Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறிபிடித்த சிங்கள இராணுவத்தின் பேய் முகத்தை வெளிகாட்ட இன்னும் ஒரு உதாரணம் அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sla.JPGயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனிதா அன்னலிங்கம் என்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க பெண் போராளியை கடத்திச் சென்று, கொடூரமாகக் கற்பழித்து மிகவும் வெறித்தனமாக அவரைக் கொலை செய்து, உடல் பாகங்களை சிதைத்து உடலைத் தூக்கிப் போட்டுச் சென்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அனிதா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு செயல்பட்டவர். 2002ம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவர் இயக்கத்தை விட்டு விலகினார். திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளைப் பெற்று நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்பினார். இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் விடுதலைப் புலிகள் இயக்க நடவடிக்கைகள் எதிலும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளை, குறிப்பாக பெண் போராளிகளை வேட்டையாடி வந்த பிசாசுக் குணம் கொண்ட சிங்கள இராணுவத்தினர் கண்களில் அனிதாவும் பட்டார். அவர் முன்னாள் போராளி என்பதை அறிந்து கொண்ட அவர்கள், கொக்குவில், பொற்பதி சாலையில் வசித்து வந்த அனிதாவை அணுகி, உடனடியாக விசாரணைக்காக 512 முகாமுக்கு வருமாறு பணித்தனர்.

இந்த 512 முகாம் என்பது சித்திரவதைக் கூடமாகும். ஆண்களாக இருந்தால் அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்வார்கள். பெண்களாக இருந்தால் கூட்டம் கூட்டமாக இராணுவத்தினர் கற்பழித்து கடைசியில் கொலை செய்து விடுவார்கள்.

இதை அறிந்த அனிதா விசாரணைக்காகப் போகவில்லை. இந்த நிலையில், 2008ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரை இராணுவத்தினர் கடத்திச் சென்றனர். பின்னர் அவரை 512 முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து அவரை ஏராளமான இராணுவத்தினர் கொடூரமாகக் கற்பழித்தனர். பின்னர் அவரைக் கொலை செய்தனர். பிறகு முகத்தில் அமிலத்தை ஊற்றி எரித்தனர். அவரது மார்பகங்கள், பிறப்புறுப்பு, முகம் உள்ளிட்டவற்றை கோரமாக சிதைத்தனர். தங்களது வெறி அடங்கியதும் உடலைகொண்டு போய் ஒஸ்மானியா சாலையில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் போட்டு விட்டுப் போய் விட்டனர்.

அதன் பிறகு 3 நாட்கள் கழித்து அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் வீசுவதை அறிந்து உடலைப் பார்த்து அதிர்ந்தனர். அந்த உடலை யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த படு பாதகச் செயலுக்கு இராணுவம் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தற்போதுதான் இராணுவத்தின் ரஞ்சித் பிரிவுதான் இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இராணுவ அதிகாரியான ரஞ்சித் என்பவன்தான் இந்த வெறிச் செயலுக்குத் தாங்கியுள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த ரஞ்சித்துக்கு இதுபோல ஏராளமான பாலியல் வல்லுறவு மற்றும் கொடூரக் கொலைகளில் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் அசிங்க முகம் குறித்து படிப்படியாக தகவல்கள் வெளியாகி வருகிற போதிலும் இலங்கைக்கு எதிராகவோ அல்லது இலங்கை இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு நாதியும் இல்லையே என்று ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் குமுறிக் கொண்டுள்ளனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_5698.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.