Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த - கூட்டமைப்பு குழுக்கள் அமைப்பு; விபரங்களை வெளியிடாமல் கூட்டமைப்பு இருட்டடிப்பு

Featured Replies

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010

இனப்பிரச்சினைக்கும், அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வு, புனர்வாழ்வுக்கும் அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தத்தமக்குத் தனித்தனி குழுக்களை நிறுவ உள்ளனவாம். அந்தக் குழுக்கள் இணைந்து குறிப்பிட்ட விடயங் கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து இணக்கத்துக்கு வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வகையில் அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும் குழு உறுப்பினர்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி சம்பந் தமாக ஆராயும் குழுவின் உறுப்பினர்களையும் நியமித்துவிட்டன.

எனினும் இரு தரப்புகளின் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை அவை வெளியிட மறுக்கின்றன. அரசியல் தீர்வை ஒருபுறமாகவும் அபிவிருத்தி மீள்குடியமர்வு, புனர்வாழ்வு ஆகியனவற்றை இன்னொருபுறமாக பேசி ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ள அரசாங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை. சேனாதிராசா கூறியுள்ளார்.

அரசியல் தீர்வு காண்பதற்கான குழுவில் இடம்பெறும் அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்துவிட்டார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடுதிரும்பியதும் இக் குழுவில் இடம்பெறும் எமது தரப்பு உறுப்பினர்களின் விவரங்களை சமர்ப்பிக்கவிருக்கிறோம்.

அபிவிருத்தி மீள்குடியமர்வு, புனர்வாழ்வு அபிவிருத்தி ஆகியன தொடர்பான குழுவில் இடம்பெற உறுப்பினர்களின் விவரங்களை நாம் சமர்ப்பித்துவிட்டோம் அரசதரப்பு தனது பக்கத்து உறுப்பினர்களின் விவரத்தை இன்னமும் வெளியிடவில்லை. அபிவிருத்தி மற்றும் துறைகள் சார்ந்த குழுவுக்கு எம்மால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் எமக்கு அறிவித்துள்ளார் என்றார் மாவை சேனாதிராசா.

எனினும் கூட்டமைப்புசார்பில் நியமிக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.