Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை அசினின் அவசர அரசியல் கண் சிகிச்சையால் 10 பேர் பார்வை இழப்பு : பதில் சொல்ல வேண்டும் என தமிழகத்திலுள்ள "மே 17" இயக்கம் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை அசினின் அவசர அரசியல் கண் சிகிச்சையால் 10 பேர் பார்வை இழப்பு : பதில் சொல்ல வேண்டும் என தமிழகத்திலுள்ள "மே 17" இயக்கம் கோரிக்கை.

[Friday, 2010-10-15 05:30:12]

இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் என்று மே 17 இயக்கம் கோரியுள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த �ரெடி� திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார்.

அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார். FILE நடிகை அசின் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலருக்கு கண் பார்வை போய்விட்ட அதிர்ச்சி செய்து வந்துள்ளது.

கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையை இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், சிறிலங்க அரசோடு இணைந்து நடிகை அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வை அழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.

போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமான போர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின் அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர் ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் என்று கூறிய திருமுருகன், இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருமுருகனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக் கொண்டிருக்கும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்க அரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறிய அய்யநாதன், பிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிக ஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்ட இந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஜனநாயக வழியில் இயக்கம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

http://expressbuzz.com/cities/chennai/10-lose-sight-at-asin%E2%80%99s-lankan-eye-camp/215432.html

http://www.seithy.com/breifNews.php?newsID=34412&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“ ஈழ மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் அசின் கண் திட்டம் ”

http://meenakam.com/?p=10826

இந்தி திரைப்பட விழா தோல்வியில் முடிந்ததை அடுத்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு மனித உரிமை மீறலுக்கான சிறப்பு விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் சிங்கள ராஜபக்ச அரசு உலக அளவில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பல புறக்கணிப்புகளை எதிர்கொண்டு வரும் ராஜபக்ச அரசு தன்னை காப்பற்றிக்கொள்ள கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு பலிகடாவாக தமிழில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகை அசின் மாறிப் போனார். நடிகை அசினை பயன்படுத்தி திரைப்பட விருது தோல்வியினை மறைக்க ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கு உதவிகள் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று அதற்கு நடிகை அசின் தனது சுய லாபத்திற்காக துணை போனார். ஐ.நாவின் உதவி குழுக்களை அனுமதிக்காத, சர்வதேச தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காத ஸ்ரீலங்கா அரசு நடிகை அசினை அனுமதித்தது சந்தேகத்திற்கு உரியதாய் இருந்தது. அசின் சொன்னதை போல வெகு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாள் ஒருவரை உள்ளே அனுமதித்தது ஸ்ரீலங்கா அரசு. சர்வதேசத்தில் இருந்து தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களை துன்பதிற்குள்ளாக்கி ஒரு பெரிய சிறைச்சாலையாக மாறி இருக்கும் தமிழர் பகுதிக்குள் அசின் செல்ல முடிந்தது பெரும் ஆச்சர்யம். இந்த இடங்களுக்கு ஐநா சபையின் உயர் அதிகாரிகளே செல்ல முடிவதில்லை என்பதே சந்தேகத்திற்கு உரிய ஒன்று. ஸ்ரீலங்கா அரசின் சதிகளுக்கு துணை செல்பவர்களுக்கே இத்தகைய சலுகைகள் வழங்கபடுவது எல்லோரும் அறிந்த ஒன்று.

இலங்கை அரசின் சதிகளையும் தமிழர்களுக்கு அது செய்யும் இன்னல்களையும் தொடர்ந்து எதிர்த்து வரும் தமிழக திரைப்பட துறையினரை உடைக்க அசினை ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்தியது. பத்திரிக்கை கூட நுழைய முடியாத அந்த பகுதிக்குள் சமூக சேவை செய்வது போன்ற தோற்றத்தை அசின் வழியாக ஏற்படுத்தி, கொலைகாரன் வழியாக மட்டுமே கொலை செய்யபட்டவனுக்கு நியாயம் வழங்க முடியும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே முதல் முறையாக ஒரு கொலைகாரர்களுடன் சேர்ந்து பார்வையை பறித்தவர்களுடன் இணைந்து பார்வை பறிக்கபட்டவனுக்கு சிகிச்சை செய்யும் சதியை சமூக சேவையாக ஸ்ரீலங்கா அரசு இந்திய அரசின் உதவியுடன் செய்தது. அசின் அவர்களும் தான் மாபெரும் உதவி செய்ததாகவும் , தமிழகத்தில் உள்ளவர்கள் ஈழ தமிழர்களிடத்தில் அக்கறை காட்டவில்லை என்பது போலவும் பேசினார்கள் நடந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து உற்று நோக்கிய நாங்கள், இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் திரைப்பட துறையினரை சமூக சேவை செய்ய ராஜபக்ச ஆசியுடனும் அவரின் மனைவியின் துணையுடனும் அவர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட தமிழர்களிடத்தில் கொண்டு செல்லும் திட்டத்தை அறிய முடிந்தது. இதன் பின்னணியில்தான் சரத் குமார் அதை ஆதரித்தும், நடிகர் கருணாஸ் அங்கு சென்று உதவி செய்வதாக சொன்னதும், நடிகர் சூர்யா, விவேக் ஓபராய் சேவையை ஆதரித்ததும் நடந்தது. இதன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதும் மட்டும் அல்லாமல் தமிழர்களை கொண்டே படுகொலையை மூடிமறைக்கும் செயல் முன்னெடுக்கப்பட்டது. அசினின் மீதான திரைப்பட துறையின் தண்டனை நிறைவேற்றப்படாமல் போனதால் அவர் வரும் நவம்பர் மாதம் மேலும் பல திரைப்பட துறையினரை அழைத்து செல்வதாக கூறியும் உள்ளார்.

தமிழர்கள் மீது சிறிதும் கருணை மற்றும் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்ளும் ராஜபக்ச அரசு மற்றும் அவர் குடும்பத்தினர் நடத்திய அந்த கண் சிகிச்சை உதவி முகாமில் சிகிச்சை பெற்ற வறிய தமிழர்கள் தங்கள் கண்பார்வை இழந்து உள்ளார்கள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் கண் பார்வையை திரும்ப பெற வேண்டுமானால் 25000 ரூபாயை செலுத்தி தான் பெற்றுக் கொள்ள முடியும் என்ற சூழலும் அங்கு உள்ளது.

சர்வதேச தொண்டு நிறுவங்களை அனுமதிக்காத சிங்கள அரசுடன் இணைந்து தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட இந்த அவலத்திற்கு நடிகை அசின் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது அல்லாமல் இதற்கு அவர் தமிழக மக்களிடத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. மேலும் வரும் மாதங்களில் இது போன்ற சமூக சேவையை அங்கு நிகழ்த்துவேன் என்று கூறி உள்ளதற்கும் அவர் விரிவான விளக்கம் அளிப்பது தமிழர்களிடம் வணிகம் செய்யும் அவரின் கடமை ஆகிறது. தொடர்ந்து சிங்கள அரசுக்கும் , ராஜபக்ச அரசுக்கும் துணையாக இருந்து தமிழர்களின் வாழ்வை இருட்டு ஆக்குவார் என்றால் அவரின் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழர்கள் தள்ளப்படுவார்கள். மேலும் பல தமிழர்களின் வாழ்வு இருட்டில் தள்ளப் படாமல் இருக்க தமிழ் திரைப்பட உலகினர் இனிமேலும் ஸ்ரீலங்கா அரசின் சதிகளில் மாட்டிக் கொள்ளாமல் மனித நேயத்துடன் உலக மனித உரிமை அமைப்புகளோடும் உலக தமிழினத்தோடும் இணைந்து தமிழர்களின் உரிமை மீட்க எப்போதும் போல கரம் கோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அரசு, இனப்படுகொலை என்று அறியப்பட்ட அரசு, தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற அரசு என்ற ஸ்ரீலங்கா ராஜபக்ச அரசு எந்தவகையிலும் தமிழர்களின் உரிமையை தரப்போவது இல்லை

நன்றி

ஒருங்கிணைப்பாளர்கள்

அசினின் பேட்டி

http://today-world-news-update.blogspot.com/2010/07/blog-post_14.html

தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம். இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை.

ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன். ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறேன்.

அதன்மூலம் இலவச கண் சிகிச்சை நடத்தினேன். அதில் 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் செய்தேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 டாக்டர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினேன்.

ஒரு நோயாளிக்கான லென்சுக்கு ஆன செலவு ரூ.5 ஆயிரம். நான் 10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.

இப்படி இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? நான் இலங்கை தமிழர்களுக்கு உதவியதற்காகவா? இலங்கையில் நடந்த போரில் அம்மா – அப்பாவை இழந்த ஒரு வயது குழந்தை முதல் 16 வயது இளம்பெண்கள் வரை 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன்.

இது தவறா? என்மீது வேண்டுமென்றே சிலர் சர்ச்சையை தூண்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்துகொண்டே சும்மா பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து ஜாப்னாவில் உள்ள தமிழர்களுக்கு உதவலாமே. அங்குள்ள தமிழர்கள், ”அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்?” என்று கண்கலங்கி கேட்கிறார்கள். எனக்கு சரி என்று தோன்றியதைத்தான் நான் செய்திருக்கிறேன். என் மீது சர்ச்சையை தூண்டிவிடுபவர்கள் பற்றி கவலை இல்லை.

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…!!!

ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.

இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான். ஆனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.

சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.

இதை அவர் என்ன நோக்கத்திற்காக செய்தாரென்பது அவருக்குத் தான் வெளிச்சம். ஆனால் இதனால் பத்திற்கு மேற்பட்ட வறியவர்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இதற்கு அசின் பதில் கூற முடியாது தான் அப்படியானால் யார் பதில் கூறுவது. அப்படியானால் செய்த மருத்தவரின் கழுத்தைப் பிடிப்போமா..?

அந்தப் பெரியவரை அணுகிய போது அவர் பல விடயங்களைச் சொன்னார்.

1) எங்களுக்கு அசின் பார்க்க வரும் போது தான் தெரியும் அவர் தான் இதை செய்வீக்கிறார் என்று. முதலில் அரசாங்கம் செய்வதாகத்தான் நான் நினைத்தேன்.

2) இது இந்திய அரசாங்கத்தின் சதி 87 ல் ஒப்பரெசன் லிபரேசன் என்று வந்து எங்களைக் கொன்றார்கள். ராஜீவ் செத்தும் திருந்தல இப்ப இப்படி வாறாங்கள்…

இப்படி பல தமிழில் சொன்னார். அவருடன் சம்பவம் சம்பந்தமாக மேலும் கேட்டபோது “எனக்கு ஒப்பேசன் நடந்து அடுத்த நாள் பலரை விடுவித்தார்கள். எனக்கு முழுதாகப் பார்வை வரவில்லை. எனக்கு மட்டுமல்ல பலருக்கு இதே நிலைதான். என் மகன் தான் எனக்கு துணைக்கு நின்றார் சிலருக்கு யாருமே இல்லை. மருத்துவரைக் கேட்டபோது இது மருந்தின் விளைவு தான் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றார் மறு நாள் ஓரளவு சரி வந்தது ஆனால் பார்க்க முடியாது இருந்தது. இப்போது ஒன்றுமே தெரியவில்லை இப்படி பத்துப்பேருக்கு மேல் இருக்கிறொம். இறுதியாக கிளினிக்கில் டொக்ரர் சொன்னார் லென்ஸ் மாற்றி வைத்துவிட்டார்கள் மாற்ற வேண்டும் 4500 ருபாய் கட்டுங்கள் கட்டினால் ஒப்ரெசனுக்கான டேட் (திகதி) தாறன் என்கிறார். அவரிடம் தனிப்பட செய்தால் 25000 ரூபா தேவைப்படும் கட்டினால் மறு நாளே செய்து கொள்ளலாம்” இப்படிச் சொன்னார் அனால் அவரிடம் 4500 ரூபாய் கூட இப்போது இல்லை போல் தான் தெரிகிறது.

– மே 17 இயக்கம்

http://meenakam.com/?p=10826

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜாப்னாவுக்கு துணிச்சலாக சென்றேன். கடந்த 32 வருடங்களாக அந்த பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை.

ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன். ஜாப்னாவில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன்.

இந்த சினிமாகாரி பிசினின் அட்டாகாசம் தாங்கல.. எல்லாம் நம்ம நெல்லை சிங்கம் "சீப் டிஸ்கசன்" நடத்திய விளைவு இவள் ஆடுகிறாள் கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்த கதையாக அனைத்து துறைகளிலும் மல்லுக்கள் அட்டகாசம் தாங்கல ..

deva-ravana(1).jpg

ராவண பிரபு படம் எடுத்து புலிகளை எவ்வளவு கேவலபடுத்த முடியுமே படுத்தி விட்டார்கள் ... இன்னும் படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.... அது போகட்டும் அவர்கள் ஊர் என்று கூட விட்டுவிடலாம் ...

9gd37r.jpg

அந்தா ராஜிவ் மேனன் படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்... அப்பட்டமாக ஒரு காட்சி வைத்திருப்பார்.. ஈழத்தில் அமைதிபடை வீரரான மம்முட்டி பள்ளி குழந்தைகளுக்கு பிஸ்கெட் வழங்கும் போது புலி உறுப்பினர் மறந்து இருந்து சுட்டுவிடுவார்... எல்லா தீவிரவாத எதிர்ப்பு படங்களிலும் எல்.டி.டி.இ என்ற வசனம் கட்டாயம் இடம் பெறும்....இந்த இன்னோரு மேனன் "கோவணம் ஆயிரம்" படத்தின் ஒரு பாட்டில் ராணுவத்தில் இருக்கும் ஹீரோ... கதாநாயகியுடன் உறவு கொண்டு விட்டு திருமணம் செய்வதாக காட்டி வேறு இருந்தது கௌதம் வாசுதேவ் மேனன்... அப்போதும் புரியவில்லை... உடறுறவு கொண்ட பின் திருமணம் செய்து கொள்வது... மலையாளிகளின் பழக்கமா..என்ன கருமமோ.. எனக்கு தெரியவில்லை.... :D

அதிலும் இந்த கன்னட கைத்தடிகள் படத்தில் கன்னட போலீஸார் வீரவசனம் பேசும் காட்சியில் கட்டாயம் ஜெயநகரில் சிவராசனை சுட்டது கட்டாயம் இடம் பெறும்... அவன் மல்டி நேசனல்(எஸ்.எம் கிருசாணா அப்போ முதல்வர்) கம்பனிகளை கன்னடாவில் கவர் செய்வதே தமிழகத்தில் புலி தொந்தரவு இருக்குது என்று :lol:

இந்த கழிசடைகளாவது பரவாயில்லை.... கொல்டி தாயோளிகளுக்கு என்ன ஆத்திரம் என்று தெரியவில்லை..

http://www.youtube.com/watch?v=hBTeUeXpcsk

மேற்கூரிய இணைப்பை கூர்ந்து கவனித்தால் டெரரிஸ்ட் வரிசையில் கட்டாயம் எல்.டி.டி. இ என்று வரும்... படத்தில் என்று இல்லை.... பாடபுத்தகத்திலும் இதே கூத்துதான்..புலி பயங்கரவாதிகளால் கொல்லபட்டார் என கோவணத்தோடு கிடக்கும் ராஜிவ் படம் தான் இருக்கு..இது குறித்து திரை படங்களை கத்தரி போட்டு பாட புத்தங்களை ஸ்கேன் செய்து தனி பதிவே எழுதலாம் என தோணுது :D இந்த மாதிரி அனைந்திந்திய அளவில் அனைவரும் ஊறவைக்கப்பட்டால் எப்படி மாற்றுவது ?சில கோஸ்டிகள் அடித்துவிடுவது போல மற்ற இன மாக்களை சந்தித்து நம் தரப்பு நியாயங்களை விளக்கினால் சிந்திப்பார்களாம்.. இந்தா புக்கு அச்சடித்து வரவன் போறவனிடம் கொடுத்தால் தூக்கி சமோசா கடையில் எடைக்கு போட்டுவிட்டு பொய்விடுவான் :D

டிஸ்கி:

நியுட்டன் விதிப்படி எந்த வினைக்கும் சமமான எதிர்வினை இல்லை யென்றால் செட்டாகாது... அங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் எடுக்கும் படங்களில் தவறாமல் இந்தியனை நக்கல் செய்யும் காட்சிகள் இடம் பெற வேண்டும். குறைந்த படசம் "அமைதி படையினரின் அட்டகாசங்கள்" எனும் பெயரில் ஆவண படமாவது இனியாவது வெளியிட வேண்டும் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.