Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொபேர்ட் பிளேக்கை சாடுகிறது அரசாங்கம்

Featured Replies

சொல்வதைச் செய்யுமாறு கூறும் உரிமை இல்லை"

இறைமையுள்ள எமது நாட்டின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாட்டுக்கும் தலையிட உரிமை கிடையாது எனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் எமது பாராளுமன்றம் செய்ய வேண்டிய வேலையைத் தான் செய்ய முற்படுவதாகவும் கண்டித்துள்ளது.நேற்று வியாழக்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ரொபேர்ட் பிளேக்கின் கருத்துகள் தொடர்பாக ஊடக

வியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

அமெரிக்காவும் ஐ.நா. செயலாளர் நாயகமும் இலங்கை விடயத்தில் குற்றம் கண்டு பிடிப்பதிலேயே கரிசனை காட்டிவருகின்றது. கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்துவதில் கூடுதல் ஆர்வம்காட்டி வருகின்றது. இறைமையுள்ள நாட்டின் மீது சர்வதேசம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

நாம் பாராளுமன்றத்தில் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் செய்ய முற்படுகின்றனர். 17 ஆவது அரசியலமைப்பு விவகாரம் எமது உள்விவகாரமாகும்.அதனை நாம் பாராளுமன்றத்தில் செய்ய வேண்டிய பணியாகும். அது தொடர்பில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிட முடியாது. நாட்டில் ஜனநாயகம் மேம்படுத்தப்பட வேண்டுமென பிளேக் தெரிவித்திருக்கிறார். வாஷிங்டனிலிருந்து இங்குவந்து சுதந்திரமாகக் கருத்துக் கூறுமளவுக்கு அவருக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கும் நிலையிலும் கூட நாட்டின் ஜனநாயகம் பற்றி அவர் பேசமுற்படுவது வினோதமானதொன்றாகவே காணப்படுகின்றது.எமது பாராளுமன்ற விடயங்களில் வெளிநாடு அழுத்தம் பிரயோகிக்க முற்படுவதை இறைமையுள்ள நாடென்ற வகையில் எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்.

http://www.thinakkural.com/publication_west/index.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.