Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொங்குகிறார் பழ.நெடுமாறன்

போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென ஈழத் தமிழர் பிரச்னை குறித்து நெடிய

அறிக்கை ஒன்றை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். புலிகள் மீதான குற்றச்சாட்டில் தொடங்கும் இந்த அறிக்கை, ராஜபக்ஷே கொடுத்த ஒரு வேண்டுகோளுடன்முடிவது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் புதிய கொந்தளிப் பைக் கிளப்பி உள்ளது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனிடம் பேசினோம்.

''போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மறுவாழ்வு பற்றி முதல்வர் கருணாநிதி மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி இருக்கிறாரே?''

''இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கு காங்கிரஸ§ம் தி.மு.க-வும்தான் பொறுப்பு! ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களைப் பதை பதைக்கப் படுகொலை செய்ய சிங்கள அரசுக்கு, இந்திய அரசு ஆயுதம் தந்தது. மத்திய அரசில் ஓர் அங்கமாக இருந்தும், தமிழர் அழிவைத் தடுக்க தி.மு.க. எதுவுமே செய்யவில்லை. மாறாக, தமிழக மக்களை ஏமாற்ற வரிசையாக நாடகங்களை மட்டும் அரங்கேற்றியது. முள்வேலி முகாமில் இருந்து மூன்று லட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறு தமிழகமே கொதித்துப் போராடியபோது, சர்வ கட்சிக் குழுவை அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், கருணாநிதி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி எம்.பி-க்களை மட்டும் அங்கு அனுப்பிவைத்தார். அவர்கள் திரும்பி வந்த பிறகு அவரே ஓர் அறிக்கை தந்தார். முகாம்களில் உள்ள மக்கள் மூன்று மாதங்களில் அவரவர் ஊர்களில் குடியேற்றப்படுவார்கள் என்று ராஜபக்ஷே உறுதி தந்துவிட்டார் என்றும் மக்களுக்குச் செய்யப்படும் உதவிகள் ஓரளவு திருப்தி தருவதாகவும் கூறினார் கருணாநிதி. ஆனால், இன்னமும் அந்த மக்கள் பெரும் துன்பத்தில்தான் இருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என இப்போது அவரே கூறுகிறார். காங்கிரஸ§க்கும் தி.மு.க-வுக்கும் உள்ள உறவில் நெருடல் ஏற்படும்போது, ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுப்பதும்... திராவிடம்பற்றிப் பேசுவதும் அவரது அரசியல் தந்திரங்கள். உறவு இணக்கமாக இருக்கும்போது, அதைப்பற்றி மூச்சுகூட விட மாட்டார்!''

''போர் மேகங்கள் சூழத் தொடங்கியதில் இருந்தே, மத்திய அரசு தலையிட்டுத் தடுக்க வேண்டும் என முதல்வர் தொடர்ந்து கூறிக்கொண்டுதானே இருந்தார்?''

''மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற 2004-ம் ஆண்டு முதல் 2009 வரை சிங்கள ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது. சிங்கள ராணுவத்தில் 63 சதவிகிதம் பேர் இப்படி இந்தியாவில் பயிற்சி பெற்றனர். 2008-09 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு உதவிப் பொருள்கள், ஆயுதங்கள் கொண்டுவந்த 13-க்கும் மேற்பட்ட கப்பல்களை இந்தியக் கடற்படையின் உதவியுடன் சிங்களக் கடற்படை அழித்தது. வெளியில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு எந்த வித ஆயுத உதவியும் வராதவாறு, இந்தியக் கடற்படை தடுத்தது. இந்திய ராணுவத்தின் முன்னாள் லெஃப்டினென்ட் ஜெனரல் சதீஷ் சந்திரா நம்பியார், இலங்கை ராணுவத்துக்கு ஆலோசகராகப் பணியாற்றி னார். உச்சகட்டமாக... ஏவுகணைகள், ராடார்களுடன் அவற்றை இயக்க ராணுவப் பொறியாளர்களையும் டெல்லி அரசு அனுப்பி வைத்தது.

இவை எல்லாம் நடந்தபோதும் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் அரசு உயிர் பிழைத்தது. உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்தால்... மத்திய அரசுக்கான ஆதரவை அப்போதே விலக்கி இருக்க வேண்டும்; அப்படிச் செய்து இருந்தால், காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கும்; அதே சமயம், காங்கிரஸ் உதவியால் தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் தி.மு.க. அரசையும் காங்கிரஸ் கவிழ்த்து இருக்கும். எனவே, தனது அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை கருணாநிதி பலிகொடுத்தார் என்பதுதான் உண்மை!''

''போர் நிறுத்த முயற்சிபற்றி எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் அவ்வப்போது பேசிவிட்டுச் சென்றதாக முதல்வர் கூறினாரே?''

''இலங்கையில் போர் முடிந்தவுடன் மகிந்தா ராஜபக்ஷேவின் தம்பி பசில் ராஜபக்ஷே சில உண்மைகளை வெளியிட்டார். 'போர் நெருக்கடியான நேரத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து செயல்படுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், உள்துறைச் செயலாளரும் இலங்கைத் தரப்பில் பசில், கோத்தபய ராஜபக்ஷே, வெளியுறவுச் செயலாளரும் இடம்பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு என்னென்ன உதவிகள் வேண்டும் என இந்தக் குழு கூடிப் பேசி, அதன்படி இந்திய அரசு உதவிகளைச் செய்தது. இதற்காகவே நாராயணனும் சிவசங்கர் மேனனும் அடிக்கடி கொழும்பு வந்து சென்றனர்' என்பது பசில் ராஜபக்ஷேவின் ஒப்புதல் வாக்குமூலம். ஆனால், போர் நிறுத்தம் குறித்து ராஜபக்ஷேவிடம் வலியுறுத்துவதற்காகவே எம்.கே.நாராயணனும் சிவசங்கர் மேனனும் கொழும்பு சென்றதாக கருணாநிதி உண்மையைத் திரித்துக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றினார்!''

''போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, ஈழத் தமிழ்ப் பற்றாளர்கள் குரல் உயர்த்தி பிரசாரம் செய்வதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறாரே?''

''ஜெயலலிதா, அவ்வாறு பேசியது மன்னிக்க முடியாத தவறு. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்! ஈழத் தமிழர் பிரச்னை ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்த இவர் என்ன செய்தார்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு தன் குடிமக்களைப் பாதுகாக்க முடியாதவர், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கான அருகதையை இழந்துவிட்டார். ராஜபக்ஷேவைப் பாதுகாப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ... அதை எல்லாம் இன்னமும் தவறாது செய்கிறார் கருணாநிதி!''

''இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..?''

''சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.

ஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே!''

ஊட்டி குளிரில் சூடான விவாதம்

''தடை செய்த நாட்டில்தான் தமிழீழம் கருவானது!''

புலிகள் மீதான தடையை நீட்டிப்பது குறித்து விவாதிக்க டெல்லி, சென்னையை அடுத்து... ஊட்டியில் 'தமிழகம்' மாளிகையில் நடந்தது நீதிபதி விக்ரம்ஜித் சென் விசாரணை! அரசுத் தரப்பின் இரண்டாவது சாட்சியாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறைப் பிரிவு இயக்குநர் மிஸ்ரா, நீதிபதி முன் சில விஷயங்களை முன்வைத்தார்.

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்ற அமைப்பு புலம் பெயர்ந்த தமிழர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் இதில் பங்கேற்று தேர்தலும் நடந்துள்ளது. விடுதலைப் புலிகளின் மிதவாதப் பிரிவினர் இதை ஆதரிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க முடியாது. நாம் தடை செய்ய இதுதான் முக்கியமான காரணம்!'' என்று சொன்னார் மிஸ்ரா.

வைகோவை குறுக்கு விசாரணைக்கு அழைத்தார் நீதிபதி. ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க ஏற்பாடு செய்தவர்கள் வாழும் நாட்டில் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளதை அரசுத் தரப்பு சாட்சி அறிவாரா?'' என்று வைகோ கேட்க, ''அமெரிக்காவிலும், ஐரோப்பியப் பகுதிகளிலும் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்கு மிகச் சரியாகத் தெரியவில்லை!'' என்றார் மிஸ்ரா. சட்டென்று நிமிர்ந்த வைகோ ''புலிகள் இயக்கம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் எல்லைக்குட்பட்ட ஃபிலடெல்பியா மாகாணத்தில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு நடத்திய தொடக்க விழா நடத்த அமெரிக்க அரசாங்கமோ அல்லது அந்த நாட்டுக் காவல் துறையோ எந்தத் தடையும் போடவில்லை, எந்த இடையூறும் செய்யவில்லை. இது தெரியுமா?'' என்று கேட்டார். இதற்கு, ''தெரியாது'' என்று மிஸ்ரா கூறினார்.

இந்த வாதப் பிரதிவாதங்களைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 28-ம் தேதியன்று சென்னையில் நடக்குமென்று அறிவித்தார்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்ற அமைப்பு புலம் பெயர்ந்த தமிழர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் இதில் பங்கேற்று தேர்தலும் நடந்துள்ளது. விடுதலைப் புலிகளின் மிதவாதப் பிரிவினர் இதை ஆதரிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க முடியாது. நாம் தடை செய்ய இதுதான் முக்கியமான காரணம்!'' என்று சொன்னார் மிஸ்ரா.

கிந்திய அரசு நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் ஈழத்தோழர்களை பகை சக்தியாக கருதுவது ... இதன் மூலம் புலனாகிறது :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.