Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீது இலண்டனில் வழக்கு

Featured Replies

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனக்கு செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த மறுத்து வருவதால் ஸ்ராண்டட் சாட்டட் வங்கி இலண்டனில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனான சர்ச்சைக்குரிய ஹெஜிங் ஒப்பந்தத்திற்கு அமையவே பிரித்தானிய வணிக நீதிமன்றத்தில் ஸ்டாண்டர்ட சாட்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கு அடுத்த வருடம் மார்ச் 28 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தன.

ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பான வர்த்தகச் செயற்பாடுகளை மீறியமைக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மீது மேற்படி வங்கி வழக்குத் தொடுத்துள்ளது.

பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் 5 வங்கிகளுடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை செய்திருந்தது.

இது தொடர்பாக ஏனைய வங்கிகள் சிங்கப்பூரில் மத்தியஸ்த சபை நாடியிருந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜுலை 26 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்றது. அடுத்த மத்தியஸ்த மன்றம் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் ஒன்றுகூட வேண்டும் என இவ்வங்கிகள் வலியுறுத்துகின்றன.

மேற்படி ஹெஜிங் உடன்படிக்கையின்படி உலக சந்தையில் ஒரு கட்டத்திற்கு மேல் விலை உயர்ந்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் எரிபொருட்களுக்கான மேலதிக செலவை வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எரிபொருள் விலை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழ் குறைந்தால் வங்கிகளுக்கு லாபம் கிட்டும்.

இவ்வாறான நிலையில் உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக குறைவடைந்த போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்படி வங்கிகளுக்கு பெருமளவு பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

அதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, வங்கிகளுக்கு வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை வழங்கியது. எனினும் பெற்றோலிய விலை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் தனது இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் நீதிமன்றம் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழ நாதம்

  • 11 months later...

'ஸ்டான்டர்ட் சார்டர்ட்டுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் 162 மில்லியன் டொலர்களும் வட்டியும் செலுத்த வேண்டும்'

ஹெஜிங் உடன்படிக்கையின்படி  ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை செலுத்தாததால், அவ்வங்கிக்கு சுமார் 162 மில்லியன் டொலர்களையும் அதற்கான வட்டியையும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சீபெட்கோ) வழங்க வேண்டியுள்ளதாக லண்டன் நீதிமன்றமொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீபெட்கோவிலிருந்து கருத்து கூறுவதற்கு ஒருவரும் கிடைக்கவில்லை எனவும் ஆனால் எமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கியின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/24576-q-162-.html

--------------------------------------------------------------------------------

ஹெட்ஜிங் என்றால் என்ன ?

http://www.iepf.gov.in/Tamil/FAQs-INDICES-TA.asp

ஹெஜிங் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய சி.பி.சி. தீர்மானம்

ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக லண்டன் வர்த்தக நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை லண்டன் வர்த்தக நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இம்மேன்முறையீட்டு நடவடிக்கையை கையாள்வதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக நீதிமன்றமொன்றின் உத்தரவு மேன்முறையீடொன்றால் ரத்துச்செய்யப்படுதற்கு வாய்ப்பில்லை.அப்படி இரத்துச்செய்யப்படுவதற்கு மிகப் பலமான சட்ட நிலைப்பாடு இருக்க வேண்டும் எனக் கூறினார்.

ஹெஜிங் உடன்படிக்கையின்படி ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்கப்பட வேண்டிய பணம் செலுத்தப்படாததால் அவ்வங்கிக்கு 162 மில்லியன் அமெரிக்க டொலர்களும் (சுமார் 1771 கோடி ரூபா) வட்டியும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்க வேண்டும் என நேற்று திங்கட்கிழமை லண்டன் வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/24629-2011-07-12-12-54-11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.