Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலை வடிக்கும் கண்ணீர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலை வடிக்கும் கண்ணீர்.

போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?

1karuna_croc.jpg

வேறு யார், தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதியைத் தவிர வேறு யார் ?

நேற்று உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில் ஈழத் தமிழரின் அவல நிலைப் பற்றி கண்ணீர் உகுத்துள்ளார். இது என்ன மாதிரி கண்ணீர் என்பதை உங்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டியதில்லை.

Tamils-at-Kadirgamh-camp--001.jpg

இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!!

sonia_2.jpg

ஆனால், காங்கிரஸ் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. கருணாநிதி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறையை முடுக்கி விட்டு, ஆ.ராசாவின் மென்னியைப் பிடித்து, அந்த விசாரணை, சிஐடி காலனி வரை கொண்டு செல்ல சோனியா காந்திக்கு தெரியும். பெயரில்தான் சோனி இருக்கிறதே தவிர, சோனியா சோனி அல்ல. அவர் சோனி நிறுவனத்தை போல திறமை வாய்ந்தவர். கடைந்தெடுத்த அரசியல்வாதி. 2014ல், ராகுல் காந்தியை பிரதமராக ஆக்கும் வரை மிக கவனமாக காய் நகர்த்தும் அளவுக்கு சாதுர்யம் படைத்த தேர்ந்த அரசியல்வாதி.

2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது, இது வரை இல்லாத அளவுக்கு, காங்கிரஸ் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்ற ஒரு வினோதமான சூழலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச் சூழலை நன்கு அறிந்த கருணாநிதி, அதனால்தான், தன்னுடைய ஈகோவையெல்லாம் கோபாலபுரத்திலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு, மீனம்பாக்கம் சென்று, தன்னுடைய விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.

800px-tamil-tigers-flagsvg.png

2009 மே மாதத்திலேயே விடுதலைப் புலிகள் வீழ்த்தப் பட்டார்கள் என்று சிங்கள அரசாங்கம் அறிவித்தது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்றும் அறிவித்தது. இதை நம்பி, இந்திய அரசாங்கமும், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை யாராவது ஒரு சிங்கள தாசில்தாரிடம் வாங்கிக் கொடுங்கள் என்று விண்ணப்பித்தது.

ஒரு புறம், இறப்புச் சான்றிதழை தாருங்கள் என்ற இலங்கைக்கு விண்ணப்பித்து விட்டு, மறுபுறம், புலிகள் இயக்கத்தை 2010 மே 14 அன்று தடை செய்து ஒரு அறிவிக்கையை வெளியிடுகிறது.

இந்த அறிவிக்கையை சரியா தவறா என்று முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் ஒன்று, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப் படுகிறது.

Justice_Sen.Anne-Marie.jpg

இதே விக்ரம்ஜித் சென்தான், 2008ல், புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்தார்.

இந்நிலையில், இத்தீர்ப்பாயத்தின் இரண்டாவது கூட்டம், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாகவும், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்று ஒரு மனு தாக்கல் செய்யப் படுகிறது.

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

தனது வாதத்தின் போது, புலிகள் இயக்கம் அழிந்து விட்டாலும், அதன் ஆதரவாளர்களும், அனுதாபிகளும், அந்த இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்று புலிகள் இயக்கத்தை தடை செய்த அறிவிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் ஆதரவாளர்களைப் பற்றி குறிப்பிட்டுருப்பதால், ஆதரவாளர் என்ற முறையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை ஒரு அனுதாபியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதி விக்ரம்ஜித் சென் தனது தீர்ப்பில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்பது ஒரு பதிவு செய்யப் படாத அமைப்பு, மேலும், அந்த அமைப்பின் முகவரி முழுமையாக இல்லை (தெருப் பெயர் குறிப்பிட தவறுதலாக விடுபட்டு விட்டது.) என்று இரு பெரும் காரணங்களையும், சட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தான் தீர்ப்பாயத்தின் முன் வர வேண்டும் என்ற ஒரு முக்கியமற்ற காரணத்தையும் குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார் நீதியரசர் விக்ரம்ஜித் சென். இந்த முகவரி தொடர்பாக, நீதிபதி சந்தேகம் எழுப்பிய போது, தெருப்பெயர் தவறுதலாக விடுபட்டு விட்டது என்று விளக்கத்தை அவருக்கு அளித்து, திருத்தப் படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும், முகவரி சரியில்லை என்பதை மனுவை தள்ளுபடி செய்வதற்கு ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளார் என்றால், நீதியரசர் விக்ரம்ஜித் சென்னின் நீதிபரிபாலணத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையடுத்து தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில், மனுதாரரை விசாரிக்காமல், தீர்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்தது சட்ட விரோதம் என்றம், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும் வாதிடப் பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் அடங்கிய டிவிஷன் பென்ச் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

தங்களது தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பாயம் மனுதாரருக்கு உரிய வாய்ப்புகள் அளித்துள்ளதால் (??????) தீர்ப்பாயத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், இந்த வழக்கின் வாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, ஜமாத் ஏ இஸ்லாமிக் ஹிந்த் என்ற ஒரு அமைப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர் ராதகிருஷ்ணன் குறிப்பிட்டார். இத்தீர்ப்பை தங்களது தீர்ப்பிலும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடுகையில், அந்த தீர்ப்போடு சேர்த்து, லிபர்ட்டி ஆயில் மில்ஸ் என்ற மற்றொரு வழக்கையும் சேர்த்து குறிப்பிட்டுளளனர். என்னடா இது சம்பந்தமில்லாமல், ஒரு வழக்கை குறிப்பிடுகிறார்களே என்று ஆராய்ந்தால், ஜமாத் வழக்கு தீர்ப்பின் நகலை நீதிமன்றத்துக்கு வழங்கிய போது, அந்த வழக்கின் தீர்ப்பு முடிந்தவுடன், லிபர்ட்டி ஆயில் மில்ஸ் என்ற அடுத்த வழக்கின் ஒரே ஒரு பத்தி மட்டும் அந்த நகலில் இருந்தது. (தள்ளுபடி பண்றதுல அவ்வளவு அவசரம்….. ம்ம்ம்.)

இது ஒரு சாதாரண தவறு என்று விட்டு விடலாம். இது போன்ற ஒரு சாதாரண தவறுதானே, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் முகவரியில் தெருப் பெயர் விடுபட்டுப் போனதும் …. ? பதினோரு ஆண்டுகளாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஒரு மூத்த நீதிபதி, இதை ஒரு காரணமாக சுட்டிக் காட்டி, புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யும் ஒரு அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்கிறார் என்றால், இந்தத் தீர்ப்பாயம், நீதிபரிபாலணம் எல்லாம் எப்படி ஒரு சடங்காக இருக்கிறது என்று பாருங்கள்.

boat-house-lake-in-ooty.jpg

தீர்ப்பாயத்தின் அடுத்த அமர்வு ஊட்டியில் 20 அக்டோபர் அன்று நடைபெற்றது. (ஊட்டியில் என்ன பொட்டு அம்மனும், சூசையும் இருக்கிறார்களா…. எதற்கு ஊட்டியில் என்று அதிகப் பிரசங்கி மாதிரி கேள்வி கேட்காதீர்கள். நீதியரசரும், அவர் பரிவாரங்களும் ஊட்டியை சுற்றிப் பார்க்க வேண்டாமா ?) ஊட்டியில் அமர்வு தொடங்கியதும், விக்ரம்ஜித் சென், சிறிது அதிர்ச்சி அடைந்தார். காரணம், ஊட்டியில் வைத்தால் யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்து வந்தவர், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மதுரையிலிருந்து வந்திருப்பதைக் கண்டார்.

சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பின் சார்பாக, அதன் இயக்குநர் புகழேந்தி சார்பாக, ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நீதிபதி விக்ரம்ஜித் சென்னிடம் அளித்ததும், நீதியரசர் கடுமையாக கோபம் அடைந்தார். “என்ன இது… உங்களுக்கு இதே வேலையாகப் போய் விட்டது. நாங்கள் தீர்ப்பாயத்தை முடிக்க வேண்டாமா. நாங்கள் ஒரு காலகட்டத்திற்குள் இதை முடித்தாக வேண்டும். உங்கள் இஷ்டத்துக்கு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தால் நாங்கள் எப்போது இத்தீர்ப்பாயத்தை முடிப்பது“ என்று கோபமாக கூறினார்.

ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் சீறியது… “நாங்கள் அளித்த மனுவை படித்துப் பார்க்காமல் இவ்வாறு கூறாதீர்கள். மனுவை ஏற்க மறுப்பதற்கு தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை. மனுவை முதலில் படித்துப் பாருங்கள். இந்த அமைப்பு எத்தனை பொதுநல வழக்குகள் போட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த அமைப்பை இரண்டு ஆண்டுகளாக எப்படி நடத்தியுள்ளது என்பதை அந்த மனுவை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். யாரையுமே அனுமதிக்க முடியாது என்றால் யாருக்காக தீர்ப்பாயம் நடத்துகிறீர்கள் ? மனுவை படித்துப் பார்த்து விட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள். நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்கிறோம்“ என்று கூறினார்.

இதையடுத்து நீதியரசர் விக்ரம்ஜித் சென், மனுவை பொறுமையாக படித்துப் பார்த்தார். படித்து முடித்து விட்டு, அரசு வழக்கறிஞரைப் பார்த்து, இத்தீர்ப்பாயத்திற்கு உதவி செய்வதற்காகவே இவர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்கள். அதனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். (இதத் தானே நாங்க மொதல்லயே சொன்னோம். படிக்காமலே அவசரப் பட்டு முடிவெடுக்கக் கூடாது சார்)

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான இயக்குநர் பி,கே.மிஷ்ரா என்பவர் சாட்சியாக விசாரிக்கப் பட்டார். அவர் தனது சாட்சியத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்வதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும், வழங்கியது தமிழக காவல்துறை என்று கூறினார். கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று கூறியதற்கான காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா ?

மேலும் அந்த அதிகாரி தனது சாட்சியத்தில், நாடுகடந்த தமிழீழம் அமைக்கப் பட்டுள்ளது என்றும் இதுவும் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான காரணம் என்றும் கூறினார். நாடுகடந்த தமிழீழத்திற்கான தேர்தல் நடந்த போது அதன் சிறப்பு பார்வையாளர் யார் தெரியுமா ? அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ராம்சே மெக்டொனால்ட். தடைசெய்யப் பட்ட அமைப்பை அமேரிக்க அரசாங்கம் தனது நாட்டில் மாநாடு நடத்த அனுமதிக்குமா ? இது போல இன்னும் பல்வேறு சொத்தைக் காரணங்களை அந்த அதிகாரி கூறினார். இவரை குறுக்கு விசாரணை செய்ய வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சிறைக் கைதிகள் உரிமை மையத்திற்கும் நீதியரசர் அனுமதி வழங்கினார்.சாட்சிகள் குறுக்கு விசாரணையை அடுத்து, 28ம் தேதிக்கு அடுத்த அமர்வு ஒத்தி வைக்கப் பட்டது.

தனது நலனையும், தன் குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகமே போராடிக் கொண்டிருந்த போது தன்னால் இயன்றதையெல்லாம் செய்து, அந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று பசப்பி லட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த கருணாநிதி இப்போது மீண்டும் வடிக்கத் தொடங்கியிருக்கும் முதலைக் கண்ணீர், அடுத்த சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான்.ஆனால், இனியும் உலகத் தமிழர்கள் கருணாநிதியை நம்பத் தயாராக இல்லை. 1991 தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும், இதுதான் எனது கடைசித் தேர்தல், இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று கருணாநிதி கூறுவார்.

ஆனால் இப்போது சவுக்கு கூறுகிறது. இதுதான் கருணாநிதியின் கடைசித் தேர்தல். அவர் முழுமையாக மக்களால் புறக்கணிக்கப் படப் போகிறார். தனது குடும்பத்தை வளர்த்து விட்டு, தமிழகத்தை சூறையாட விட்டு வேடிக்கைப் பார்த்த கருணாநிதியை மக்கள் மன்னிக்கப் போவதே இல்லை.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=129:2010-10-21-02-39-45&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30-supremecourt-1200.jpg

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடுகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் [^] கடும் கண்டனம் தெரிவித்தது.

செல்போன் சேவைக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 2ஜி ஒதுக்கீட்டில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், மத்திய அரசு [^] க்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக பல தரப்பிலும் புகார் கூறப்பட்டு வருகிறது. துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் [^] ஆ ராசாவின் பெயர் இதில் பலமாக அடிபடுகிறது.

இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. கடந்த 21-ந் தேதி அன்று விசாரணை நடந்தபோது, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சார்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், "ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறப்பட்டது. இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்குமாறு தொலை தொடர்பு துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சி.பி.ஐ.யிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு குறித்து விசாரிக்க கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, சி.பி.ஐ. சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் ஆஜரானார்.

நீதிபதிகள் கோபம்!

அவர், 'மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. மிகவும் சிக்கலாகவும் பெரிய அளவிலும் ஆவணங்கள் இருப்பதால் விசாரணையை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை' என தெரிவித்தார்.

இதனால், நீதிபதிகள் கடுமையாக கோபம் அடைந்தனர். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. மெத்தனமாக செயல்படுவது குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

இன்னும் 10 ஆண்டுகள் தேவையா?

நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில், நீங்கள் (சி.பி.ஐ.) இதுவரை ஏதாவது செய்திருக்கிறீர்களா? இது தான் அரசு செயல்படும் லட்சணமா? இதே நிலைப்பாட்டை மற்ற வழக்குகளிலும் நீங்கள் மேற்கொள்வீர்களா? ஏற்கனவே, ஒரு ஆண்டு முடிந்து விட்டது நினைவிருக்கிறதா?," என்றனர்.

உடனே, ராவல், டதகுந்த, திறமையான மூத்த அதிகாரிகளைக் கொண்டு அனைத்து விதமான வழிமுறைகளிலும் விசாரணையை நடத்த வேண்டி இருக்கிறது. எனவே, கால அவகாசம் தேவை" என்றார்.

இதையடுத்து, "அப்படி என்றால், இந்த வழக்கு விசாரணையை முடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்களா?" என நீதிபதிகள் கேட்டனர்.

ஆறு மாதங்களுக்குள் சி.பி.ஐ. விசாரணையை முடித்து விடுவதாக ராவல் பதிலளித்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ஆஜராகவில்லை. எனவே, வழக்கு விசாரணையை நவம்பர் 15-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மேலும், அந்த விசாரணையின்போது கோபால் சுப்பிரமணியம் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் சில கேள்விகளுக்கு பதில்களை பெற வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2010/10/30/supreme-court-condemns-cbi-delaying-spectrum.html

இந்த சுப்ரீம் கோர்ட்டு மென்னிய திருகுகிறான் அக்காவின்ட ஆசை நாயகன் மாட்டபோவது உறுதி :huh:

அது போக இவர் உள்ளே போனால் வேறு ஒருவரை செட்டப் செய்துவிடுவார்... அனேகமாக இந்த முறை வடநாட்டு காரராக இருக்கும் என பேச்சு அடிபடுது ... எனிவே வாழ்க திராவிடம்... :lol:

டிஸ்கி

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/72658282738374698965826574/Chellame%20-%20Aariya%20Udhadu....mp3 :)

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுப்ரீம் கோர்ட்டு மென்னிய திருகுகிறான் அக்காவின்ட ஆசை நாயகன் மாட்டபோவது உறுதி :lol:

அது போக இவர் உள்ளே போனால் வேறு ஒருவரை செட்டப் செய்துவிடுவார்... அனேகமாக இந்த முறை வடநாட்டு காரராக இருக்கும் என பேச்சு அடிபடுது ... எனிவே வாழ்க திராவிடம்... :D

அக்கா யாரந்த அக்கா? :) கனியக்காவா? :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா யாரந்த அக்கா? :rolleyes: கனியக்காவா? :D

.

உங்களுக்கு ஊகிக்கும் பவர் ரொம்ப அதிகம் தோழர் இசைகலைஞ்சன் .... :D சிலர் உலக ஒருமைபாடு பற்றி அதிகம் பீற்றி கொள்ளீனம்... ஆனா தலைவரின்ட குடும்பத்தை போல யாரும் ஒருமைபாட்டுக்கு சேவை செய்ய மிடியாது...... முன்னம் வெத்தலை போட்ட சொக்குல நடிகர் அப்புறம் கொஞ்சம் சிங்கபூர் ...இப்ப அரியலூர்.... அந்த வடபழனி சினிமா ஏரியாக்காரகள் கதை கதையாக சொல்கிறார்கள் ... அதெல்லாம் எழுத்தில் வடித்தால் சரோஜா புக்கு ரேஞ்சுக்கு ஆகிவிடும் ...

போக அரசியல் வியாதி யெல்லாம் இங்கு இந்த ரேஞ்சிலதான் இருக்கினம்... ஊரில் கொள்ளையடித்தவன் பிக்பாக்கெட்டு... திருடன்... அவர்களிடம் இந்த மாதிரி குல்மால் வேலைகளைதான் எதிர்பார்க்கமுடியும்... ஏனோ பலர் சிந்திப்பதில்லை கூட்டி கழித்துபார்த்தால் எல்லாம் சரியாக த்தான் டிராமா ஆடினார் தானை தலீவர்...

pranab_mukherjee.jpg

என்னுடைய கணக்கு இந்த பிராணப் முகர்சி வந்து பூட்டிய அறைக்குள் கருநாவை சந்தித்தபிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது.... கருநா உண்ணாவிரத டிராமா முதற்கொண்டு அரங்கெற்ற வேண்டி வந்தது.. அந்த பூட்டிய அறைக்குள் என்ன பேசி இருப்பார்கள் என்பதை தோழர்கள் கணிப்பிற்கே விட்டுவிடலாம்(ஸ்பெக்ரம் ஊழல்) மகளின்ட ஆசை நாயகனையும் உள்ளே போடக்கூடாதோன்னோ :D கூட்டி கழித்து பார்த்தால் ஈழ தமிழர்களை அழித்தது இந்த ஊழலே... கருநா தனது சாணக்கியத்தனை காட்டி எழுச்சியை அடக்கிவிட்டார்...சோ... முதல் மறைமுக எதிரி(!!!) :lol:

டிஸ்கி:

rsz_aachi-pickles_.jpg

இவனுங்க சாப்பாட்டுக்கு அன்று முதல் ஈழ தோழர்கள் ஊறுகாயாக இருப்பதுதான் எனக்கு வருத்தம்

முதலில் யாரையும் நம்புவதை கைவிடவேணும்.... சொந்த காலில் எதிர்பவர்களுக்கு இணையாக நிற்க தெரியணும்..

leprosy_beggar_india.jpg

அடுத்தவரிடம் கொஞ்சுவதும் கூத்தாடுவதும் பிச்சை காரர்கள் செயல்..

அந்தா தமிழ்நாட்டு அரசியல் சித்து விளையாட்டுகளில்... ஊடகம்.... மக்களின் வாழ்வாதரங்களில் நேர்மையாக ஈழ தோழர்கள் பங்கு கொள்ளவேணும்..

காசுக்கு பிணத்தினை திண்ணும் காலம் இங்கே..

80054%205%20Gal%20Enviro-FloDies.jpg

வெறும் இனம் என்ற கூவல் யாராவது கொஞ்சம் விபரம் தெரிந்தவ்ர்கள் தீக்குளிக்க மட்டுமே பய்ன்படும்.. ஆட்டு மந்தைகளை களத்தில் இறக்க இதுவே சரியான வழி ...

goats1.jpg

வேறு தமிழ்நாடு தவிர்த்து வேறு இன மக்களை அகண்டா உகாண்டா என அணுகினாலும் ... நன்று... :)

எனிவே யார் எங்க போனா .... யார் ஊழல் பண்ணா யமக்கு ஏன்...? எப்படியாவது குட்டி செவுராக போகுக... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.