Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல்வழியாக தப்பி சென்ற எம்மவரை கடற்படையினர் சுட்டுக்கொன்றனர் - முல்லையில் பெண்மணி சாட்சியம்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010

கடலில் வழியாக தப்பி செல்லும் வேளை கடற்படையினர் எம்மை நோக்கி சுட்டனர் இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். நானும் எனையோரும் தப்பி விட்டோம். இவ்வாறு சாட்சியம் அளித்துள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த பெண்மணி.

கோரமான யுத்தப் பிடிக்குள் சிக்கித் தவித்த மக்கள் தப்பிச்செல்ல முடியாமல் நாளாந்தம் செத்துமடிந்து கொண்டிருந்தனர். நாங்களும் எத்தனையோ தடவை தப்பிச் செல்ல முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை.

இறுதியில் கடல்வழியாகத் தப்பிச்செல்லத் தீர்மானித் தோம். அதன்படி வெள்ளைக் கொடியுடன் ஒரு படகில் 20 பேர் அதிகாலை வேளை புறப்பட்டுச்சென்றோம். பயணம் தொடர்ந்தது. திடீரென எங்கள் படகுமீது கடற் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் எம்முடன் பயணித்த எட்டுப் பேர் துடிதுடித்து மாண்டனர். உயிரிழந்தவர்களில் எனது சகோதரியும் ஒருவர்.

இவ்வாறு நேற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் ஈஸ்வரி தெரிவித்தார்.

அவர் அங்கு சாட்சியமளிக்கையில் மேலும் கூறியதாவது:

தரைவழியகாத் தப்பிச் செல்லமுடியாது. எவ்வேளையிலும் ஷெல் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், வான்தாக்குதல்கள் நடைபெற்று வந்ததால் நாங்கள் கடல் வழியாகத் தப்பிச்செல்ல முடிவுசெய்தோம்.

அதைத் தொடந்தே நாங்கள் வெள்ளைக் கொடியுடன் படகில் புறப்பட்டோம். நாம் படகில் புறப்படுவதற்கு அதிகாலை 3 மணியைத் தெரிவுசெய்திருந்தோம். கடலில் தப்பிச்செல்ல முயல்பவர்கள் அநேகமாக இந்த நேரத்திலேயே புறப்படுவார்கள்.நாங்களும் அந்த நேரத்தையே ஒதுக்கிப் புறப்பட்டோம்.

அப்படிப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோதே எம்மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். அந்தக் காலகட்டத்தில் கடற்புலிகள் அநேகமாக வலுவிழந்துவிட்டனர். கடலில் அவர்களின் ரோந்து ஏதுமில்லை என்பது தெரியும். அதனாலேயே கடற்படையினர்தான் சுட்டவர்கள் என்று கூறுகிறேன்.

தாக்குதலில் எட்டுப் பேர் மடிந்த நிலையில் 12 பேர் தப்பிப் பிழைத்தோம். உயிரிழந்த சகோதரியின் கணவரும் இச்சம்பவத்தின்போது உயிர் தப்பினார். எனினும் அவரைக் கடற்படையினர் கைதுசெய்து புல்மோட்டைக்கு அழைத்துச்சென்றனர். அவரைப் பற்றி இதுவரை தகவல் எதுவும் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதும் தெரியாது. என்றார். ஈஸ்வரி அவர்கள்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.