Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸ் - வில்லியம் ஹேக் சந்திப்பு

Featured Replies

பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று புதன்கிழமை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கை சந்திக்கவுள்ளார்.

இச்சந்திப்பின்போது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகரமானதும் வெளிப்படையானதுமான விசாரணைக்கான பிரிட்டனின் கோரிக்கையை வில்லியம் ஹேக் மீள வலியுறுத்துவாரென பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகப் பேச்சாளர் கூறியதாக த ரெலிகிராவ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

2009 ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் 8000 - 10000 இற்கிடைப்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,உலகத் தமிழர் பேரவை புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினரால் இந்தப் படங்கள் தமக்கு அனுப்பப்பட்டதாக உலகத்தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டிராதவையென அக்குழுவின் பேச்சாளர் ரெலிகிராப்புக்குக் கூறியுள்ளார். ஆனால், சுயாதீனமான விசாரணையின் மூலமே இதற்கு தீர்வுகாண முடியுமென அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஜே.இமெனுவல் கூறுகையில்;

இந்தப் புகைப்படங்கள் மனிதத்துவத்தை முற்றுமுழுதாகப் பொருட்படுத்தாத தன்மையைக் கொண்டதாக காணப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். இவை உண்மையானவையா என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லையெனவும் ஆயினும், ஐ.நா. வின் போர்க்குற்ற விசாரணைக்கான தேவையை இவை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் குறைந்தது இப்போதாவது ஐ.நா. விசாரணைக்கு இடமளிப்பதற்கு அவர்கள் ஏன் இணங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பேராசிரியர் பீரிஸின் லண்டன் விஜயத்தின்போது புலிகள் சார்புக் குழுவினால் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அத்துடன், இந்தப் புகைப்படங்கள் உறுதிப்படுத்தப்படாதவையென அக்குழு தெரிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் வெளிவிவகார பேச்சாளர் கூறுகையில்;

நாங்கள் தொடர்ந்து நம்பகரமானதும் சுயாதீனமானதும் வெளிப்படைத்தன்மையானதுமான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். மனித உரிமைகள் மனிதாபிமானச்சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறோம். எதிர்வரும் காலங்களிலும் குற்றச்சாட்டுகள் நாட்டை பாதிக்கச் செய்வதுடன், சமூகங்களுக்கிடையில் அதிகளவுக்குத் தேவைப்படும் நல்லிணக்கத்துக்கும் தடையாகவும் அமையும். அதாவது கடந்த காலத்துக்கான பதிலளிக்கும் கடப்பாடு குறித்து நேர்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின் பல வருடங்களுக்கு குற்றச்சாட்டுகள் நாட்டை துருத்திக்கொண்டிருக்கும் என்று கூறியதாக த ரெலிகிராவ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=5393&catid=1

தொடர்புபட்ட செய்தி

பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76660

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.