Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றத்தை மறைக்க முயற்சி:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 2, செப்டம்பர் 2010 (22:52 IST)

போர்க்குற்றத்தை மறைக்க முயற்சி:

கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த ராஜபக்சே திட்டம்

இலங்கை இனவெறி அரசு புரிந்த போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு தெரிந்த பிறகு பல்வேறு நெருக்கடிகள் ராஜபக்சே அரசுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பல்வேறு சலுகைகளை ரத்து செய்துவிட்டன. ஐநா மன்றம் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.

கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கை அரசு இந்தியா,சீனா போன்ற நாடுகள் உதவியுடன் போர்க்குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

முதல் முயற்சியாக இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தியது ராஜபக்சே அரசு. இதை முக்கியமானவர்கள் புறக்கணித்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து 2வது கட்டமுயற்சியாக கொழும்பு நகரில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தும் முயற்சியில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டு வருகிறது. ஜனவரி 5,6,7,8 ஆகிய தேதியில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

உலகம் முழுவது ம் இருந்து தமிழ் எழுத்தாளர்களை இம்மாநாட்டிற்கு வரவழைத்து அதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தையும், போர்க்குற்றத்தையும் மறப்பகுதிக்கு திட்டமிட்டுள்ளனர்.

ராஜபக்சேவின் இத்திட்டம் குறித்த தகவல் வெளியானதும் சர்வதேச அளவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் சங்கங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து த்மிழ் எழுத்தாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பு‌வில் நடத்தத் திட்டம்!

தமிழனப் படுகொலையை மறைக்க மற்றொரு முயற்சியாக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்புவில் நடத்த சிறிலங்க அரசு முயற்சித்து வருகிறது.

சமீபத்தில், இந்திய சர்வதேச திரைப்பட விருது விழா (ஐஃ‌பா) இலங்கையில் நடத்தப்பட்டது. இதற்கு தமிழன அமைப்புகளும், தமிழ்த் திரையுலகமும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அது தோல்வியில் முடிந்தது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா போன்ற முன்னணி நடிகர்களும் கலந்துகொள்ளவில்லை. இலங்கைக்கு பெரும் நட்டத்தையும் இந்த விழா ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து 2வது கட்ட முயற்சியாக கொழும்புவில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த சிறிலங்க அரசு முயன்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 முதல் 8 ஆம் தேதி வரை இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்க அரசின் இத்திட்டம் குறித்த தகவல் வெளியானதும், சர்வதேச அளவில் உள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, மூத்த எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர் உட்பட 25 பேர் இன்று மாலை சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, சிறிலங்க அரசு தங்கள் போர்க்குற்றங்களை மறைப்பதற்காக நடத்த திட்டமிட்டுள்ள சர்வதேச தமிழ் எழுத்தளார்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1009/02/1100902061_1.htm

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழர் வீடுகளையும் சொத்துக்களையும் அழித்துவிட்டு, தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, தமிழர்களை அடக்கிவைத்துக் கொண்டு, தமிழர் வளங்களை சுரண்டி கொள்ளையடித்தபடி எழுத்தாளர் மகாநாட்டை சிங்கள பயங்கரவாத அரசு செய்ய முயல்கிறது என்றால், அது கபட நோக்கமுடையது.

சிங்கள பயங்கரவாத அரசின் கபட நோக்கங்களுக்கு முட்டுக் கொடுப்பவர்கள், உலகத் தமிழரால் இனம் காணப்பட்டு தமிழின விரோதிகளாக கணிக்கப் படுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதொடர்பாக, மூத்த எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர் உட்பட 25 பேர் இன்று மாலை சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, சிறிலங்க அரசு தங்கள் போர்க்குற்றங்களை மறைப்பதற்காக நடத்த திட்டமிட்டுள்ள சர்வதேச தமிழ் எழுத்தளார்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

கலந்து கொள்ளாதவர்களை ஊக்குவிக்க யாரும் காணோம்... ஏதோ எழுத்தாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் படி வருது என அனைத்தும் கட்டாகிவிடும் என என்று பயமுறுத்ததான் பலர் உள்ளனர் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.