Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைகத் தடுத்து வைத்திருப்பது சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைகத் தடுத்து வைத்திருப்பது சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமானது

. போரில் ஈடு பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையேல் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு வலி யுறுத்தி உள்ளது சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் அமைப்பு அவசர காலச் சட்டத்ததைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த அமைப்புக் கண்டித்துள்ளது.

சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கடந்த வருடம் போர் முடிவடைந்த காலத்தில் சரணடைந்த கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் எண்ணாயிரம் பேர் வரை இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தடுப்பு முகாம்கள் உலகிலேயே பெரியளவில் நிர்வாகம் செய்யப்படும் தடுப்புக் காவலாக அமைந்துள்ளது.

சுதந்திரத்துக்கான உரிமை, நியாயமான விசாரணைக்கான மற்றும் நியாயமான சட்ட ரீதியான வழி முறைகளை அவர்களுக்கு வழங்குவது போன்றவைகளை இந்தத் தடுப்புக் காவல் தடுக்கிறது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பற்றது

போர் முடிந்த நிலையில் களத்தில் இருக்கும் நிலைமைகள் நாட்டின் இருப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகக் கருதமுடியாது. எனவே, அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதனை நியாயப்படுத்த முடியாது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒரு சட்ட ரீதியான காருணியத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்தப் புனர்வாழ்வு முயற்சிகளுக்கான சர்வதேச உதவி, இந்த நடவடிக்கையை சர்வதேச சட்டங்கள் மற்றும் தரவுகளின்படியே எடுக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தரப்படுத்தப்படுதல் வேண்டும்.

இவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லாது சர்வதேச உதவிகள் தரப்பட்டால் அது நியாயமற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்குச் சர்வதேச சமூகம் ஒத்திசைவதாகச் செல்லும் ஆபத்து இருக்கிறது.

விசாரணை இல்லாது தண்டணையா?

இலங்கையில் இவ்வாறான தடுப்புக் காவல்கள் கைது அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வு நடவடிக்கை என்ற பெயரில் இரண்டு ஆண்டுகள் வரை எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்படாமல் தடுத்து வைக்கப்படுவதை அவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ விதிக்கப்படும் விசாரணை அல்லாத தண்டனையாகும்.

எனவே, இலங்கை அரசு அவசரகாலச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்ள சர்வதேச சட்டத்துக்கு ஒவ்வாத பிரிவுகளை விலக்கிக் கொள்ளவேண்டும். அல்லது விலகிக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். அல்லது அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3995&Uthayan1285811383

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.