Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸின் முயற்சியே பாங்கி மூனின் குழுவை அடக்கியது- இலங்கை அரசு

Featured Replies

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் சிறப்பான நடவடிக்கைகளால் தான் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு காணாமல் போயுள்ளதெனத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க. கொண்டு வந்துள்ள பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சிறுபிள்ளைத்தனமானதும் அரசியல் கேலிக் கூத்தானதுமென்றும் கூறியதுடன் தமது கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஐ.தே.க.வினால் வெளிவிவகார அமைச்சர்

ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

பீரிஸ் மீது ஐ.தே.க. சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் சிறுபிள்ளைத்தனமானவை. அரசியல் கேலிக் கூத்தானவை. எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக ஐ.தே.க.வே சர்வதேச ரீதியில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தது.

ஐ.தே.க.தலைவர் எமது நாட்டிற்கு எதிரானவர்களும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குக் கொடுத்த குற்றப்பத்திரிகையின் விளைவாகவே ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், எமது அமைச்சர் பீரிஸின் சிறப்பான நடவடிக்கைகளினால் அந்த நிபுணர் குழு தற்போது காணாமல் போயுள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது எமது அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு தோல்வி கண்ட ஐ.தே.க. இன்று வெளிநாட்டு அமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை மீண்டும் திருப்ப மேற்கொள்ளும் அரசியல் சதியே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டு 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் அமைச்சர் பீரிஸ் மீது ஐ.தே.க.வினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டமைக்கு அரசியல் சூழ்ச்சியே காரணமாகவுள்ளது. ஐ.தே.க. தொடர்ந்தும் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாகவே செயற்படுகிறது.

பீரிஸ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் ஐ.தே.க. முதலில் தனது கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையுள்ளதா என்று பார்க்க வேண்டும். தொலைநோக்கற்ற அரசியல் முடிவுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள ஐ.தே.க., இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இழக்கப்போகின்றது. பீரிஸ் சர்வதேச ரீதியில் இலங்கையின் கௌரவத்தை உயர்த்தியவர். அவர் அனைத்து நாடுகளினாலும் மரியாதையோடு நோக்கப்படுபவர்.

சீனாவில் பீரிஸ் இருநாட்கள் அதிகமாகத் தங்கியிருந்ததாகக் கூறுகின்றனர். ஐ.தே.க. அரசில் இருந்த பல வெளிநாட்டமைச்சர்களின் அபகீர்த்திகளையும் எம்மால் குறிப்பிட முடியும். எனவே பீரிஸுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுகளையும் நாம் நிராகரிப்பதோடு ஐ.தே.க.வுக்கு எமது கடும் விசனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வீரகேசரி

to: sg@un.org

cc: ngochr@ohchr.org

Subject: Sri Lanka "Hand Washing" - a poem

Dear Secretary General,

Murder cannot be hidden, bodies decompose but skeletons remain;

certainly they can be washed from beach into sea

and stripped clean by carnivorous fish yet the panel requires

just a few examples, sufficient to flesh out a theory of mass

slaughter; satellite shots will be investigated abroad and

conversations conducted with survivors of precarious boats

landing on Christmas Island or dragged into Jakarta. Scale

of killing poses a serious problem for management of disaster;

appointment of soft, suave diplomat to run damage control

at foreign ministry did not succeed. Murder will be revealed.

Macbeth is read also in Sri Lanka; it landed in the culture

before the current lot of customs inspectors; am sure

about staring blind ahead into a bright and unitary future

while keeping North and East pressed down under army boots

will appear misguided, the world will keep reminding Colombo

that Vanni cannot remain a public jail where prisoners live

in tents and beg in thoroughfares during days supervised

by soldiers in watchtowers, on foot patrol, driving past in convoys.

Truly,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.