Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் அருந்ததி ராயின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அருந்ததிராய் வெளியிட்டுள்ள அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் அருந்ததி ராயின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அருந்ததிராய் வெளியிட்டுள்ள அறிக்கை – தமிழில் ஜீரிஎன்

02 November 10 07:52 am (BST)

31ம் திகதி காலை பதினொரு மணி அளவில் 100க்கும் அதிகமான காடையர்கள் எனது வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தினர். காஷ்மீர் தொடர்பாக நான் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எதிர்த்து கோசங்களை எழுப்பியபடி எனக்குப் பாடம் படிப்பிக்கப் போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். NDTV, TimesNow மற்றும் News24 ஆகிய ஊடகங்களின் நகரும் ஒளி ஒலிபரப்பு நிலையங்கள் (Out side Broad casting Vans) ஏற்கனவே வந்து இச்செயலை நேரடியாக ஒளிபரப்பக் காத்திருந்தன.

வந்திருந்த கலகக் காரர்களில் பெரும்பாலானவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியின் பெண்கள் அணியைச் சேர்ந்தவர்கள் என ஊடகச் செய்தியாளர்கள் கூறுகின்றார்கள். கலகக்காரர்கள் சென்ற பின் காவல்துறையினர், எதிர்காலத்தில் ஒலிபரப்பு நிலையங்களை எனது சுற்றயலில் அவதானித்தால் தமக்கு அறிவிக்கும் படி கூறினர்.

ஏனெனில் கலகக்காரர்கள் வருவதற்கான முன் அறிகுறியாக இது இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த வருடம் June மாதத்தில் Trust of india வெளியிட்ட பொய்யான செய்தியை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எனது வீட்டுக் கண்ணாடிகளை சேதப்படுத்தினர். அப்போதும் அவர்கள் கூடவே இரண்டு கமராக்காரர்களும் வந்திருந்ததால் இத்தகைய காடையர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின்; ஊற்றுமூலம் என்ன?. இவ்வாறான சம்பவங்கள் நடப்பதற்கு முன்னரே அந்த இடத்தில் நிலை எடுத்திருக்கும் ஊடகங்கள் இத்தகைய குழுக்களின் தாக்குதல்களும் எதிர்ப்புக் கூட்டங்களும் வன்முறையற்றவையாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை கொண்டுள்ளனவா?

இந்தக் காடையர்களின் குற்றச் செயல்களில் இன்று நடந்தது போல அல்லது இன்னும் மோசமான சம்பவங்கள் நடந்தால் ஊடகங்கள் அவற்றுக்கு துணை போனவையாக மாட்டாவா?

இந்தக் கேள்வி இங்கு முக்கியமானது. ஏனெனில் சில தொலைக்காட்சி ஊடகங்களும் பத்திரிகைகளும் காடையர்களின் கோபத்தை என் மீது திருப்பி விடுவதற்கு வெளிப்படையாகவே முயற்சி செய்துள்ளன.

உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பத்திரிகை விற்கும் போட்டியில் சேதிகளை தேடுவதற்கும் செய்திகளை உறுதிப்படுத்தி செய்வதற்கும் இடையிலான கோடு அழிந்து வருகிறது.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்கும் தமது கூடுதலான தொலைக்காட்சித் தரப்படுத்தல் புள்ளிகளைப்( Television rating points) பெறுவதற்கும் ஒரு சிலரைப் பலிக்கடாக்கள் ஆக்க வேண்டுமா?

அண்மையில் காஷ்மீர் தொடர்பாக நடந்த கருத்துக்களில் நானும் மற்றும் பலரும் பேசியவைகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என மத்திய அரசாங்கம் தெரிவித்து விட்டது. எனவே என்னுடைய கருத்துக்களுக்காக என்னைத் தண்டிக்கும் பொறுப்பை வலதுசாரிக் குண்டர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.

Bajrang Dal மற்றும் Rss என்பன வெளிப்படையாகவே என்னுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளப் போவதாக அறிவித்து விட்டன. நாடு முழுவதும் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை முழு நாடுமே அறிந்துள்ளது. அது மட்டுமன்றி அவர்கள் எவ்வளவு தூரமும் போவார்கள் என்பதையும் சகலரும் அறிவார்கள்.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் முதிர்ச்சியான நிலைப்பாட்டைக் காட்டுகின்ற அதேவேளை ஒருசில ஊடகங்களும் சில சனநாயகக் கட்டமைப்புகளும் இவ்வாறான காட்டுத்தனமான நிதியை கைக்கொள்ள முயற்சிக்கின்றன.

பாரதீய சனதாக் கட்சியின் பெண்கள் அணி இவ்வாறு மோசமாக நடந்து கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அஜ்மீர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் குண்டுவெடிப்புடன் தொடர்பு பட்டதாக சுளள இன் மூத்த செயற்பாட்டாளர் ஆன இந்திரேஸ்குமார் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Rssஇன் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள இவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்த கவனத்தை திருப்புவதற்காக இவ்வாறான நடத்தைகளை பெண்கள் அணி மூலம் மேற்கொள்கின்றனர்.

ஆனால் பிரதான பல ஊடகங்களும் இவ்வாறான அநாகரிகமான செயல்களிலும் ஏன் ஈடுபடுகின்றன என எனக்குத் தெரியவில்லை.

அதிகம் பிரபல்யம் இல்லாத கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற ஒரு எழுத்தாளி அல்லது பொதுமக்களைக் கொன்ற குண்டுவெடிப்புக்கு பொறுப்பான பயங்கரமானவர்கள்?

அல்லது இரு ஒருமித்த கருத்துக்களில் ஒன்று சேரலா?

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=31930&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.