Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் பகுதி மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 23, 2010 / பகுதி: செய்தி /

சம்பூர் பகுதி மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது - இராணுவ துணைக்குழுவின் தலைவர்

சம்பூர் பகுதி மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று இராணுவ துணைக்குழுவின் தலைவர் பிள்ளையான் கூறியுள்ளார்.

திருகோணமலையின் சம்பூர் பகுதியில் அனல் மின்னிலையத்தினை அமைப்பதற்காகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய - இலங்கையினது கூட்டுத்திட்டத்தில் எந்தவகையிலும் தன்னால் தலையிட முடியாது என்றும் - சம்ப+ர் மக்களின் பிரச்சினையினைத் தீர்க்கக்கூடிய ஒருவர் அதிபர் மகிந்த ராஜபக்ச மாத்திரம்தான் என்றும் கூறியுள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூர் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்கிறார் பிள்ளையான்

[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 07:59 GMT ] [ தி.வண்ணமதி ]

திருகோணமலையின் சம்பூர் பகுதியில் அனல் மின்னிலையத்தினை அமைப்பதற்காகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய-இலங்கையினது கூட்டுத்திட்டத்தில் எந்தவகையிலும் தன்னால் தலையிட முடியாது என பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார்.

"கிழக்கில் போர் மூர்க்கமாக இடம்பெற்ற வேளையில் சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். இந்த மக்களின் பிரச்சினையினைத் தீர்க்கக்கூடிய ஒருவர் அதிபர் மகிந்த ராஜபக்ச மாத்திரம்தான்" என புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான பிள்ளையான் கூறுகிறார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் 'த ஐலண்ட்' ஆங்கில நாளிதழில் வெளியான இச்செய்திக் கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

கிழக்குப் பிராந்தியத்தில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து ஓகஸ்ட் 2006ல் சிறிலங்கா அரசாங்கம் அப்பகுதி மக்களை வெளியேற்றியிருந்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இனநல்லிணக்க ஆணைக்குழுவினது தலைவரான முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டீ சில்வாவின் முன்னிலையில் நேற்றையதினம் சாட்சியளித்தபோது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்தக் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அண்மையில் திருகோணமலைக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது இதுவிடயம் தொடர்பாகத் தான் அவருடன் கலந்துரையாடியதாக முதலமைச்சர் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து அதிபரின் பணிப்புக்கிணங்க தங்களது நிலங்கள் தமக்கே வேண்டும் என வாதிடும் சம்பூர் மக்களிடம் தான் சென்று மாற்று நிலங்களை வழங்குவது தொடர்பில் அவர்களுடன் உரையாடியதாகவும் சந்திரகாந்தன் கூறுகிறார்.

ஆனால் மாற்று நிலம் வழங்கும் யோசனையினை சம்பூர் மக்கள் ஏற்க மறுத்ததாகவும் போருக்குப் பின்னான அபிவிருத்தியில் சம்பூர் பகுதியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தான் அந்த மக்களுக்கு விளக்கியதாகவும் அவர் கூறுகிறார்.

தற்போது புதிய துறைமுகம் அமைக்கப்பட்டுவரும் அம்பாந்தோட்டைக் கரையோரத்தை விட சம்பூர் கரையோரம் ஆழமானதால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அது பெரிதும் உதவும் என எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் சந்திரகாந்தன் கூறுகிறார்.

தங்களது நிலம் தமக்கே வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சம்பூர் வாசிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தூண்டிவிடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் சம்பூரில் 500 மெகாவற்ஸ் மின்வலுவினை உற்பத்திசெய்யும் அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கு இந்திய அரச நிறுவனமான தேசிய அனல்மின் கூட்டுத்தாபனம் திட்டமிட்டிருக்கிறது.

2007ம் ஆண்டு யூன் மாதம் கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக 2006 டிசம்பரிலேயே இது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழு கொழும்பில் சந்தித்தவேளையில் சம்பூர் அனல்மின்நிலையத் திட்டம் தொடர்பாகப் பேசப்பட்டது.

மின்வலு அமைச்சர் ஜோன் செனவிரத்தின மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் றோகித போகல்லகம ஆகியோர் பிரசன்னமாகியிருக்க குடியரசு அதிபர் செயலகத்தில்வைத்து அனல் மின்நிலையத்தினை அமைப்பதற்கான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டையாக விளங்கிய சம்பூர் பகுதி தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் அனைவரையும் மீள்குடியேற்றும் முனைப்புக்களை அரசாங்கமும் கிழக்கு மாகாணசபையும் எடுத்திருந்ததாக சந்திகாந்தன் தொடர்ந்து கூறினார்.

500 மில்லியின் டொலர் முதலீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்தினை இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனமும் சிறிலங்கா மின்சாரசபையும் இணைந்து கூட்டாக முன்னெடுக்கவுள்ளன. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் சம பங்குகளைக் கொண்டிருக்கும்.

கிழக்கு மாகணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகளை விற்க விரும்புபவர்களை நீங்கள் தடுப்பதன் ஊடாக 'காணிப் பிணக்கு' உருவாவதற்கு வழிசெய்வதோடு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துகிறீர்களாம் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடுத்த குற்றச்சாட்டினை முதலமைச்சர் பிள்ளையான முற்றாக மறுத்தார்.

இதுதொடர்பான குறிப்பிட்டுக் கூறக்கூடிய முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் தனது கவனத்திற்குக் கொண்டுவருமாறு கூறிய பிள்ளையான் முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து தான் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரைப் பார்த்து அஞ்சுவதால் இது சாத்தியமற்றது என ஆணைக்குழு பதிலளித்திருக்கிறது.

தங்கள் நிலங்களை இழந்திருப்பதாகச் சிலர் தற்போது பிரச்சிகளை எழுப்புகிறார்கள். தங்களால் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது போக இந்த மக்கள் தன்னை நாடுகிறார்கள் என புலிகள் அமைப்பின் முன்னாள் சிறுவர் போராளியான சந்திரகாந்தன் கூறுகிறார்.

தங்களது சொந்த இடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்னர் புதிய நிலங்கள் வழங்கப்பட்ட குறித்த இந்த மக்கள் தற்போது தங்களுக்குச் சொந்தமான நிலத்தினைக் கோருகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என கடுமையான கருத்துக்களை வெளியிடும் சந்திரகாந்தன் கூறுகிறார்.

போரின் போது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள்குடியேற்ற முன்னர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முனைப்புக்களை எவ்வாறு ஆரம்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் உறுப்பினர் எம். பி. பரணகம சந்திரகாந்தனிடம் கேள்வி எழுப்பினார்.

இதுவிடயம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை அரசாங்கத்திற்குத் தனது முழுமையான ஆதரவினை வழங்கும் என உறுதியளித்த சந்திரகாந்தன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்ப துயரங்களைப் போக்குவதற்கு எடுக்கப்படும் முனைப்புக்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு கிரமமாக அறியத் தரப்படும் என்றும் கூறினார்.

1990ம் ஆண்டு 600 பொலிசார் விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டமைக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் பகிரங்க மன்னிப்புக் கோருவாரா எனக் கேட்கப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தற்போது மூத்த அமைச்சராக இருக்கும் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்தான் அதனைச்செய்யவேண்டும் என அவர் பதிலளித்தார்.

சம்பூர் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்கிறார் பிள்ளையான்

04 பெப்பிரவரி 1991ம் ஆண்டுதான் தான் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்துகொண்டதாகக் குறிப்பிட்ட சந்திரகாந்தன் அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்திற்கான பொறுப்பினைத் தான் எவ்வாறு சுமக்கமுடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

பிறிதொரு கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பிள்ளையான் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரச படையினரும்கூட வரம்புமீறிச் செயற்பட்டிருக்கிறார்கள் என்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா அரச படையினர் கட்டுக்கடங்காமல் செயற்பட்டதன் விளைவாக பல கொலைகள் இடம்பெற்றிருந்தாகவும் அவர் கூறினார்.

முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் பகைமையினை ஏற்படுத்தும் வகையில் கடந்த காலத்தில் படையினர் செயற்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

1990ம் ஆண்டு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்லகலைக்கழகத்திலிருந்து 174 பேர் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவத்தினையும் சந்திரகாந்தன் சுட்டிக் காட்டினார்.

நாட்டினது அரசியலாளர்கள் உள்ளிட்ட இதுபோன்ற வரம்புமீறிய அத்துமீறல் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர்கள் யாரோ அவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

http://www.puthinappalakai.org/view.php?20101022102333

Edited by மோகன்
செய்தி முழுமையாக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் போர் மூர்க்கமாக இடம்பெற்ற வேளையில் சம்பூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். இந்த மக்களின் பிரச்சினையினைத் தீர்க்கக்கூடிய ஒருவர் அதிபர் மகிந்த ராஜபக்ச மாத்திரம்தான்" என புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான பிள்ளையான் கூறுகிறார்.

Jalra.GIF

ஜெய்ன்ச் சப்பு ஜால்ரா பயல்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.