Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hospital5.jpg

2) யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct....

யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்து கொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தவண்ணமிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமல் இருந்தது. 70க்கு மேற்பட்ட சடலங்கள் மருத்துவமனையின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தது. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரசாங்க அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்திற்கு தொலைபேசியில் தொடர்பபுகொண்டு முறையிட்டதையடுத்து செல் தாக்குதலின் தீவிரங்குறைந்துவிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததால் பாதுகாப்பு பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13ம் திதி செல் தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்தனர். அப்பாவிப் பொதுமக்களுக்குப் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் எதனைப்பற்றியும் தங்களுக்கு எதுவமே தெரியாது என்று இந்தியத் தூதரகம் மறுத்துவிட்டிருப்பதாக இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 21ம் திகதி –

தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் மருத்துவமனையின் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கோட்டையிலிருந்தும் மேலே கெலிகொப்டர்களிலிருந்தும் குண்டு வீச்சுத்தாக்குதலுக்கு இலக்கானது. (யாழ் நகரின் புறக்கோட்டுப் படத்திற்குப் பின்னிணைப்பைப் பார்க்க) காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கட்டத்தின் மேல் ஒரு செல் விழுந்தது. புறநோயாளர் சிகிச்சைப்பிரிவு அதிகாரி நிர்வாகக்கட்டிடத்திற்கு ஓடிச்சென்று அங்கிருந்த மருத்துவநிபுணரிடம் என்ன நடந்து என்று தெரிவித்தார். பிற்பகல் 1.00 மணி அளவில் சாந்தி திரையரங்கு ஒழுங்கை முனையில் இந்தியத் துரப்புகள் காணப்பட்டதாக அம்மருத்துவநிபுணருக்கு தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 மணிக்கு 8ம் இலக்க வார்ட்டில் ஒரு செல் விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது. மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு என்ன ஆலொசனை சொல்வதென்றே உண்மையில் எனக்குத் தெரியவில்லை. மருத்துவமனையிலிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் எல்லாரையும் மருத்துவமனையை விட்டுப் போய்விடுமாறு சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவமும் மிகக்கி;ட்டத்தில் வந்துவிட்டதாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியான பசியாக இருந்ததால்தான் அங்கிருந்து வீட்டுக்குப்போ நான் தீர்மானித்தேன். போய்த்தான் பார்ப்போமே என்ற யோசனையில்தான் நான் கோபத் தீர்மானித்தேன். என் கூட வேலை செய்யும் இன்னொரு மருத்துவரும் பிற்பகல் 2.30 மணிக்கு மருத்துவமனை பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடு போய்ச் சேர்ந்துவிட்டேன்.

பிற்பகல் 4.00 மணியைப்போல மருத்துவமனையில் பெற்றோல் செட் பக்கத்திலிருந்து 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டது. மருத்துவமனையிலிருந்து திரும்பிச் சுடும் சத்தம் எதுவும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் மருத்துவமனையில் எந்தப்புலிகளும் இருக்கவில்லை என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டி�

br />?ுந்

த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனதைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. ஆவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். 7ம் இலக்க வார்ட்டைக் காலி செய்துவிட்டு வந்திருந்த நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டத்தில் வந்து கொண்டிருப்பது கேட்டது. இந்திய இராணுவம் உள்ளே நுழைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுகு;கு நாங்கள் விசயங்களை விளங்கப்படுத்தலாம் என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த மருத்துவர் கணேசரட்னம் அறையை விட்டு வெளியில் சென்றார். ஏங்களின் சக ஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் வார்ட்டுகளில் தான் இருந்தனர். சூட்டுச்சத்தம் இப்போது எங்களுக்கு மிகவும் அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். ஏங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை உணர்ந்து எல்லாரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இந்திய இராணுவம் அங்கே நெருங்கியடித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்து வீழ்வதைக் கண்ணால் கண்டோம். வுpரலைக்கூட அசைக்காமல் அப்படியே செத்துப்போனவர்களைப் போலத்தரையில் கிடந்தோம். இறந்து போனவரின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோடு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ என்று முழுநேரமும் நடுங்கிக் கொண்டிருந்தோம்.

இரவில் மேலும் வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய தங்குவிடுதி அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அங்குமிங்குமாய் போய் வந்து கொண்டிருக்கும் சத்தம் எங்களுக்குக் கேட்டது. மறுநாள் காலை 11.00 மணிவரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலம் நாங்கள் அப்படியே கிடந்தோம்.”

இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விபரிக்கிறார்:

“இந்திய இராணுவம் வெளிப் படலை வழியாகப் புகந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளர்களின் அலுவலகத்திற்குள்ளும் வேறு அலுவலகங்களுக்கும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த என் சக ஊழியர்கள் பலர் இறப்பதைக் கண்டேன். இன்னொரு சக ஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார்: அப்படியே அசையாமல் படுத்துக்கிடவுங்கள்.

‘எனவே நாங்கள் அன்றிரவு முழவதும் இம்மிகூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களின் அடியில் படுத்துக்கிடந்தோம். மருத்துவமனை மேற்பார்வையாளராக இருந்தவரில் ஒருவருக்கு இருமல் இருந்தது. அவர் இரவில் அவ்வப்பொழுது முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார். ஒரு இந்திய இராணுவ வீரன் அப்போது அவர்மீது ஒரு கைக்குண்டை வீசி எறிந்ததில் அவரோடு வேறு சிலரும் கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும்.

இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று உரத்துக் கூவினார்:

“நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு,” அவர் மீதும் ஒரு கைக்குண்டை எறிந்தார்கள். அவரும் அவருக்கு அடுத்துக்கிடந்த சகோதரரும் இறந்து போனார்கள்.

‘இரவு கடந்துபோய் காலையாகி விட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணி அளவில் குழந்தை வைத்திய நிபுணர் மருத்துவர் சிவபாதசுந்தரம் மூன்று நாரஸ்களுடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார். நாங்கள் யார் என்று அடையாளங் காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்து விடுவது உசிதமானது என்று அவர்களிடம் அவர் எடுத்துரைக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி “நாங்கள் சரணடைகிறோம், நாங்கள் ஒன்றுமறியாத மருத்துவர்களும், நார்ஸ்களுந்தான்” என்று உரத்துக் கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.

மருத்துவர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்து நேரே சுட்டுக்கொன்றார்கள். நர்ஸ்களும் காயமுற்றனர். மருத்துவமனையில் சிக்கிக்கொண்டு விட்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த இந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தான். சுமாதானத்தினதும் அகிம்சையினதும் காவலன் என்று தன்னைக்காட்டிக் கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அவருடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடத்தன. ஊயிர் பிழைத்திருந்தவர்கள் மறுநாள் காலை 11.00 மணிவரையும் இறந்து போனவர்களுடன் தாங்களும் இறந்துவிட்டது போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரி ஒருவர் அந்த மருத்துவமனை வாரட்டு ஒன்றிற்கு வந்தபோது அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பிறகுதான் நாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர்.

அந்த மருத்துவர் அந்த அதிகாரிக்கு நிலைமைய விளக்கிக்கூறி தனது இரு கைகளையும் மேலுயர்த்தியவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் இடத்திற்கு வந்தார். தன்னுடன் பணிபுரிபவர்களையும் காயமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சக மருத்துவர் கணேசரட்னம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்து விழுந்து கிடப்பதையும் கண்டார். மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையில் சிதறிக்கிடந்த அவர்களின் துணிமணிகளின் மீது ரத்தம் தோய்ந்த இராணுவக் காலணித் தடங்கள் காணப்பட்டன. ஆவர்களின் விலைமதிப்புள்ள உடமைகள் எல்லாமே பறிபோய்விட்டன.

அதற்குப் பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு இந்திய இராணுவக் காவலர் நின்றுகொண்டிருந்தார். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தார்கள�

br />?.

மருத்துவமனையிலையே தங்கியிருக்கும் இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்: “கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடiபாதைப் பகுதியில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. ஆவற்றின் மீது திறந்திருந்த ஜன்னலொன்னிறன் வழியே வந்துகொண்டிருந்த மாலைச்சூரிய ஒளிபட்டுக் கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக் கூடாதே என்பதற்காக மரக்கட்டை போலப் படுத்துக்கிடந்தேன். உண்மையிலேயே நான் உயிர்தப்பியது பெரிய அதிட்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கைக்குண்டை வீசி எறிந்திருந்தார்கள். அதனால் என்முன் படுத்துக் கிடந்தவர்கள் எல்லாம் இறந்துபோய்விட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப் போல கைக்குண்டுகள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச்சத்தத்தை எழுப்பியது. புpன் கட்டடச் சிதறல்களும் பெருந்தூசும் எங்கள் மீது படியும். இறந்த மற்றும் காயமுற்றவர்களிடமிருந்து பெருகி வழியும் ரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.

அந்த இரவு முழுதும் விழித்துக்கொண்டே கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்பொழுது எங்கள் தலைகளுக்கு மேலால் சீறிப்பரவும் துப்பாக்கி வேட்டுகள் அல்லது கைக்குண்டு எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். “அம்மா, டீ, டீ, டீ” என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது.

இன்னொரு குழந்தை கதறி அழுதது, ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடும் என்று நான் நினைத்தேன்.

“என் கால்கள் விறைத்துப் போயிருக்கிறது, நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது, என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது, தயவுசெய்து அதை எடுது;துப் போடுங்கள்” என்று இன்னொரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.

“அந்தப்பெண்மணியின் வலி முனகலைப் பொறுக்க முடியாமல், “யாராவது அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அந்தப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா? என்று கத்தினேன்.

“அந்தப்பெண்மணி தொடர்ந்து முனககிக் கொண்டிருந்தார்… காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்வரை சுற்றியிருந்த எல்லாரும் அந்தப் பெண்மணியும் கூட இறந்து போயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே, “ராஜீவ் வாழ்க, இந்திரகாந்தி வாழ்க” என்றும் கூவிக்கொண்டிருந்தார். “காலையில் அவரும் கைக்குண்டு வெடிக்குப் பலியாகிக் கிடப்பதைக் கண்டோம்.

வேறு சிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்தப்பிப் பிழைத்திருப்பதையும் பின்னர் நாங்கள் கண்டோம். பின்னர் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:

இதை எல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்வார்கள்… அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்கள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒரு குழவாக வெள்ளைக்கொடிகளை ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். பின் அவர்கள் நம்மை மீட்பார்கள், நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காககப் பார்த்துக்கொண்டிருந்தோம்.”

“எப்போது விடியும் என்று ஆவலாய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம், நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.

“22ம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணி இருக்கும். மருத்துவர் சிவபாதசுந்தரத்தின் குரலைக்கேட்டேன். “நாங்கள் அப்பாவி மருத்துவர்கள், நர்ஸ்கள், நாங்கள் சரணடiகிறோம், நாங்கள் சரணடைகிறோம்” என்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்து கொண்டிருந்தார்.

“அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறiயிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு இராணுவவீரன் விடமால் தொடர்ந்து சுடவதை நாம் பார்த்தோம். மருத்துவர் சிவபாதசுந்தரம் இறந்து போய்விட்டார். தன் கூட வந்த நர்ஸ்களை தனக்கு இரு புறமாகவும் தள்ளி விட்டதில் அவர்கள் காயங்களோடு தப்பித்து விட்டதை நாங்கள் பின்னர் கண்டோம். எங்களுடைய தலைவிதி இனி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு அங்கு கிடந்தோம்.

பின் காலை 10.20 அல்லது 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் ஒரு பெண் மருத்துவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோம் என்பது அப்போது தெரியவந்தது. நாங்களெல்லாரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அந்தச் சடலங்கள் ஒரு மைல் தூரத்திற்கு மேல் விரவிக் கிடந்தது போல் தோன்றியது. இந்தியப்படை எங்களை நெருங்கி வர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். ஏங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரே ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.

“அழாதீர்கள், நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய மிக நிறைய இழந்து விட்டிருக்கிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்” என்று அவர் கூறினார்.

“அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிருக்காவிடடால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாக இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய இந்தச் சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்த போது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது”

அக்டோபர் 22ம் திகதியிலிருந்து 29ம் திகதிவரை இக்குழவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்கு தேவையான சிகிச்சைகளைத் தைரியமாக அளித்துதவினார்கள். ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூறியது போல, “என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. ஆவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்தேன். முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் கத்தியின் மீது நடந்து கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. செல்கள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்து போனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்களும் எங்கள் மருத்துவமனையில் இருந்தனர். பூரணமாய் சிதைந்து போன நிலையில் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்குமாறு எங்களைக் கேட்டனர். மருத்துவர்களாகிய எங்களுக்கு அவர்கள் மருத்துவமனை வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளிகள் மட்டுமே. ஆவர்கள் சிகிச்சையை நாடிநிற்கிறார்கள். எங்களின் கடமைகளோ அளவிறந்த முக்கியம் கொண்டன”

தன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்தததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டு போய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்படவேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த விபரீதபரீட்சை இதற்கு முன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவமனை ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, நோயாளிகளையும் மருத்துவமனை ஊழியர்களையும் தனியே ஒதுக்கி விடவோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்?

மருத்துவமனை சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடப்படவில்லை? நோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின் தங்கி நின்றது போலிருக்க, தப்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் மருத்துவமனையில் பின்வாயிலால் வெளியே சென்றுவிட வசதியாக வெளிவாசல் திறந்து கிடக்க இந்திய இராணுவம் மருத்துவமனைக்குள் முன்வாயில் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்?

ஒரு மகத்தான தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூற முடியாத மனித உயிர்களின் பெறுமதியைப்பற்றியோ ஒரு துளிகூட அக்கறை காட்டாமல் பொதுமக்களைக் கொண்ட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன்? இந்தச் சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்து விட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் நிதானமாகவே சொல்வதானால் கூட அது தன்னுடைய கடந்த காலப் பிரகடனங்களிலெ;லாம் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாய் நடந்து கொண்டது என்று நிச்சயமாக் கூறலாம். யுhழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெ;லாம் இந்த தகாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு எதிரே இருந்த கட்டிடங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றன. இந்திய இராணுவத்தின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்தைய சமயங்களிலெ;லாம் முரட்டுத்தனமாக உதறித் தள்ளி விடும் ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன் அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்தத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் சில வீரர்களை இழந்து விட்டிருந்ததென்றும் அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார்.

“மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள் சூழ ஆரம்பித்தது, வானத்தில் கருமுகில்கள் திரண்டு வந்துகொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது” என்றார். அச்சங்கொண்டிருந்த – சரியான முறையில் அறிவுறுத்தப்படாத – பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத – தமிழோ ஆங்கிலமோ அறியாத ‘இந்த நபர்கள் மருத்துவமனைக்குள் உயிர்ப்பிச்சை கேட்டு நிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படி எப்படி எல்லாம் சரி என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த மாதிரி எல்லாம் விளங்கிக்கொண்டு, நினைத்தபடி நடந்து கொள்ளத்தக்க விதத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இராணுவ வீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களை விட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை – உணர்ச்சிகளைச் சிந்தித்துப் பார்;க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து சீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கு தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமை வாய்ந்த நாட்டிற்கோ தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

பல மாதங்கள் கழிந்து சமயச்சடங்குகள் சகிதம், தாகூரின் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொண்டிருந்த சமயம் தளபதி மருத்துவர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லுமகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் தென்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் வகித்த பங்குபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். ஆவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.

நன்பரொருவரைப் பார்க்க வந்த நேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். ‘உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என்று நான் நம்புகிறேன்” என்று அவரின் நண்பர் தமாசாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், “இல்லை, இல்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன், என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பையில் வைத்திருக்கிறேன்” என்று சீரியசாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர் தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப் போனோம் என்று மனம் வருந்தினார். இதை வேறு யாருக்காவு சொல்லியிருந்தார் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம் தான்!

நன்றி: தோழர் ஈழவன்85 தமிழ்நாடு ரொக்.....

candles.gif

கிந்திய அமைதிபடையால் கொல்ல பட்ட அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள் ... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.