Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு கூரல் நிகழ்வு

Featured Replies

உலகிற்கு அமைதியை போதித்த புத்த பகவானைப் பின்பற்றுவதாக பறைசாற்றிக்கொள்ளும் சிங்கள இனவாத காடையரின் கோரத்தாண்டவத்திற்கு 1983 யூலை மாதத்தில் பலியான தமிழ் உறவுகளின் 27 ஆவது வருட நினைவு நாள் சிட்னியில் paramatta church street Mall இல் இன்று அனுட்டிக்கப்பட்டது.

பல நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந் நினைவு கூரல் நிகழ்வை பிற்பகல் 3.40மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பின் நியூசவுத்வேல்ஸ் ஒருங்கிணைப்பாளர் கார்த்தீபன் அருள் அகவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த நிரூத்தன் தொகுத்து வழங்கிய இந் நிகழ்வில் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை ஊடகப் பிரிவு பணிப்பாளர் சாம்பவி பரிமளநாதன் உரை நிகழ்த்தினார். ”1983 ஆண்டில் 4000ம் தமிழரைக் கொன்ற சிறிலங்காஅரசாங்கம். கடந்த வருடம் 40000 தமிழ் மக்களைக் கொன்றது. கடந்த 27 வருடத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படுகொலைகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அம் மக்களின் நல்வாழ்வுக்குரிய வழியைச் செய்வது புலம்பெயர் தமிழர்களாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது” என சாம்பவி தனது உரையிற் குறிப்பிட்டார்.

சாம்பவியின் உரையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் கிறீன் கட்சியைச் சேர்ந்த கிறீன் நியுசவுத்வேல்ஸின் செனற் தேர்தலுக்கான பிரதம வேட்பாளர் LEE RHIANNON இன் உரை இடம்பெற்றது. இவர் தனது உரையில் தமிழ் மக்கள் படும் அவலங்கள் தமக்கு நன்கு தெரியும். இவ்வுலகத்தில் வாழும் எல்லா இனங்களையும் போல் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ உரித்துடையவர்கள். தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமது கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது, தொடர்ந்தும் அம் மக்களுக்காக குரல் கொடுக்கும் எனக் குறிப்பிட்டார். இந் நிகழ்வில் அடுத்ததாக தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த யுவதி செல்வி அருள் அவர்கள் கறுப்பு யூலை படுகொலை பற்றி கவி படித்தார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக, நியூசவுத்வேல்ஸ் மாநில செனற் தேர்தலில் கிறீன் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ் செயற்பாட்டாளர் பிராமி ஜெகன் உரையாற்றினார். தனது உரையில் ”எதைப்பற்றி பேசுவது? 83 இல் படுகொலை செய்யப்பட்ட மக்களைப் பற்றி பேசுவதா? அல்லது விடுதலைக்காக உயிர் நீத்த சகோதர சகோதரிகளைப்பற்றி பேசுவதா? அல்லது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களைப் பற்றி பேசுவதா அல்லது முள்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எம் மக்களைப்பற்றி பேசுவதா அல்லது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அண்ணா அக்காக்களைப் பற்றி பேசுவதா? என்று தெரியவில்லை ” எனக் குறிப்பிட்ட பிராமி எமது மக்களின் அவலங்கள் தொடந்துகொண்டே இருக்கிறது எனக் கூறினார். அவுஸ்திரேலியாவின் இரு பிரதான கட்சிகளும் எமது துயரங்களையும் எமது கோரிக்கைகளையும் செவிமடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர் அதனாலே தமிழ் மக்களுடன் என்றும் இணைந்து பயணிக்கும் கிறீன் கட்சி சார்பில் செனற் தேர்தலில் தாம் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டு கிறீன் கட்சிக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

அடுத்ததாக தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இசையமைத்து ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடினார்கள். அப் பாடலை அவர்கள் பாடிக் கொண்டிருந்தபோது வீதியால் சென்ற பல்லின மக்களும் நின்று செவிசாய்த்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நிகழ்வில் இறுதியாக மயில்வாகனம் தனபாலசிங்கம் ”கொல்ல சுவைத்திடும் கூட்டம் எழுந்தது கூடித்தெருக்களில் ஓடி நடந்தது” என்று ஆரம்பித்த கவிதையின் மூலம் யூலை 23 இனக் கலவரத்தின் கொடுமையை மக்களின் மனக்கண் முன் கொண்டு வந்தார்.

படங்கள் பார்க்க http://pooraayam.com/world-tamil/476-2010-07-25-13-03-18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.