Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினர், என்ன போடு தடியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினர், என்ன போடு தடியா?

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக புத்தளம் மாவட்டத்தின் பல ஊர்களிலும் வாழ்ந்து வருகிறார் கள். எனினும் இதுவரை அவர்களது வாக்குரிமை அவர் களது பிறந்த பிரதேசங்களிலேயே உறுதிப்படுத்தப் பட்டு வந்தன.

அந்த உரிமையை இல்லாமற் செய்து, அவர்களை இப்போது தங்கியுள்ள புத்தளம் மாவட்டத்திலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் சூழ்ச்சி செய்யப்படுகிறது.

நீண்ட காலமாகத் தமது தாயக நிலத்தொடர்பற்று இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அனைவரும் புத் தளம் மாவட்டத்தின் வாக்காளர்களாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தல் விடுக் கப்பட்டிருக்கிறது; வற்புறுத்தப்பட்டிருக்கிறது.

அரசின் இந்த முயற்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. நடை பெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன் றத் தேர்தல்களில், இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் வாக்குரிமையை அவர்களது சொந்த மண்ணில், பிறந்த மண்ணில் இல்லாமற் செய்துவிடும் நோக்கத்திலேயே அரசாங்கம் இந்தத் திட்டத்தை வகுத்துள்ளதாக முஸ் லிம் காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

அது மட்டுமன்றி, வடக்கு முஸ்லிம் மக்களின் வாக்குரிமையைப் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்று வதற்கு அரசாங்கம் முயல்வதற்கு உள்ளூர பிரதான காரணம் உண்டு என்றும் வெளிப்படுத்தப்பட்டுள் ளது.

போர் முடியும் வரை, இடம்பெயர்ந்தவர்களின் பட் டியலில் வடக்கு மாவட்டங்களில் இருந்து புத்தளம் மாவட்டத்திற்குச் சென்றவர்களை வலுவான தரவாக அரசு சர்வதேசத்துக்குக் காட்டியது. அதனூடு பிற நாடுகளின், குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் அனுதா பத்தைப் பெற்று பெரும் உதவிகளையும் பெற்றுக் கொண்டது. மிகக் குறிப்பாக மீள்குடியேற்றத்துக்கென பெரும் நிதித் தொகையைக் கறந்தது. வாக்குகளைப் புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாக்கினால் மீள்குடி யேற்றம் தக்கவாறு, சிறப்பாக நடந்திருக்கின்றது என் பதனைக் காட்டி, அதன் மூலம் நல்ல பெயர் வாங்க லாம். அந்த நல்ல பெயரை வைத்து மேலும் மேலும் முஸ்லிம் நாடுகளிடம் இருந்து அள்ளலாம் என்ற திட் டமும் பின்னணிக் காரணியாக இருக்கலாம் என்றும் கொள்ளவேண்டி உள்ளது.

அது மட்டுமன்றி,மீள்குடியேற்றம் என்ற பெயரில், போர்வையில் கோடிக்கணக்கான ரூபா பணம் வீண் விரயமாக்கப்பட்டதும் உண்டு. வீண்விரயம் என்ற முத்திரையுடன் அரச அதிகாரிகளால் கையாடப்பட்ட தும் உண்டு. மீள்குடியேற்றம் அர்த்தபுஷ்டியாக நடை பெறவில்லை என்ற உண்மை வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் வடக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்து கொள்ளும் திட்டம் அரச அதிகாரிகளால் கையில் எடுக்கப்பட்டது என்ற இன்னொரு தில்லுமுல்லுப் பக்கமும் உண்டு.

இத்தகைய நிலைமைகளை நீக்கி, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்லும் உரிமை உள்ளவர்கள். அந்த உரிமை அவர்களுக்கு வலுப்படுத்தப்படவேண்டும் என்று முஸ்லிம் காங்கி ரஸ் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.

அர்த்தமற்ற, மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை அரச திணைக் களங்கள் தவிர்த்துக் கொண்டு

இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடி யேற்றத்துக்கு தீர்வு காண்பதற்கு முன் உரிமை கொடுத்துச் செயற்பட வேண்டும்.

அதன் பொருட்டு விசேட செயலணி ஒன்றை அமைத்து அரசியல் சார்பற்ற அணுகுமுறையை நடை முறைப்படுத்த வேண்டும் என்றும் முஸ்லிம் காங் கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந் தும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றியதாகக் கூறி அரசு போட்ட வேடங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிக்கிளம்புகின்றன. 21 வருடங்களாகியும் மீள்குடியேற்றம் என்பது தொட்ட தும் விட்டதுமாகவே உள்ளது. அவ்வாறிருக்க அவர் களது வாக்குகளை புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்துவது அடிப்படை உரிமை மீறல் ஆகும்.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளிலும் ஏன் நாடாளுமன்றத்திலும் வடக்கு மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான அரசின் சதி யாகவே இதனைக் கொள்ள வேண்டும். சிறுபான்மை இன மக்கள் என்றால், அவர்களின் ஜனநாயக உரிமை களை பறிக்கவும் செய்வோம் என்ற சிங்கள மேலா திக்க அரசுகளின் கர்வத்திற்கு, வடக்கு முஸ்லிம் மக் களின் வாக்குகளைப் புத்தளத்தில் பதிவது என்ற ஏற் பாடு ஓர் உதாரணம் ஆகிறது.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.