Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடக்கும் படுகொலைகளில் இருந்து தப்பவே தஞ்சமடைந்தோம்

Featured Replies

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு நெஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ள கடிதங்களில் தாங்கள் கனடாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனேடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் தீவிரவாதிகளல்லர்

"நாங்கள் தீவிரவாதிகள் அல்லர் எனக் கூறுகிறோம். மேலும் கனேடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகின்றோம்."

இரண்டாவதாக 'சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்' எனக் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் தாங்கள் மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

"குடியேறியவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் வந்துள்ள நாம், முழுமையான அர்ப்பணிப்புடன் கனேடிய சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்."

இவையே மே மாதம் தாய்லாந்து வளைகுடாவில் இருந்து புறப்பட்டு கனடாவின் மேற்குக் கடற்கரையில் கடந்தவாரம் வந்திறங்கிய 492 அகதிகளின் முதலாவது வாக்குமூலங்களாக வெளிவந்துள்ளன.

இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று நம்பப்படுகின்றது. மாநில சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களைச் சந்தித்தவர்களின் தகவலின்படி, இவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவர் கர்ப்பிணித் தாய்மார்களாக உள்ளனர். 70 வயதைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்களும் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.