Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இடத்தில் குடியேற்றுமாறு சம்பூர் மக்கள் கண்ணீர் மல்க முறைப்பாடு

Featured Replies

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010

திருகோணமலை சம்பூர் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களை தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கண்ணீர் வடிப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் , அதன் துணைச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று திருகோணமலை சம்பூர் பகுதியில் முகாம்களில் வசிக்கும் மக்களைச் சென்று பார்வையிட்டனர்.

அதன் பின்னர் எமக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம், சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கட்டைப்பறிச்சானில் 390 குடும்பங்களும், கிளிவெட்டியில் 570 குடும்பங்களும், மணல்சேனையில் 70 குடும்பங்களும், பட்டித்திடலில் 236 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சம்பூர் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சம்பூர் அனல்மின் திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும், மக்கள் தங்களிடம் தெரிவித்ததாகக அவர் கூறியுள்ளார்.

எனினும் அனல்மின் திட்டத்திற்கு 500 ஏக்கர் நிலப்பரப்பு போதுமானதென குறிப்பிடும் மக்கள் மிகுதி இடங்களில் தங்களை மீள்குடியமர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக சம்பூர் மக்கள் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கூறியுள்ளனர்.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.