Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியம் அளித்த பொதுமக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்; பாதுகாப்பு தேவை. மாவை சேனாதிராஜா

Featured Replies

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2010

ponnakar

மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என மாவை கேட்டுக்கொண்டுள்ளார். இராணுவத்தினரின் கெடுபிடிகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவேண்டும்'' இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக் கையை விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனா திராஜா கூறியவை வருமாறு:

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்த பெற்றோர்கள், "இராணுவத் தினரால் அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் சரண் அடைந்த தமது பிள்ளைகளுக்கு என்ன ஆனது?' என்று கேட்டனர்.

தமது பிள்ளைகள் எவ்வாறு பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தப்பட்டனர் என்பதையும் தெரிவித்து தமது பிள்ளைகள் இன்னும் உயிருடன் இருக்கின்றனரா? என்பது கூடத் தெரியவில்லை என கண்ணீர் மல்க சாட்சியம் அளித்தனர்.

இவ்வாறு சாட்சியம் அளித்த பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தப் படுகின்றனர் என்றும் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் கூறுகின்றனர். எனவே, இம்மக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியும், அரசும் யுத்தம் முடிந்து விட்டது. அபிவிருத்தி நடவ டிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. மக்கள் அச்ச மின்றி வாழ்கின்றனர் என்கின்றனர். அப்படியானால், மாதா மாதம் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவேண்டியதன் அவசியம் என்ன?

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதன் மூலம் இராணுவத்தினருக்குக் கூடுதலான அதிகாரங்களை வழங்கி, ஜனநாயகத்தை ஒடுக்கி, சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதே அரசின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.

ஜனாதிபதிக்கு கூடுதலான அதிகாரமும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலமும் இருப்பதால் ஜனாதிபதி எதிர்க்கட்சியினரை துச்சமாக கருதுகின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. அரச அதிகாரிகளுக்கு இராணுவம் கட்டளையிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், சிவில் நிர்வாகம் ஒழிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி நிலவுகின்றது. இதற்கு துணை போவதற்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் காலம் காலமாக வாழ்ந்த எம்மக்களின் வீடுகள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வீடுகளில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. எமது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. எமது மக்கள் இருக்க இடமின்றி மரங்களின் கீழும், ஒட்டுக் குடிசைகளிலும் வாழ்கின்றனர். இப்பொழுது பருவ மழை ஆரம்பமாகி உள்ளது. மக்கள் போக்கிடம் இன்றி துன்பப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுகின்றோம் என்று போக்குக் காட்டுகின்றனர். ஆனால், விமோசனம் ஏதும் கிடைக்கவில்லை.

கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற அரச தரப்பில் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அங்கு நேரடியாகப் போய் பார்ப்பதற்கு அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தபோதும் சில காரணங்களுக்காக செல்ல முடியாமல் போய்விட்டது.

எனவே, இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் எம்மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இராணுவத்தினால் லொறிகளில் ஏற்றிச்செல்லப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் பல பெற்றோர் உள்ளனர்.

இராணுவ முகாம் ஒன்றில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 850 பிள்ளைகளைப் பொறுப்பேற்க பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனால், இப்பிள்ளைகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இவர்கள் எங்கே இருக்கின்றனர். உயிருடன் இருக்கின்றனரா என்றும் தெரியவில்லை.

மாறாக இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆயிரமாக இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமும் எமது உடைமைகளையும், எம்மையும் அழித்தவர்கள் இப்போது எமது வளங்களையும் சூறையாட ஆரம்பித்துவிட்டனர்.

காங்கேசன்துறையில் இருந்து பல கோடி ரூபா பெறுமதிமிக்க சுண்ணக்கற்கள் லொறி லொறியாக கடத்தப்படுகின்றன. இதனை செய்வது யார்?

இவ்வாறு கடத்தப்படுவது அரச அதிகாரிகளுக்கும் தெரியாதாம். கடத்துவது யார் என்பது அமைச்சர்களுக்கும் தெரியாது. இப்படி எமது வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாக தடுக்கவேண்டும். இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கும் பாதுகாப்பளிக்கும் அவசரகாலச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. இப்படி மாவை சேனாதிராஜா கூறினார்.

Eelanatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.