Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு நகர சபை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வழக்கு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு நகர சபை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட எதிரிக்கு 290 வருட கடூழிய சிறை!

புதன், 27 அக்டோபர் 2010 14:05

கொழும்பு நகரசபை மண்டப வளவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை

இலக்கு வைத்து 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சத்தியவேல் இலங்கேஸ்வரன் (வயது 30) என்கிற இளைஞனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது.

இத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் கண் ஒன்று பறி போனது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் ,பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவ அதிகாரி ஒருவர்,பௌத்த பிக்கு ஒருவர், சிவிலியன்கள் ஆகியோர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பந்தமாக நால்வருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி குற்றப்பத்திரமும்தாக்கல் செய்யப்பட்டது.

வேலாயுதன் வரதராஜா (உதயன்), சத்தியவேல் இலங்கேஸ்வரன், வேலாயுதன் வரதராஜா (உதயன்), பூசகர் எஸ்.ரகுபதி சர்மா, பூசகர் ரகுபதி சர்மாவின் மனைவி சந்திரா ரகுபதி ஆகியோரே வழக்கின் எதிரிகள். இத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினர், 26 பேரின் மரணங்களுக்கும் 80 பேரின் படுகாயங்களுக்கும் காரணமாகினர், நாட்டின் முதல் பிரஜையை கொல்லச் சதித் திட்டம் தீட்டி இருந்தனர் ஆகியன உட்பட 110 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

எதிரிகளில் ஒருவரான இலங்கேஸ்வரன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டு விட்டார். இத்தற்கொலைத் தாக்குதலுக்கு தேவையாக இருந்த வெடிகுண்டை புத்தளத்தில் இருந்து முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய வாகனத்தில் கொழும்புக்கு கடத்தி வந்தார் என்று நீதிமன்றில் சட்டத்தரணி மூலம் ஒப்புக்கொண்டு குறைந்த பட்சத் தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரி.எம்.பி.வி வெரவெவ இவருக்கு இன்று 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில விஜேவரதன ஆஜராகி வாதாடி வருகின்றார். இவ்வெதிரியின் சார்பில் சட்டத்தரணி ரவீந்திர டீ சில்வா ஆஜராகினார்.

tamilcnn.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.