Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாதஸ்வரக்கலைஞர் பஞ்சாபிகேசன் கௌரவ கலாநிதி பட்டம் பெறுகிறார்!

Featured Replies

ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வரக்கலைஞர் சாவகச்சேரி கே.எம். பஞ்சாபிகேசன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று 06.10.2010 நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கிறது. தமது இனிய நாதஸ்வரஇசையால் ஈழத்தமிழ் மக்களுக்குப் பெருமை தேடித் தந்த இந்த ஆற்றல் மிகு கலைஞர் பெருமைப்படுத்தப்படுவதனையிட்டு நாமும் பெரு மகிழ்வடைகிறோம். அவரைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

பட்டமளிப்புவிழா முடிவடைந்த பின்னர், இன்று மாலை இக் கலைஞரை வாழ்த்திப் பாராட்டும் நிகழ்வொன்றும் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் யாழ் தவில் நாதஸ்வரக்கலைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்வில் வயலின் வித்வான் ஆர். இராதாகிருஸ்ணனின் வயிலின் சோலா நிகழ்வொன்றும் நடைபெறுகிறது.

ஒரு மக்கள் சமூகம் பெருமைப்படக்கூடிய கலைஞர்களை வாழ்த்திப் பாராட்டுவது அம் மக்கள் சமூகத்தின் சமூகப்பொறுப்பாகும்

உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப் பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சுந்தரம்பிள்ளை. அவர்கள் பிரபல தவில்வித்துவான் ஆவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1934 ஆம் ஆண்டளவில் பிர பல நாதஸ்வர வித்துவான்களான சண் முகம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, ராமைய்யாபிள்ளை, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசைப் பயிற்சியினைப் பெற்றார்.

தொடர்ந்து தனது இசையாற்றலை வளர்த்துக் கொள்வதற்காக தமிழகம் சென்ற இவர் நாதஸ்வர இசை மாமேதைகளான திருவாவடுதுறை ராஜரட்ணம்பிள்ளை, “கக்காயி” நடராஜசுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் பயின்றார். பின்னர் ஐயம்பேட்டை வேணுகோபால்பிள்ளையிடம் பயிற்சி பெற்று பாரம்பரிய மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினை நன்கு பயின்று கொண்டார்.

தனது 14வது வயதில் முதல் நாதஸ் வரக் கச்சேரியை நிகழ்த்திய இவர் அன்றுதொட்டு படிப்படியா கப் பெரும் புகழ்கொண்டார்.

அளவெட்டி மாணிக்கம் இரத்தினம் அவர்களைத் தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட இவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைக ளும் உள்ளனர். இவரது புதல்வர்களான நாகேந்திரம் அவர்களும், விக்னேஸ்வரன் அவர்களும் தந்தையின் தடம்பற்றி நாதஸ்வரத் துறையில் புகுந்து வித்து வான்களாய் விளங்கி வருகின்றனர்.

தமிழகத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான்களான திருவாரூர் இலட்சியப்பா, திருநெல்வேலி பிச்சை யப்பாகம்பர், மாசிலாமணி போன்றோரோடும் நம் நாட்டின் பிரபல கலைஞர் களான நல்லூர்சிவாசாமி, அளவெட்டிபத்மநாதன் போன்றோரோடும் இணை ந்து பல கச்சேரிகளை இவர் வாசித்துள்ளார். உல கப்புகழ்பெற்ற தவில்மேதை தட்சிணாமூர்த்தி அவர்களு டன் இணைந்து இவர் செய்த கச்சேரிகள் மறக்க முடியாதவை.

இவர் அகில இலங்கை கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருதினையும், கலாசார அமைச்சின் “கலாபூஷணம்” விருதினையும், யாழ். இந்து கலாசார சபையின் “சிவகலாபூஷணம்” விருதினையும் பெற்ற வராவார். 1998 இல் வடகிழக்கு மாகாண சபையினால் இவருக்கு ஆளுநர் விருதும் வழங் கப்பட்டது.

திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தினால் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” எனும் பட்டமும், கல்வி அமை ச்சினால் “நாதஸ்வர கானவாரிதி” எனும் பட்டமும், இந்து கலாசார அமைச்சினால் “ஸ்வரஞானதிலகம்” எனும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டன. மலேசியா, சிங்கப்பூர், பாங்கொக், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் இவரது இசைக்கச்சேரிகள் நிகழ்ந்துள்ளன.

தனிமனித ஒழுக்கம், பண்பாடு, தன்னடக்கம், ஆகிய நற்பண்புகளின் உறைவிடமாய்த் திகழும் பஞ்சாபிகேசன் அவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகம் இவ்வாண்டு கெளரவ கலாநிதி விருதினை அளிப்பது இசை ரசிகர்கள் அனைவரதும் மனங்களையும் மகிழ்வுறச் செய்துள்ளது.

http://www.thaynilam.com/news/news_detail.php?id=2002

post-2907-044482200 1286380372_thumb.jpg

நானும் தவில், நாதஸ்வர இசைக்கு அடிமை. கலைஞருக்கு எமது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.