Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளை சிஙகள மாகாணமாக்க ராஜபக்சே முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 25, ஜூலை 2010 (18:54 IST)

தமிழர் பகுதிகளை சிஙகள மாகாணமாக்க ராஜபக்சே முயற்சி

இலஙகையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிகளில், சுமார் 4 இலட்சம் இலங்கை ராணுவக் குடும்பங்களை குடியேற்றி, தமிழ் மாகாணப் பகுதிகளை சிங்கள மாகாணமாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது பற்றி இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக இலஙகைத் தமிழ் இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.

அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள படி, இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பிர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,

“இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவும் அதற்காகவே நல்லிணக்க குழுவொன்றினை அமைத்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால், இன்றைய உண்மை நிலை வேறு.

போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேற முடியாத வகையில் சிங்கள இராணுவத்துக்கான நிரந்தரக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த மக்கள் இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு விரிவான அறிக்கை கொடுத்தும் கூட அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாறாக இராணுவத் தளபதி, சுதந்திரபுரத்தில் இராணுவத்துக்கான நிரந்தர குடியிருப்புகளைத் திறந்து வைத்துள்ளார். இராணுவத்தின் குடும்பங்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மையாகவே ஒரு புரிந்துணர்வை உருவாக்க விரும்பினால், இடம் பெயர்ந்த தமிழ் மக்களை அவர்களது சுதந்திர நிலத்தில் குடியேற்ற வேண்டும். அதனைக் கூடச் செய்யாமல், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மக்கள் தங்களின் செந்த மண்ணுக்கு மீண்டும் போக முடியாது என்றால் புரிந்துணர்வு என்பதற்கான அர்த்தத்தை இலங்கை அரசாங்கமே புரிய வைக்க வேண்டும்.

மேலும், அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குப் புரிந்துணர்வு, புரிந்துணர்வு என்று கூறிக் கொண்டு வடமாகாணத்தை சிங்கள மாகாணமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது.

இன்று வரை வடமாகாணத்தில் மட்டும் ஒரு இலட்சம் ராணுவத் துருப்புகள் உள்ளன. வடமாகாணத்தின் மக்கள்தொகை பத்து லட்சமாக இருக்கும்போது ராணுக்குடும்பங்களுக்கு நிரந்தர வசிப்பிடம் வழங்கப்படுமாயின் மொத்தம் 14லட்சமாக அதிகரிக்கும். இதனால், போதி இடவசதியின்றி இடப்பற்றாக் குறை ஏற்படும்.

இலங்கை அரசாங்கம் அரசு இடங்களில் இராணுவத்தினரைக் குடியேற்றுவது என்பதைக் கடந்து தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களையும் அபகறித்துள்ளது. இது கண்டிக்கக் கூடியது மட்டுமல்ல. உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டியதும் கூட.

இந்த நிலையில் இலங்கை அரசு கூறும் தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு என்ற விஷயம் உண்வையாயின், முதலில் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

எனவே, அரசாங்கம் நியமித்துள்ள நல்லிணக்க குழுவானது அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்யுமென்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் இந்தக் குழு தொடர்பில் முறையான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.

அரசாங்கம் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வைக் காணாமல், மக்களை அவர்களது நிலங்களில் மீளக்குடியேற்றாமல் தடுத்து வைத்துக் கொண்டு ஒரு குழுவை நியமித்துள்ளது கேலிக்குரிய செயலாகும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அந்த இலங்கைத் தமிழர் இணையதள செய்திகள் விவரிக்கின்றன.

நக்கீரன்

முழு நாடுமே சிஙகள மயமாகிப் போச்சு இதுக்குள்ள என்ன மாகாணம், மாவட்டம் எண்டு கொண்டு :lol::lol::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.