Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து ரூபாய் காசு கூட எங்களிடம் இல்லை! போரால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்து ரூபாய் காசு கூட எங்களிடம் இல்லை! போரால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் அவலம்

”சீனி, தேயிலை வாங்கக் கூட எங்களிடம் ஒரு பத்து ரூபாய் காசு இல்லை.” வீட்டின் வறுமை நிலையை இப்படி உருக்கமாக வெளிப்படுத்தினார் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு கிராமத்தில் வாழும் யுத்த விதவைகளில் ஒருவரான நிலாமணி தங்கராசா (வயது 37).

தங்கராசா-நிலாமணி தம்பதிக்கு ஆறு பிள்ளைகள். ஒரே ஒரு ஆண் மாத்திரம் தமிழினி (வயது-18), சங்கீதா (வயது -15 ), தர்நிலா (வயது-13), தமிழ்செல்வன் (வயது-10), ரஞ்சனா (வயது-04), பானு (வயது-02). ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி.

எப்படியோ முதலாவது பெண் பிள்ளை தமிழினிக்கு ஒருவாறு கலியாணம் கட்டி வைத்தனர்.கலியாணம் செய்தபோது தமிழினிக்கு வயது 17 மாத்திரமே. ஒரு பேரக் குழந்தை கிடைத்தது.

இறுதிக் கட்ட யுத்தம் உக்கிரம் அடைந்தபோது இரு மாதக் குழந்தை அது. எல்லாரையும் போலவே பிள்ளைகள், மருமகன், பேரக் குழந்தை ஆகியோருடன் தங்கராசா-நிலாமணி தம்பதியர் இடம்பெயர்ந்தனர். இரு மாதக் குழந்தையையும், தமிழினியையும் பொக்கனை என்கிற இடத்தை அடைந்தபோது நட்டாற்றில் கைவிட்டு விட்டு தமிழினியின் கணவர் மாயமாக மறைந்து போனார்.

புதுமாத்தளனில் குடும்பத் தலைவன் தங்கராசா எறிகணைத் தாக்குதலில் உயிர் இழந்து விட்டார். தமிழினிக்கு பலத்த காயம். தாய் நிலாமணிக்கும், தமிழினியின் இன்னொரு சகோதரிக்கும் சிறு காயங்கள்.தமிழினியைத் தூக்கிச் செல்லக் கூட யாரும் இல்லை.உதவி செய்ய எவரும் முன்வரவில்லை.

நிலாமணி அவரின் காயத்தைப் பொருட்படுத்தாமல் மூத்த மகளைச் சுமந்துகொண்டு ஏனைய பிள்ளைகளுடன் நத்தை வேகத்தில் நகர்ந்து சென்றார். முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் மூத்த மகளை சேர்த்து விட்டு இடம்பெயர்வைத் தொடர்ந்தார்.

இடம்பெயர்வைத் தொடர்ந்து வவுனியா நலன்புரி முகாமில் தங்கினர். சுமார் இரு மாதங்களுக்கு முன் தினம் சொந்த இடத்தில் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டனர். ஆயினும் முகாம் வாழ்க்கைக்கும் தற்போதுமீள்குடியேற்றப்பட்ட பின் ஆரம்பித்திருக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்கிறார் நிலாமணி.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தமிழினிக்கு என்ன நடந்தது என்பது தாய்க்கும், சகோதரர்களுக்கும் இன்று வரை மர்மமாகவே உள்ளது. தமிழினியின் குழந்தைக்கு இப்போது ஒன்றரை வயது. தாயின் முகமோ, தந்தையின் முகமோ அதற்கு நினைவு இல்லை.

வீட்டில் ஆண் துணை இல்லை. உழைப்புப் பிழைப்பு இல்லை. வருமானம் இல்லை. சீவியம் மட்டும் ஏதோ ஓடுகின்றது. கடவுள்தான் இக்குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10877:2010-09-23-18-18-39&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.