Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்புகளின் இடையே மீள் குடியேற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகாம்களில் இருந்த தமிழர்களில் பெரும்பாலோர், சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்' என்கிறது இலங்கை அரசு. இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டு உள்ள ஈழ மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் ஒருவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவரைச் சந்தித்தபோது, தமிழ் மக்களின் தொடரும் துயரங்களை விவரித்தார்.

''மன்னார் தொடக்கம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தோம். சில இடங்களைத் தவிர, எல்லா இடங்களிலும் சொந்தக் காணிகளில் மக்கள் குடியேற்றப்பட்டு

உள்ளனர். தகரம், தார்ப்பாலின் துணி எனக் கிடைத்ததைவைத்து கூடாரம் அமைத்து இருக்கிறார்கள். காற்று கொஞ்சம் பலமாக வீசினாலும், கூடாரங்கள் தாங்குவதில்லை. மழை பெய்தால் உள்ளே இருப்பவர்களின் கதி அவ்வளவு தான்....'' என்றவர், ''போரினால் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்தவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி இருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் புதர்கள் மண்டிவிட்டன. அவற்றை மெதுவாகத்தான் சீர்செய்ய இயலும். இதனால், பாம்புகள் சர்வசாதாரணமாக உலாவருகின்றன. பாம்புகள் கடித்தால் அங்கு சிகிச்சைக்கும் வழி இல்லை.

மன்னார், வவுனியா, கிளிநொச்சிபோன்ற நகர்ப்புற வைத்தியசாலைகளில் மட்டுமே ஓரளவு வசதிகள் உள்ளன. ஆனால், கிராமப்புற வைத்தியசாலைகளோ, இடிபாடுகளுடன்கூடிய கட்டடங்களில்தான் நடக்கிறது. இங்கு மருத்துவர்கள் தங்குவதற்கும் வசதி இல்லை. மாலை வரை சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அதன் பின்பு நகரத்துக்கு சென்றுவிடுகின்றனர். இதனால், இரவில் அவசர சிகிச்சை கிடைக்காதவர்கள் உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது.

போரினால் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகப் பாதிப்பு. கணவனை இழந்தோரும், 'கணவர் உயிரோடுதான் இருக்கிறாரா... இல்லையா?' என்று தேடிக்கொண்டு இருக்கும் பெண்களும் அடைந்துள்ள துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர்கள் கையில் பணம் இல்லாமல், கிடைக்கின்ற நிவாரணத்தை வைத்துக்கொண்டு பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்கும் அன்றாட உணவுக்கும் படாதபாடு படுகிறார்கள். இன்னொரு பக்கம், முகாம்களில் இருக்கும் தங்கள் கணவரைப் பார்க்கச் செல்வதற்கு, உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் பல கிலோமீட்டர் கால் கடுக்க பெண்கள் நடந்தே செல்கின்றனர். .

கழிப்பிடப் பிரச்னை, முதியவர்களையும் பெண்களையும் அதிகம் சங்கடப்படுத்துகிறது. கழிப்பிடங்கள் இல்லாத நிலையில் காடுகளுக்குள் ஒதுங்குவதுதான் இவர்களுக்கு ஒரே வழி. ஆனால், காடுகளுக்குள் செல்ல ராணுவம் தடை விதித்து இருக்கிறது. இந்த நிலையில், இயற்கைக் கடன்களைக் கழிப்பது பெண்களுக்குக் கஷ்டமானதாக இருக்கிறது. அதுவும் இரவு நேரம் என்றால் கூடுதல் அபாயம்!

எங்கு பார்த்தாலும் ராணுவப் பிரசன்னம் என்ற நிலையில், கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், படையினரால் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் பெண் பிள்ளைகளை வைத்துள்ளவர்கள் பீதியில் இருக்கின்றனர். நிலைமைகள் எப்போது சரியாகும் என்று எங்களுக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், எமது மக்களுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள்தான் பெரும் ஆதரவாக இருக்க முடியும். தாயக மக்களுக்கு இந்தக் கட்டத்தில் செய்யப்படும் எந்த உதவியும் மீள் குடியேற்றத்துக்கு எனச் சொல்வதுகூடப் பொருத்தமாக இருக்காது, அது மறுவாழ்வுக்கான பேருதவி!'' என்கிறார் இன்னமும் இழக்காத நம்பிக்கையோடு.

உலகத் தமிழினம் அந்த நம்பிக்கையை இனியாவது காப்பாற்றுமா?

- இரா.தமிழ்க்கனல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.