Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ‘நாடு கடந்த தமிழிழ அரசு’ பாதை மாறிப் பயணிப்பதை அனுமதிக்கமாட்டார்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Posted on October 4, 2010 by eelanaaduபாரிஸ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அமர்வில் கலந்துகொண்ட பின்னர், அங்கு நடந்த உண்மைகளை அறிக்கையாக வெளியிட்ட அதே தினத்தில் கே.பி. குழுவின் ‘தாய்நிலம்’ பத்திரிகை தன் சக்திக்கு உட்பட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

‘ஓப்பரேசன் இறக்கை வெட்டலை தோற்கடித்து வெற்றிநடைபோடும் நாடுகடந்த தமிழீழ அரசு’ என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் ஒரு உண்மையை மறைக்காமல் ஒப்புக்கொண்டுள்ளது. ’32ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆபத்து இருக்கிறது என்று செல்லிக் கொண்டு களமுனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா என்பதை அந்த உறுப்பினர் ஒரு கணம் மனதில் நினைத்துப் பார்த்திருந்தால் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்யும் முடிவை தவிர்த்திருப்பார்.’ என்று தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அந்த மண்டபத்தில் மாவீரர் ஆகியிருக்க வேண்டும் என்ற கருத்துப்படத் தெரிவித்துள்ளது.

எங்கே ஒரு ஜனநாயக அமைப்பு வன்முறையைக் கையில் எடுக்கின்றதோ, அங்கே ஜனநாயகம் தோற்றுப் போகின்றது. அமெரிக்காவில் இடம்பெற்ற வன்முறை தற்செயலானது அல்ல. நிலமை தமக்குச் சாதகமாக அமையாவிட்டால், வன்முறை மூலம் அதனைக் குழப்பும் நோக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒன்று. கனடாவிலிருந்து சிவராசன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வன்முறைக் குழுவொன்று கூலிப் படையாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அந்த வன்முறையாளர்களே கனடிய மக்கள் பிரதிநிதியான ஈசன் குலசேகரம் மீது தாக்குதலை நடாத்தியது. அமெரிக்க அமர்வில் கலந்துகொண்ட நோர்வே மக்கள் பிரதிநிதி முரளி அவர்கள் மீதே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது. அது பின்னர் திசைமாறி ஈசன் குலசேகரத்தின் மீதான தாக்குதலாக அமைந்துவிட்டது.

இந்தச் செய்தி, பாரிஸ் அமர்வில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தத் தாக்குதல் சம்பவம் முரளி மீதானதாகக் கூறப்பட்டது. யார் தாக்கப்பட்டாலும் அமெரிக்க அமர்வில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வெளிநடப்புச் செய்யாமல் அங்கே பலியாகி ‘மாவீரர்’ ஆகியிருக்க வேண்டும் என்று கே.பி. குழு தெரிவித்திருப்பது அவர்களது கொடூர மனங்களைப் பிரதிபலித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் கலந்து கொண்ட பலர் சிலரால் பணயக் கைதிகளாக இருந்து நிர்ப்பந்தத்தின் பெயரில் செயல்பட்டதைப் பார்க்க முடிந்தது. தமது கட்டுப்பாட்டில் இல்லாத பிரதிநிதிகளிடம் மிரட்டல் பாணியிலான விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன. சபாநாயகராகப் பணியாற்றிய கனடிய பிரதிநிதியான பால்ராஜன் அவர்களும் கே.பி. தரப்பினரால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தாய்நிலம் பத்திரிகையின் இணையத் தளத்தின் இந்தக் கட்டுரையில் ஒரு ஜனநாயக தத்துவமும், மரபும் போதிக்கப்பட்டுள்ளது. ‘ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் உண்டு. இதுவே உலகெங்கும் உள்ள ஜனநாயக நடைமுறை என்று பலரால் எடுத்துக் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தம் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனத்தை தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்து உறுதிப்படுத்தவார்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பும், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று இவர்கள் வாதிட்டதும் அதில் விடாப்பிடியாக நின்றதும் 1949 ல் மலையக மக்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என்று வாக்களித்த மேலதிக்க மனோபாவம் விமானம் ஏறிவந்து புலத்தில் கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.’ என்று அந்த ஜனநாயக மரபு போதிக்கப்படுகின்றது.

இந்தக் கட்டுரையாளர் வசதியாக ஒன்றை மறந்துவிட்டார். ’20 பிரதிநிதிகளை, தெரிவு செய்யும் பிரதமரே நியமிப்பார்’ என்ற திரு. ருத்ரகுமாரன் அவர்களது முடிவு, அவரது ஏகபோக நடைமுறைக்கே வழிவகுக்கும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களது அச்சமாக இருந்தது. பிரதமரால் தெரிவு செய்யப்படும் அந்த 20 உறுப்பினர்களும், அவரது அத்தனை தப்புத் தாளங்களுக்கும் ஆதரவு வழங்கும் நிலை உருவாகாது என்று யாருக்கு யார் உத்தரவாதம் வழங்குவது? மலையகத் தமிழர்களது உரிமைக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டதை இந்த 20 பேருடைய தெரிவுடன் ஒப்பிடுவது இந்தக் கட்டுரையாளர் எந்த அளவிற்கு அரசியல் அறிவு அற்றவராக உள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தமிழீழ மண்ணினதும், மக்களினதும் விடுதலை நோக்கிய களம் மட்டுமே. அதை நோக்கிய பயணம் தடுமாறித் தலை குப்புற விழுந்துவிடக் கூடாது என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது அக்கறையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமரால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் நன்றிக் கடனோடு பிரதமரின் பக்கவாத்தியங்களாகச் செயல்பட்டு, அவரது தவறான முடிவுகளுக்கான தங்களது வாக்குப் பலத்தைப் பிரயோகிப்பார்களாக இருந்தால் அதன் விழைவு என்னவாக இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றில் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரச அவையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், இல்லையேல் அவர்கள் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது அச்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையாளர் புரிந்து கொள்ளாத இன்னொரு விடயத்தையும் தெளிவு படுத்த வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு உண்டு. ‘பொதுவாக அரசியல் அமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அதி உயர்ந்த சட்டமாகும். இந்தச் சட்டத்தை தனி நபர்;களோ குழுக்களோ தங்களது சுயலாபத்துக்காக தவறாகப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டத்தை மாற்றுவது திருத்துவது இல்லாமல் செய்வது எதுவாக இருந்தாலும் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் தேவை என்ற ஒரு விதி அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இது அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான ஒரு அடிப்படை விதி என்று கூடச் சொல்லலாம். ஆனால் இந்த விதியை மாற்றி பெரும்பான்மை பலம் அதாவது 51 க்கு 49 என்ற அடிப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட பகுதியினர் வாதிட்டனர். இதன் நோக்கம் இந்த அரசையும் பாராளுமன்றத்தையும் பலம்மிக்க அமைப்பாக உருவெடுக்க விடாமல் தடுத்து வெளியில் இருந்து இயக்கப்படும் பொம்மை அரசாக தொங்கு பாராளுமன்றமாக வைத்திருக்கவேண்டும் என்பதேயாகும். ஆழமாக சிந்தித்துப் பார்த்தால்; மேற்குலகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டு தடை செய்ததற்கான புறநிலைகளை உருவாக்கி கொடுத்ததைப் போல இந்த அரசையும் சர்வதேச பயங்கரவாத பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான ஒரு சதிவலை பின்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.’ என்று கட்டுரையாளர் கே.பி. குழுவின் கைகளைப் பலப்படுத்த முனைகிறார்.

சர்வ வல்லமை கொண்ட பிரதமரும், அவரால் நியமிக்கப்படும் பிரதிப் பிரதமர்களும், மந்திரி சபையும் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் நிலையில், மீதி உறுப்பினர்கள் பல்லாங்குழி விளையாடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது கட்டுரையாளரின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், தமிழ்த் தேசிய உணர்வாளாகள் எவரும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்துப் பேசவில்லை. மாறாக, சர்வ வல்லமை கொண்ட பிரதமரும் அவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களும் தவறான பாதையில் செல்ல முற்பட்டால், அது தமிழ்த் தேசியத்திற்குக் கேடு விளைவிப்பதாகக் கருதினால் அதை அரைப் பங்கு உறுப்பினர்களுக்கு மேலான பலத்தால் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அரச அவைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றே வாதிட்டனர். அதுவே ஜனநாயகத்தைப் பெணும் அத்தனை நாடாளுமன்றங்களின் நடை முறையாக உள்ளது. இந்த இறுதியான, நீதியான கோரிக்கையும் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மாற்றுத் தீர்வு ஒன்றறைத் தேடவேண்டிய கட்டாயத்துள் தள்ளப்பட்டார்கள். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை செய்ததற்கான காரணத்தைக் கூட அறியாத கற்றுக்குட்டியான இந்தக் கட்டுரையாளர் சர்வதேச அரசியல் பேசத் தலைப்படுவது மிக, மிக வேடிக்கையானதாகும்.

இறுதியாக, ‘உறுப்பினார் தங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்துக்கு அல்லது தீர்மானத்துக்கு எதிராக வெளிநடப்புச் செய்வது ஜனநாயக உரிமை. ஆனால் விடுதலைப் புலிகள் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கின்றார்கள் என்று கூறிவிட்டு வெளியேறியது ஆபத்தானதும் சந்தேகத்துக்குரியதுமாகும். உண்மையில் இந்த அவையில் இருந்த சிலரை வெளியில் இருந்து வழிநடத்திய சக்திகள் விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்க முனைகிறார்கள் என்ற செய்தியை யாருக்கோ தெரிவிக்க முற்படுகின்றன என்பது தெரிகிறது’ என்ற கட்டுரையாளர் நடந்த சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் முடிச்சுப்போட்டு, கே.பி. குழுவின் சதிகளை நேர் செய்யப் பார்க்கிறார்.

பாரிஸ் நகரில் இடம்பெற்ற அமர்வின் முதல் நாளே, தமிழ்த் தேசிய உணர்வாளர்களான மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சம் தரும் செய்தி ஒன்று கிடைத்தது. கே.பி. தரப்பு உறுப்பினர் ஒருவர் ‘இவர்கள் எல்லோரும் புலியின் ஆட்கள். இவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும்’ என்று ஜெர்மனியிலிருந்து வந்து அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவருக்குத் தெரிவித்துள்ளார். அவரது கூற்றை உறுதி செய்வது போல், அமெரிக்காவில் நடைபெற்ற அமர்வுக்காகக் கனடாவிலிருந்து அழைத்து வரப்பட்ட அடியாட்கள் அங்கு கலந்துகொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளாகளை அச்சுறுத்தியதுடன், ஒருவர் மீது தாக்குதலும் நடாத்தியுள்ளார்கள். இந்த நிலையில், பாரிசில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமது சுய பாதுகாப்புக் கருதி, விடுதலைப் புலிகளது பெயரை உச்சரித்தார்கள் என்பதே உண்மையானதாகும். அந்த உறுப்பினர்களில் எவரும் மாவீரர் ஆகும் நோக்கத்துடன் அமர்வில் கலந்து கொள்ள வந்திருக்கவில்லை.

இவர்கள் என்னதான் சொன்னாலும், எழுதினாலும் தேசியத் தலைவர் பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ‘நாடு கடந்த தமிழிழ அரசு’ பாதை மாறிப் பயணிப்பதை அனுமதிக்கமாட்டார்கள். சிங்கள அரசின் ‘ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 2′ நடவடிக்கையை முறியடிப்பதுடன், அதில் சிக்கியுள்ள திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களையும் மீட்டு எடுப்பார்கள்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களான

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்

மக்கள் பிரதிநிதிகள்

http://thamileelam.wordpress.com/2010/10/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/

http://thamileelam.wordpress.com/2010/10/04/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/

Edited by சித்தன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஈழ அரசாங்கம் தமிழ் ஈழத்தை நோக்கி செல்லாமல் எங்கே செல்லமுடியும்? யாரவது எத்தியோப்பியாவுக்கு போக பிளான் பண்ணினமே?

அது சரி, எந்த நாட்டிலாவது அரசாங்கம் ஒன்று கூடும் போது பாதுகாப்பு இல்லாமலா செய்வார்கள்?

இதை ஒழுங்கு செய்தவர்களால் நான்கு செக்யூரிட்டி கார்டுகளை வேலைக்கு அன்று அமர்த்த முடியவில்லையா?

ஸ்ரீ லங்கா காரனின் நிறைய கைத்தடிகள் உலாவும் போது நாமும் முன் எச்சரிக்கை முத்தண்ணாக்களாக வேண்டும் இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.