Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லலிதாவைப் போன்ற முன்னாள் பெண் போராளிகள் படும் இன்னல்களைச் பெருமளவில் சொல்லிக் கொண்டே போகலாம் ‐ தமிழில் ஜீரிஎன்

Featured Replies

லலிதாவைப் போன்ற முன்னாள் பெண் போராளிகள் படும் இன்னல்களைச் பெருமளவில் சொல்லிக் கொண்டே போகலாம் ‐ தமிழில் ஜீரிஎன்

அப்போது லலிதாவுக்கு 23 வயதாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் மிக உள்புறமாக அமைந்துள்ள பெரிய புல்லுமலை அவருடைய கிராமம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வசித்த ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டுக்கொருவரை கடந்த 3 தசாப்தங்களாக தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்காக அவர்கள் நடாத்தி வரும் போராட்டத்துக்கு ஒரு பிள்ளையைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தது. அவ்வடிப்படையில் தனது இளைய சகோதரியை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதைத் தவிரிப்பதற்காக லலிதா அதில் இணைய வேண்டியவளானாள்.

போராட்டத்தில் இணைந்து 9 வருடங்கள் பெண்புலிகள் குழுவொன்றுக்குத் தலைமையேற்றிருந்த லலிதா 2004ஆம் ஆண்டு சுகவீனமுற்றிருந்த தனது தாயாரைப் பராமரிப்பதற்காக அதிலிருந்து விலக முடிவு செய்து தப்பியோடினார். தான் இலங்கை இராணுவத்தாலோ அல்லது விடுதலைப் புலிகளாலோ அடையாளம் காணப்படும் பட்சத்தில் தனது குடும்பத்தை அபாயத்தில் ஆழ்த்திவிடக் காரணமாகி விடுவோமோ என்கிற அச்சத்திலேயே அவர் அந்நாட்களைக் கடத்த வேண்டியிருந்தது.

"நான் ஒவ்வொரு நாளும் எனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி இருந்தது. இதனால் என்னை எவராரும் பின்தொடர முடியாமல் போய்விட்டது" என்று அவர் கூறுகிறார். இப்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகரில் ஒரு சிறிய வருமானத்தைத் தரும் தற்காலிகக் கடை ஒன்றை நடாத்திக் கொண்டு அவருடைய தாயாருடன் பாதி கட்டி முடிக்கப்படாத ஒரு வீட்டில் வசித்து வருகிறார் லலிதா.

உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கையில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களில் மூன்றிலொரு பங்கினரே தொழிற்திறன் வாய்ந்த இளையவர்கள். அதுவும் மட்டக்களப்பு சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் மீன்பிடி மற்றும் நெற்செய்கை போன்ற மரபார்ந்த வாழ்க்கைக்கான தொழில்களிலேயே ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் லலிதாவைப் போன்ற பெண்கள் படும் இன்னல்களைச் பெருமளவில் சொல்லிக் கொண்டே போகலாம். மட்டக்களப்பில் உள்ள முன்னாள் போராளிகளுடைய பெரிய பிரச்சினை என்னவென்றால், மட்டக்களப்பின் பழமைவாதக்குடியுரிமைச் சமூகம், இயக்கத்தில் இந்தப் பெண்கள் இருந்தபோது கற்றுக்கொண்ட திறன்களைப் பயன்படுத்த அவர்களை அனுமதிப்பதில்லை என்பது தான் என்கிறார் பிரித்தானிய லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான சொனி இன்பராஜ்.

அவர் மட்டக்களப்பிலுள்ள முன்னாள் பெண்போராளிகள் தமது சமூகத்துடன் மீள இணைந்து கொள்வது பற்றிய ஆய்வொன்றை அண்மையில் செய்து முடித்திருந்தார். முன்னாள் பெண் போராளிகள் தச்சுத் தொழில் செய்வதையோ, அல்லது மேசன் தொழில் செய்வதையோ, அல்லது கணணி திருத்தும் தொழில் செய்வதையோ விட வீட்டு வேலை உதவியாளராக அல்லது எப்படி தைப்பது என்பதைக் கற்றுக் கொள்பவராக இருப்பதையே சமூகம் விரும்புகிறது.

அதேநேரம், இந்தப் பெண்கள் எவ்வாறோ தமக்கிடையே உதவக்கூடிய உறுதியான ஒரு வலையமைப்பை தற்போது உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு போருக்குப் பின்னைய காலகட்டத்தில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வீட்டின் தலைமைப் பாத்திரத்தையும் அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அதேநேரம், முன்னாள் போராளிகள் என்கிற ஒரு அபகீர்த்தி சமூக மட்டத்தில் அவர்கள் குறித்து நிலவுவதாக நான் நினைக்கவில்லை என்கிறார் சொனி இன்பராஜ். அவர்களுள் பெரும்பாலானவர்கள் புலிகளின் ஆதரவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே என்றும் அவர் சொல்கிறார். ஐ.எம்.ஓ. எனப்படும் குடிப்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் 660 முன்னாள் போராளிகளுக்கு உதவியது. அவர்களுள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கில் அரச ஆதரவு நிறுவனங்களில் அவர்களை இணைத்து ஒரு ஆபத்தான ஒரு வேலையை துணிகரமாக முன்னெடுத்திருந்தது.

இந்த முன்னாள் போராளிகள் அரசின் மறுவாழ்வு மையங்களிலிருந்து வெளியேறியவுடன் எங்களிடம் வருவார்கள். நாங்கள் அவர்களுடைய அபிலாஷைகளையும், தேவைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவையான உதவிகளைச் செய்கிறோம். உதாரணமாக வியாபாரத்திற்கான உதவிகள், குடியியல் கற்கைப் பயிற்சிகள், தொழிற்பயிற்சிகள் எனப் பலவகை உதவிகளைச் செய்கிறோம்.

ராசேந்தி கிழக்கின் கிராமப் பகுதியாகிய திகிலிவெட்டையைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்சேர்ப்புக்காய் அவரது வீட்டுக் கதவைத் தட்டியபோது அவருக்கு வயது பதின்மூன்று. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய கட்டுப்பாட்டிலிருந்த பகுதியாகிய வாகரையில் நடந்த கடுமையான யுத்தத்தில் தப்பிப் பிழைத்தவர் ராசேந்தி. இந்தப் போரில் அவருடைய நண்பி உட்பட எண்பது புலிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

ராசேந்தி குண்டுத் துகள்களினால் தாக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் ஒரு உலோகம் எலும்புக்குப் பதிலாக அவரது தலையின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.

"நான் வீட்டுக்குத் திரும்பி வந்த போது பெருத்த அவமதிப்புக்கு ஆளானேன். என்னுடைய பழைய நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னுடன் கதைக்கவேயில்லை. என்னுடன் சேர்ந்து பழக அவர்கள் அஞ்சினார்கள்." இலங்கை இராணுவத்தால் அடையாளம் காணப்பட்டதும் ராசேந்தி வீட்டை விட்டு ஓடி மட்டக்களப்பு நகருக்கு அருகில் மூன்று வருடங்களாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். "நான் பெரிதும் அச்சமுற்றிருந்தேன்" என்கிறார் அவர்.

தற்போது 22 வயதாகும் அவர் சொல்கிறார், திருப்பிக் கிடைக்காத பாடசாலை வாழ்க்கையை தான் இழந்து விட்டதாக. தற்போது ஒரு வேலையைத் தேடிக் கொள்வதற்காக மட்டக்களப்பில் இருக்கும் சர்வோதய தொழற்பயிற்சி நிலையத்தில் இணைந்து ஆறு மாத பேக்கரி பயிற்சியைப் பெற்று வருகிறார்.

சர்வோதய அமைப்பின் நிகழ்ச்சி நிரல்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியான மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை உந்தித்தள்ளும் வகையில் தொழிற்துறைப் பயிற்சி நெறிகளான மின்சாரப் பணியாளர்கள், குழாய் நீர்ப் பணியாளர்கள், அழகுக்கலைப் பணியாளர்கள், உணவு தயாரிப்பாளர்கள், சமூக தலைமைத்துவப் பயிற்சி போன்றவற்றைக் கொண்டதாக இருந்து வருகிறது.

இன்றுவரையில் சுமார் இருநூறு பேர் வரை இந்தப் பயிற்சி நெறிகளில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுடைய தொழிற்திறமைக்கு தனியார் துறையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது என்கிறார் சர்வோதயத்தின் நீண்டகால இணைப்பாளரான ஈ.எல்.ஏ.கரீம்.

கடந்த முப்பது வருடங்களாக நீடித்த போரில் ஏராளமான இளைஞர்கள், தமது எதிர்காலத்துக்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வந்துள்ளார்கள். உடல் உளரீதியாகவும் பெரும் சவாலை அவர்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு தாயும் இல்லை தந்தையும் இல்லை. சகோதரர்களுமில்லை. கொழும்பிலுள்ள இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்தளவிலான தொழிற்றிறனே அவர்களிடமிருந்தது. ஆனால், இப்போது நாங்கள் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கி வருகிறோம் என்கிறார் அவர்.

நன்றி : ஐசுஐN

தமிழில் ஜி.ரி.என்.

www.globaltamilnews.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.