Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது: வைகோ.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து இருப்பதையும், அதை உறுதிபடுத்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டதை அங்கீகரிப்பது குறித்தும் முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.இதில், வைகோ நேரில் ஆஜராகி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.வைகோ தன் தரப்பு வாதங்களை எடுத்துக்கூற மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.பின்னர், இந்த வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.http://www.tharavu.com/2010/09/blog-post_8485.html

ர். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.பின்னர், இந்த வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.http://www.tharavu.com/2010/09/blog-post_8485.html

புலிகள் அமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது முற்று முழுதுமாக அழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கை இனவெறி அரசு அறிவித்த . பின்பு அதன் பிரதிநிதிகளை எங்கே தேடுவது..... புலிகள் அமைப்பு ஒரு சட்ட விரோத அமைப்பு என்று மட்டுமே இந்திய(United States of India-USI) உள்துறை அமைச்சு கடந்த வைகாசி மாதத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. புலிகள் தங்கள் இனத்தின் விடுதலைக்காக அரசின் கொடூர அடக்குமுறையை எதிர்த்து போரிட்டார்கள். அதற்க்கான தார்மீக உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று நியூசீலாந்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி இருந்தது.

புலிகள் அமைப்பு மீதான தடை மீண்டும் நீடிக்கப்ப்டுமா என்ற கேள்விக்கு, தடையை எதிர்த்து மனுதாக்கல் செய்தால் அதனை பரிசீலிக்க பிரிதான்னிய அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று பிரித்தன்னியாவின் உள்துறை இணை அமைச்சர் பதில் வழங்கி இருந்தார்.

எமக்குள் இருக்கும் பிளவுகளை முன்னிறுத்தாமல் பிரிடான்னிய மக்கள் பேரவை, உலகத் தமிழர் பேரவை, நாடு கடந்த அரசாங்கம் போன்ற அமைப்புக்கள் இவற்றை கருத்தில் எடுத்து சிந்தித்து செயல்படுவது நன்று. ஆனது ஆகட்டும் என்று இருக்காமல் நடந்தவைகளை எமக்குள் உள்ள பிளவுகளை மறந்து எமக்கான ஆதரவு தளத்தினை அமைத்திட ஒன்று பட்டோ இல்லை தனித்த ரீதியிலோ செயல்படுவது நன்று.

புலம் பெயர் தமிழ்கள் மட்டுமல்ல உலகத் தமிழினமே இவ்வமைப்புக்கள் தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்க போராடும் ஒர் அமைப்பாகவே கருதுகிறார்கள்.

இந்திய(USI) மத்திய, மாநில அரச ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கு மேலுள்ள மக்களை தவிர்த்து இதர தமிழ்நாட்டு உழைக்கும் வர்க்கமும் இளைய சமுதாயமும் இந்தியம் இந்தியன் என்ற பகுப்பில் இருந்து விடுவித்துக்கொள்ளும் எத்தனிப்புக்கள் ஆங்காங்கே பரவலாக முளைவிடுவதை USI அரசு கருத்தில் எடுக்கத் தயங்கக் கூடாது. அதற்க்கு முழுமுதல் காரணம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் இந்தியத்தின் பங்களிப்பும், ஒரு இன விடுதலைக்கு விரோதமான முண்டு கொடுப்புகளும் மட்டுமில்லாமல் வன்னியில் உக்கிர சமர் நடைபெற்ற வேளை தமிழ்நாட்டு மக்களின் உலக தமிழர்களின் அழுகுரல்களை கூக்குரல்களை செவிமடுக்காமல் சிங்களத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தையும் அவர்களின் உணர்வுகளையும் உதாசீனம் செய்திருந்தது.

பல தேசங்கள் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட இந்த United States of India(USI) நாடு ஒரு கண்ணில் வெண்ணையும் மறுகண்ணில் சுண்ணாம்பும் பூசி தமிழர்கள் மனதில் குறிப்பாக உழைக்கும் தமிழ் வர்க்கத்தின், இளைய சமுதாயத்தின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது.

புலிகள் அமைப்பு மீதான தடையை விலக்குவது தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ அது நிச்சயமாக USI இன் ஒருமைப்பாட்டுக்கோ பாதுகாப்புக்கோ என்றுமே பங்கம் விளைவிக்காது. தடையை நீடிக்கிறோம் என்று மக்களின் வரிப்பணத்தையும், காலநேரத்தையும் வீணாக்காமல், காலம் கடத்தாமல் தமிழர்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற இதயசுத்தியுடன் ஒட்டு மொத்த இந்தியமும் முன் வருவதே தற்போதைய இந்தியாவை பாதுகப்பதர்க்கான ஆக்கபூர்வ தேவை. அதுவே காலத்தின் கட்டாயம்.

Edited by Rudran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.