Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மணிய அர்சிற்கெதிராக மூன்று ஈழத்தமிழர் அமைப்புக்கள் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மணிய அர்சிற்கெதிராக மூன்று ஈழத்தமிழர் அமைப்புக்கள் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

வன்னி இனவழிப்புப் போரில் முக்கிய பங்காற்றியவரும், கொலைக்களங்கள் பலவற்றிற்குப் பொறுப்பாக இருந்தவருமான இலங்கை ராணுவ ஜெனரல் ஜகத் டயஸை ஜேர்மணிக்கான இலங்கைத் தூதுவராக ஏற்றுக்கொண்டதை எதிர்த்து ஜேர்மன் அரசிற்கெதிராக மூன்று புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புக்கள் ஐரோப்பிய ஒன்றிய மனிதவுரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

சுவிஸ் ஈழத்தமிழர் கழகம், நோர்வே ஈழத்தமிழர் கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த இனக்கொலைக்கு எதிரான அமைப்பு ஆகிய மூன்று தமிழ் அமைப்புக்களே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள ஜேர்மணிய மனிதவுரிமை அமைப்பொன்று, இலங்கை ஜெனரல் ஜேர்மணியில் ஜேர்மணிய அரசின் ஆதரவுடன் செயல்ப்படுத்தும் மனிதவுரிமை மீறல்களை வெளிக்கொணர்வதன் மூலமே இவ்வழக்கை பூரண வெற்றியை நோக்கி நகர்த்த முடியும் என்று கருத்துக் கூறியுள்ளது.

சுவிஸ் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சுமார் 60,000 ஈழத்தமிழர் சார்பாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதவுரிமைச் சரத்து 34 இற்கெதிராக இலங்கை ஜெனரலும் ஜேர்மணிய அரசும் நடந்துகொள்வதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜெனரல் ஜெகத் டயஸ் என்பவன் வன்னி இனவழிப்பு போரில் இலங்கை ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும், விசேட செயலணிப் படைப்பிரிவிற்கும் பொறுப்பாக இருந்ததோடு, பல வெளிநாட்டு மனிதவுரிமை அமைப்புக்களால் குற்றம்சாட்டப்பட்ட 40,000 பொதுமக்களின் படுகொலையிலும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009 ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம வரையிலான காலப்பகுதியில் மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீதான இவனது நேரடி அறிவுறுத்தலின் கீழான கண்மூடித்தனமான விமான மற்றும் பல்குழல் எறிகனைத் தாக்குதல் தொடர்பாக பிரஸ்த்தாபிக்கப்பட்டதோடு, இவை தொடர்பான 180 இற்கும் மேற்பட்ட ஒளி நாடாக்களும் சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வழக்குப் பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் நெட் இணையத் தலத்தில் வாசிக்க முடியும்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32287

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.