Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை ஏர்போர்ட்டில் இலங்கை நபர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 27, அக்டோபர் 2010 (10:54 IST)

சென்னை ஏர்போர்ட்டில் இலங்கை நபர் கைது

ஆயிரம் நவரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த இலங்கை நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம், விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது முகமது சபீக் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை சோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் வயிற்றில் நவரத்தின கற்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளித்து அவரிடம் இருந்து நவரத்தின கற்கள் மீற்கப்பட்டன. சுமார் 2 ஆயிரம் நவரத்தின கற்கள் இருப்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட நவரத்தின கற்களின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என, சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாக்கிட் தெரிவித்தார். நவரத்தின கற்களை கடத்தி வர தனக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சிலர் கூறியதாக முகமது சபீக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகமது சபீக் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நக்கீரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.