Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்டர்போல் அதிகாரிகளைப் போல் நடித்து பணம் பறிப்பு! படை விட்டோடிகள் ஆறு பேர் கைது

Featured Replies

டுபாயில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு திரும்பி இருந்த பெண்ணொருவரிடம் இன்டர்போல் அதிகாரிகளாக நடித்து தங்க நகைகள், பெருந்தொகைப் பணம் ஆகியவற்றை அபகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட படைவிட்டோடிகள் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொரளை, கடுவல, தெமட்டகொட, கொச்சிகடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் அப்பெண்ணின் வீடு உள்ளது.

அவ்வீட்டுக்கு வெள்ளை நிற டிபெண்டர் ரக வாகனமொன்றில் வந்தே இவ்வாறு நடித்தனர்.வீட்டை சோதனையிட வேண்டும் என்றனர். டுபாயில் களவாடப்பட்ட நகையொன்று அப்பெண்ணிடம் இருக்கின்றது என அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதென கூறி இருக்கின்றனர்.

அதன்பின் அவ்வீட்டிலிருந்து 1,020,000 ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். பெண் அவர்களை கொழும்பில் வந்து சந்திக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயினர். கொழும்பில் அப்பெண் இவர்களைச் சந்தித்தார்.

இவ்விடயத்தைச் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வருகின்றமைக்குப் பணம் தர வேண்டும் என்று மிரட்டினர். இவர்களுக்கு கொடுக்கின்றமைக்காக அப்பெண் வங்கிக் கணக்கிலிருந்து 475,000 ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக் கொண்டார். பின்னர் சட்டத்தரணியொருவரின் ஆலோசனையை நாடியிருக்கின்றார்..

சட்டத்தரணியின் ஆலோசனைக்கமைய சிலாபம் பொலிஸ் அத்தியட்சரிடம் அப்பெண் முறையிட்டார். இதையடுத்தே ஆறு பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9579:2010-09-02-20-55-10&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

தமிழினப் படுகொலையை அரங்கேற்றிவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு இன்டர்போல் உதவி வருவதால், இவர்கள் உண்மையான இன்டர்போல் ஊழியர்களாக இருக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

மொள்ளமாறி தனம் பண்ணுவதற்கு ஒரு அளவே கிடையாதா... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.