Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த 15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையருக்கு கனடாவில் அரசியல் தஞ்சம்!

Featured Replies

கடந்த 15 வருடங்களில் 37 ஆயிரம் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து வழங்கி உள்ளது. இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் Martin Collacott இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

உலகிலேயே மிகவும் இலகுவான முறையில் அகதிகள் புகலிடம் பெறக் கூடிய இடமாக கனடா இருந்து வருகிறது. ஆகவேதான் புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்கள் கனடாவை வந்தடைகின்றமையை மிகவும் விருப்பத்துக்கு உரிய தெரிவாகக் கொண்டுள்ளார்கள்.

கனடா மிகவும் மனிதாபிமானம் உடைய நாடு.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது கனடாவில்தான் மிக அதிகமான அளவில் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு வருகின்றது.

கனடாவை வந்தடைந்து அரசியல் தஞ்சம் கோருவோரில் 50 சதவீதம் ஆனவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்து விடும். ஆனால் ஏனைய நாடுகளில் 15 சதவீதம்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

எனவே கனடாவுக்கு வருபவர்கள் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கான வாய்ப்புக்கள் ஏராளம். உதாரணமாக அகதி அந்தஸ்து கோரி 2003 ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றிருந்த ஈழத் தமிழரில் 02 சதவீதத்தினருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ஜேர்மனியில் 04 சதவீதமானோருக்குத்தான் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் கனடாவில் 76 சதவீதமானோருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே கனடா இந்த அகதிகளுக்கு பொன் முட்டை இடும் வாத்து மாதிரி.

அத்துடன் அகதிகள் என்று சொல்லி வருபவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ள அரச செலவில் சட்டத்தரணிகளின் சேவை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அதே போல இலவச சுகாதார நலன்புரி சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு வருகை தருகின்றமையை பெரிதும் விரும்புகின்றமைக்கு இன்னொரு பிரதான காரணியும் உண்டு. பல வருடங்களாக கனடாவில் கணிசமான தொகையில் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்."

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8265:-15-37-&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.