Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்திருக்க வைக்கும் உத்தியே!

Featured Replies

காத்திருக்க வைக்கும் உத்தியே!

போர் முடிவடைந்து விட்டது. ஆனால் தமிழர் களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இந்த நாட்டின் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் முடிவடையவில்லை, ஒடுக்கு முறைகள் தொடர்கின்றன.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் நாட்டில் வாழும் மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்று பலவாறாக அரசாங்கத் தரப்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் போர் முடிவுற்று 15 மாதங்கள் கடந்தும் இனப்பிரச் சினையைத் தீர்ப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை.

இந்த நிலையை நீக்கி, அரசாங்கத்துக்கும், சிறுபான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளுக்கும், அவர்கள் தலைவர்களுக்கும் இடையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண் டும்.

புத்திஜீவிகள், கல்விமான்கள் அடங்கிய முற்போக்கு அரங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கலாநிதி தேவநேசன் நேசையா, பேராசிரியர் சிவகுரு கணேசன், லயனல் குருகே, நிகால் நுகவெல, மஞ்சுளா கஜநாயக்கா, ஜனாப் சவ்ராஸ், ஜனாபா ஜெரிமியா, ஈ .விவேகானந்தன் மற்றும் பலர் உள்ளடங்கிய புத்திஜீவிகள் மேற்குறிப் பிட்ட கருத்துக்களை கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

அதிகாரப் பரவலை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டாது, அது குறித்து கிஞ்சித் தேனும் கவலைப்படாது தனது சொந்த நிகழ்ச்சி நிரலைச் செயலாக்குவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்திவருகின்றது.

இனப்பிரச்சினை என ஒன்றை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதில் அரசுக்கு உணர்வுபூர்வமான விருப்பம் இல்லை. அதனை, தான் நினைத்திருக்கும், வகுத்திருக்கும் எதிர்மறையான வழிமூலம் முடிவுக்குக் கொண்டுவரவே அரசு விரும்புகிறது.

அரசுத் தலைவரின் ஆட்சிக்காலம் மேலும் நீடிக்கப்போகிறது. அதாவது, மேலும் ஆறு வருடங் களுக்கு அவர் நாட்டின் தலைவராகப் பதவி வகிக்க உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சி மன்றத்தில் கால் பதித்த அரசாங்கத்தையும் இன்னும் ஆறு வருடங்க ளுக்கு அசைக்க முடியாது.

ஆகையால், அரசாங்கம் எதனைச் செய்ய நினைக்கிறதோ அதனைச் செய்துதான் தீரும். எந்த வகையிலும் எவரும் அசைக்க முடியாது என்பதால், தான் செய்து கொள்ளும் எதனையும் மக்கள் ஏற்றாக வேண்டியது தான் என்ற கர்வம் அதற்குத் தோன்றுவது இயல்பே.

இந்த வகையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது அதன் அடிப்பெட்டியில் வைக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த விவகாரத்தைத் தாம் மறந்துவிடவில்லை என்று வெளிக்காட்டிக் கொள்வதற்காக காலத்துக்குக் காலம் சில கருத்துக்களையும் தீர்வுக்கான வழிமுறை களையும் வெளிப்படுத்திவரும். அவ்வளவுதான்.

எத்தனை புத்திஜீவிகள், தேசபக்தர்கள் ஒன்று சேர்ந்தாலும் அவர்கள் சொல்வது அரசின் காதில் விழாது. ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளிவிடும் சூத்திரத்தை அல்லது சூக்குமத்தை அது கைக்கொள் ளும். தாம் நினைத்த ஓர் அர்த்தமற்ற, பிரச்சினையை மேலும் வளர்க்கும் வடிவத்திலேயே தீர்வை முன் வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

அவ்வாறு இல்லையென்றால் இந்தப் பதினைந்து மாத காலத்தில் உருப்படியான அர்த்தபுஷ்டியுள்ள தீர்வுக்கான ஓர் எண்ணக்கருவையேனும் அரசாங்கம் வெளியிட்டிருக்கும்; செயலளவில் அதற்கான முதற் படியிலாவது ஏறியிருக்கும்.

அவ்வாறின்றி, தமிழ் மக்களின் பிரதேசங்களை இயன்றவரை, எவ்வளவுக்கு அதிகமாக சிங்களப் பிரதேசங்களாகக் கபளீகரம் செய்யலாம், அதற்குப் பக்க பலமாக அவற்றுக்கு இராணுவ முகாம்கள் குடியிருப் புக்கள் மூலம் காவல் வேலி போடலாம் என்ற திட்டங் களை தனக்குள்ள பலத்தைக் கொண்டு நிறைவேற்றிய பின்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து வாய் திறக்கும்.

அவ்வேளையிலும், அப்போதைய சமகால களநிலைமைக்கு ஏற்பவே ஒரு தீர்வை உற்பவிக்கும். இந்தியா வுக்கும், இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறைகாட்டும் ஏனைய நாடுகளுக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தனக்கு அக்கறையுண்டு எனக் காட்டிக் கொண்டு அல்லது கூறிக்கொண்டு காலத்தை வாங்கி, தான் நினைத்ததைச் செய்து முடிக்கும். இனப்பிரச்சினைக்கான தீர்வை றப்பர் போன்று எத் தனை வருடங்களுக்கு இழுத்துக்கொண்டு போக முடி யுமோ அந்தளவுக்கு நீட்டிச் செல்வது, அதற்கி டையில் தான் வகுத்துள்ள திட்டத்தை நிறைவேற்றுவது என்ற வாய்ப்பாட்டை அரசு தொடரும்.

நான் செய்ய நினைப்பதைத் தான் செய்வேன். வேறு எவரின் ஆலோசனைகளுக்கோ அல்லது சிபார்சுகளுக்கோ செவிசாய்க்க வேண்டிய தேவை எனக்கில்லை என்ற பாதையிலேயே அரசு பயணிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த நாட்டில் வாழும் தமிழர்களும் சரி, முஸ்லிம் களும் சரி, புத்திஜீவிகள் மற்றும் நாட்டு நலன் நாடுவோ ரும் சரிஅரசின் மனதை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத் தில் மாற்றமுடியாது. அது, தான் விரும்பிய பாதையிலேயே பயணிக்கும்.

[ உதயன் ] - [ Oct 07, 2010 04:00 GMT ]

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வேளையிலும், அப்போதைய சமகால களநிலைமைக்கு ஏற்பவே ஒரு தீர்வை உற்பவிக்கும். இந்தியா வுக்கும், இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறைகாட்டும் ஏனைய நாடுகளுக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தனக்கு அக்கறையுண்டு எனக் காட்டிக் கொண்டு அல்லது கூறிக்கொண்டு காலத்தை வாங்கி, தான் நினைத்ததைச் செய்து முடிக்கும். இனப்பிரச்சினைக்கான தீர்வை றப்பர் போன்று எத் தனை வருடங்களுக்கு இழுத்துக்கொண்டு போக முடி யுமோ அந்தளவுக்கு நீட்டிச் செல்வது, அதற்கி டையில் தான் வகுத்துள்ள திட்டத்தை நிறைவேற்றுவது என்ற வாய்ப்பாட்டை அரசு தொடரும்.

இதை நான் எப்பவோ சொன்னேன்... சிங்களம் பிச்சையெடுக்க வைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? அது குறித்து ஈழத்தோழர்கள் சிந்திக்க வேண்டும் ... இப்ப ஈழத்தோழர்களை காட்டி புணர் உதவி புணரா உதவி என பிச்சை எடுக்கும் டிரெண்டு ரொம்ப நாளைக்கு எடுபட போவதில்லை... பிச்சை போடுபவர்களுக்கும் திரும்ப திரும்ப பிச்சை கேட்டால் சலித்து போகும்... எனவே இனி வருங்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள ஈழத்தோழர்கள் தங்கள் பணம் சிங்கள கைத்தடிகளின் வரி வட்டி கிஸ்தி எதுவும் இன்றி(வாழ்வதே இதில் தான் ) ... நேரடியாக தங்கள் உறவுகளுக்கு சென்று சேர்க்கும் முறைக்கான... தேவையை உணர்ந்து செயல்படவேண்டும்.. (பெரும்பாலன நாடுகளில் இந்த சேவை நிறுவனங்களுக்கு ... தொண்டு நிறுவனங்களுக்கு வரி இல்லை என்பதினை கருத்தில் கொள்க: முள்ளை முள்ளால் எடுக்குக) நாட்டை கட்டி எழுப்ப ராஜ பக்சே நல்ல அல்ரா டெக் சிமெண்ட் யூஸ்பண்ணி கட்டியெழுப்பி கொள்வார்..(உபயம் இந்திய கைத்தடிகல் துணை... அதுவும் 4 மாதத்திற்கு கூட பிரிட்ஸ் நிக்காது என்பது வேறு விசயம்) :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.