Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை - மாவை

Featured Replies

தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து கலந்துரையாடுவதற்கான எவ்வித அழைப்பிதழ் எதுவும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்க் கட்சிகள் ஒன்றினைந்த ‘‘தமிழ்க் கட்சிகளின் அரங்கம்’’ ஐந்தாவது தடவையாக மட்டக்களப்பில் கடநத சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப் (நாபா), டெலோ மற்றும் புளொட், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு முதலான கட்சிகள் கலந்துக்கொண்டன.

இதன்போது தமழ் மக்கள் எதிர்நோக்குகின்ற தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் அவற்றை அரசாங்கத்தின் கவனததிற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=5670

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பு விடுக்கவில்லை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

16 August 10 01:15 pm (BST)

தமிழ் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அழைப்பு விடுக்கப்பட்டாலும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் நாடு திரும்பியதன் பின்னரே தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈ.பி.டி.பி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் கடந்த வாரம் மட்டக்களப்பில் கூடி தமிழ் மக்கள் பிரச்சினை குறித்து ஆராய்ந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பது என குறித்த தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்ட மூல அமுலாக்கம் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்பதென தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=28546&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.