Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் சீன அரசின் உதவியுடன் நவீன இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. - இராணுவ தளபதி

Featured Replies

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010

சீன அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் நிரந்தர இராணுவ முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வெளிநாட்டு படைகளுக்கு இலங்கையில் பயிற்சியளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் 61 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு இராணுவ தலைமையக மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இராணுவ தளபதி ஜயசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

53 அதிகாரிகள், 1263 படையினர் அடங்கலான இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அங்கிருந்த இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும் தெரிவிக்கையில்;

"இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. 30 வருட யுத்தத்தின் பின்னர் பொருளாதார அபிவிருத்தி யுத்தமே தற்போது ஆரம்பமாகியிருக்கிறது. அந்த வகையில் இலங்கையை அபிவிருத்தியில் உயர்த்துவதும் அதேபோல் படையினரின் நலன்புரி விடயங்களுமே பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த எமது இராணுவத்தினரின் அடுத்த நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இதேநேரம், அமைதியான கால கட்டத்திலேயே இராணுவத்தின் ஒழுக்கத்தை மிகவும் பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் (படையினர்) நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்வதன் மூலமே மனிதாபிமான நடவடிக்கையின் போது நாம் பெற்ற நற்பெயரின் மூலம் கட்டியெழுப்பிக் கொண்ட நன்மதிப்பை மென்மேலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இராணுவத்தினரின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர முகாம்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சீன அரசிடமிருந்து எமது அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள ஏற்கனவே தயார் நிலையிலுள்ள கட்டிட பாகங்களைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலையான முகாம்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேநேரம், தொழில்சார் ரீதியான இராணுவம் என்ற வகையில் தேவையான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கவும் பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையக மட்டங்களில் தொழில்சார் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர உறவுகள் ஊடாக பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின் பிரகாரம் வெளிநாட்டு படைகளுக்கு பயிற்சியளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.