

பெயர் சோழன்

சனி கிழமை மதியம் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார் சோழன் - அண்ணை எங்கள டிரைவிங் தெரியும் எண்டு எடுத்தவங்கள் இப்பகோண்டாவில் டிப்போவில டிரைவிங் பயிற்சிக்கு எண்டு விட்டிருக்கிறாங்கள். அங்க பயிற்சி நடக்குது. ஆனால் ஏளனமும் நக்கலும் தான் என்ன செய்ய. இண்டைக்கு சனி கிழமை வீட்ட லீவில போறம். 200 பேர கொண்டுவந்தாங்கள் ஆனால் 28 பேருக்குத்தான் முதல் வேலையாம். மற்ற ஆட்களுக்கு என்ன மாதிரி என்உ தெரியவில்ல.

சரிவராவிட்டால் டிரைவிங்க் லைசன்ஸ் எடுத்துக்கொண்டு ஏதாவது பிறைவேற்றாக வேலை பார்க்கலாம். வீட்டுக்காரரும் கிளி நொச்சிக்கு போய்விட்டினம். உதவி என்உ பெரிசா தேவை இல்லை.

ஆனால் வேலை கிடைக்காட்டி சந்தைக்க பெட்டிக்கடை ஒன்டு போடலாம் என்டு பார்க்கிறன். அப்ப உதவி தேவை என்றால் கேட்பன். போன் நம்பர மாற்றிப்போடாதீங்க. ( பகிடிக்கு சொன்னனான்).

ஆனால் சிலபேர் அப்படித்தான் செய்யுறாங்கள் அண்ணை. எங்களோடயே சரணடைந்துவிட்டு வெளி நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டு இப்போ தாங்கள் தான் உண்மையான விசுவாசிகள் எண்டு சொல்றாங்கள். எங்களோட கதைக்க பயமா இருக்காம். ஆமி ரெக்கோட் பண்ணூவானாம் எண்டெல்லாம் பேசுறாங்கள் ( சிரிப்புடன் சொல்கிறார்). ஒரு சிலபேர் தான் அப்பிடி ஆனால் உண்மையாக சில பேர் உதவி செய்யுறாங்கள்.

ம்ம்... எல்லாமே மறந்திட்டு குடும்பங்களை எப்பிடி பார்க்கலாம் . என்ன வேலை செய்யலாம் என்பதுதான் இப்ப போராட்டம் என்றான் சோழன். நன்றி உமை

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.