Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிபர் ஒபாமா மும்பையில்

Featured Replies

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மூன்று நாள் இந்தியப் பயணமாக, சனிக்கிழமை மதியம் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள்.

பலத்த பாதுகாப்பு வலயத்துக்கு மத்தியில் தரையிறங்கிய அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார்.

தனது மனைவி மிஷெல்லுடன், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, பின்னர் அங்கிருந்த விருந்தினர்களுக்கான புத்தகத்தில் தனது கருத்துக்களை எழுதி கையெழுத்திட்டார்.

பின்னர், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா, மும்பை மக்கள் சோதனையான நேரத்தில் காட்டிய உறுதியையும், இந்தியா வெளிப்படுத்திய கட்டுப்பாட்டையும் பாராட்டினார்.

தீவிரவாதத்தை ஒடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாகவும், அது தொடர்பான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.

தீவிரவாதிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினாலும், பாகிஸ்தானுடன் அவர்களுக்கான தொடர்பு இருப்பதாக இந்தியா உறுதியாகக் கூறி வரும் நிலையில், அதுபற்றி ஜனாதிபதி குறிப்பிட்டவில்லை என்று இங்குள்ள விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிறகு, ஒபாமா பயணத்தின் மையப் புள்ளியாகப் பார்க்கப்படும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி முக்கிய உரையாற்றினார். அதில், இந்தியா மற்றும் அமெரிக்க தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் கலந்துகொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஒபாமா அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையில், 10 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும், அதனால் அமெரி்ககாவில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101106_obamaindiavisit.shtml

தொடர்பு பட்ட செய்திகள்:

இந்தியா வருகிறார் அதிபர் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76128

Edited by akootha

  • தொடங்கியவர்

இப்படி ஒரு அரசியல்வாதி இல்லையே!-இந்தியர்களின் ஏக்கத்தை அதிகரித்த ஒபாமா வருகை!!

ஒபாமாவின் வருகையால் இந்திய மக்களுக்கு என்ன லாபம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் அவரது வருகையால், இந்திய அரசியல்வாதிகள் மீதான இந்தியர்களின் எரிச்சலும், கோபமும், ஆதங்கமும், எரிச்சலும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், ஒபாமாவின் செயல்பாடுகள் அப்படி.

பள்ளிக்கூட மாணவ, மாணவியருடன் சேர்ந்து மிஷல் ஆடிப் பாடினார். ஆனால் ஒபாமா சற்று சங்கோஜப்பட்டார். இருப்பினும் அவரது சங்கோஜம் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சீக்கிரமே அவரும் ஜோதியில் ஐக்கியமானார். சிறார்களுடன் சேர்ந்து அவரும் ஜாலியாக ஆடினார். உலக வல்லரசின் தலைவரான ஒபாமா மற்றும் அவரது மனைவியுடன் சேர்ந்து ஆடியதால் அந்தக் குழந்தைகளின் முகத்தில் தெரித்த நம்பிக்கை படு பிரகாசமாக இருந்தது. இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகத்தான் தெரிகிறது.

இந்த நேரத்தில் ட்விட்டரில் பறந்த செய்திகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. ஏன் நமது இந்தியத் தலைவர்கள் இப்படி மக்களோடு மக்களாக கலப்பதில்லை என்பதே அந்த செய்திகளின் மையக் கேள்வியாக அமைந்தது.

மேலும் அந்த மேடையில் ஒபாமா மட்டுமே இருந்தார். இதுவும் இந்தியாவில் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். யாராவது இப்படி ஒரு இந்தத் தலைவரைப் பார்த்து கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்று அவரை வைத்துக் கொண்டு கூற முடியுமா?

செயின்ட் சேவியர் கல்லூரியில் நடந்ததை உன்னிப்பாகப் பாருங்கள். எட்டு கேள்விகள் வரை ஒபாமாவிடம் கேட்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா சளைக்காமல் பதிலளித்தார்.

இங்கும் இந்திய மக்களின் ஏக்கத்தைத் தூண்டி விட்டுள்ளது ஒபாமாவின் சளைக்காத பதில்கள். நமது இந்தியத் தலைவர்களிடம் இப்படிக் கேட்க முடியுமா?. இப்படியெல்லாம் கேள்வி கேட்பதை ஒருபோதும் விரும்பாதவர்கள் நமது தலைவர்கள். தேர்தலின்போது மட்டுமே அவர்கள் மக்களிடம் வருகிறார்கள். மேலும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக தலைவர்களை அணுகுவது, அவர்களை கேள்வி கேட்பதெல்லாம் நடக்கவே முடியாத காரியங்கள்.

அதேபோல டவுன் ஹால் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று கை குலுக்கினார் ஒபாமா. அவரது பாதுகாவலர்கள் இரு தரப்புக்கும் இடையே தூரத்தை கடைப்பிடித்தனரே தவிர, ஒபாமா மக்களிடம் கை குலுக்குவதையோ, மக்களின் ஆர்வத்தை தடுக்கவோ அவர்கள் முயலவே இல்லை.

இந்திய பாதுகாப்பை இங்கு எண்ணிப் பாருங்கள். எங்காவது இந்திய அரசியல் தலைவர் யாராவது, இப்படி மக்களுடன் கை குலுக்கியுள்ளார்களா?. அல்லது நாம் கை குலுக்கப் போனால் பாதுகாவலர்கள் அதை அனுமதிப்பார்களா?. ஒருவேளை மேற்கத்திய மக்களைப் போல நமது மக்கள் பழக மாட்டார்கள் என அரசியல்வாதிகள் நினைக்கிறார்களோ என்னமோ.

http://thatstamil.oneindia.in/news/2010/11/07/us-president-obama-indian-leaders-politicians.html

மும்பை பள்ளிக் குழந்தைகளுடன் நடனமாடி ஒபாமா-மனைவி

மும்பை ஹோலி நேம் பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் இன்று தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெலும் குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

நேற்று மும்பை வந்த ஒபாமா இன்று காலை பள்ளிக் குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார். முதலில் தீபங்களை ஏற்றிய ஒபாமா தம்பதி பின்னர் குழந்தைகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தது.

மகாராஷ்டிர மீனவர்களின் நாட்டுப் புறப் பாடலுக்கு குழந்தைகள் 'கோலி' நடனமாடியபோது, ஒபாமாவின் மனைவி மிஷேலும் அவர்களுடன் இணைந்து நடனமாட ஆரம்பித்தார்.

இதை கையைத் தட்டி ரசித்துக் கொண்டிருந்த ஒபாமாவையும் குழந்தைகள் சிலர் கையைப் பிடித்து இழுத்து நடனமாட அழைக்கவே, சிறிதும் யோசிக்காமல் அவர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார் ஒபாமா.

நேற்று மும்பை பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட மிஷேல், ரங் தே பாசந்தி படத்தின் பாடலுக்கு அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தாஜ் ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கி வெடிப்பு:

முன்னதாக நேற்றிரவு ஒபாமா தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷேலுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தார். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு ஹோட்டலுக்கு வெளியே திடீர் என்று துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் தயாள் கூறுகையில், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். ஏ. சௌத்ரி கையில் வைத்திருந்த துப்பாக்கியைத் தவறுதலாக அழுத்தியதால் அது வெடித்தது. இதில் சௌத்ரிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/11/07/us-president-obama-indian-leaders-politicians.html

செலவு எவ்வளவு

Edited by akootha

ஒபாமா இந்தய அரசியல்வாதிகளுக்கு சளைக்காத வெறும் புஸ்வாண வார்த்தை ஜாலப் பேர்வழி என்ற பெயரைப் பெற்றுவிடுவார்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவின் இந்தியப்பயணமும் குலைகளை இழந்த தென்னை மரமும்…GTN ற்காக தேவன்

08 November 10 03:48 am (BST)

“Officials in the Indian city of Mumbai (Bombay) have taken extraordinary measures to protect US President Barack Obama ahead of his visit. In their effort to provide maximum security in the run‐up to his visit on Friday, they have removed coconuts which may fall on his head from trees.

All coconuts around the city"s Gandhi museum have now been cut down”

ஆசிய நாடுகளுக்கான தனது ஒன்பது நாட்பயணத்தின் முதற்கட்டமாக ஒபாமா நேற்று இந்தியாவை சென்றடைந்துள்ளார்.

நேற்று அவர் 2 வருடங்களின் முன்பு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 மக்கள் பலியடைந்த தாஜ்மகால் விடுதியை பார்வையிட்டதுடன் மஹாத்மா மகாத்மா காந்தி நினைவுப்பொருட்கள் காட்சிச்சாலையையும் பார்வையிட்டார்.

ஓபாமாவின் ஆசிய பயணத்தின் பின்ணணியில் பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன. முக்கியமாக மேலெழுந்து வருகின்ற சில விடையங்களை இங்கே கவனிப்போம்.

பனிப்போர் முடிவின்பின் அமெரிக்காவை மையப்படுத்திய‐ பயங்கர வாதத்திற்கெதிரான போரை மையப்படுத்திய‐ உலக ஒழுங்கு தோன்றியது. ஆனால் அது வேகமாக மாற்றமடைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று தோன்றி வருகிறது.

கடந்த வருடம் ஏற்பட்ட, அமெரிக்காவில் தோன்றி உலகேங்கும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி அமெரிக்க மையவாத உலகை ஆட்டம் காணச்செய்துள்ளது.

சீனா பிரேசில் இந்தியா ரஸ்சியா ஆகிய நாடுகள் உலக அதிகாரத்தில் பங்கு கேட்கிற நிலைக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சீனாவின் கரங்கள் ஆசிய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தையை வளைக்கத்தொடங்கியுள்ளன.

அரசியல் அதிகாரப்போட்டியில் எதிரிகளாக இருக்கிற நாடுகள் பொருளாதார ரீதியில் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சந்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை எல்லா நாடுகளுக்கும் இருக்கின்றன.

2006ம் ஆண்டு ஜோர்ஜ் புஸ் இந்தியாவுக்கு வந்த போது இஸ்லாமியர் தீவிர வாதத்திற்கெதிரான போரும் கருத்துருவாக்கமும் முதன்மைப்பட்டிருந்தன. ஆனால் ஒபாமாவின் இந்தப்பயணம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களிலேயே முதன்மைக்கவனத்தை செலுத்துகிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.6 சத வீதத்திற்கு உயர்ந்துள்ளது. அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடந்த தேர்தலில் ஒபாமாவின் கட்சி கடுமையான தோல்வியை அடைந்தது. இது எதிர்பார்க்கப்பட்டதாயினும் மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத்திரும்பியமைக்கான முக்கியமான காராணங்களில் ஒன்று அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதார நிலமையாகும். அதில் இருந்து மீள்வதற்கு ஒபாமா கடுமையாக ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

ஒபாமாவின் இந்தப்பயணம் சரிவடைந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது;ஆப்கானிஸ்தானில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது; சீனாவைச் சுற்றி ஒரு பொருளாதார அரசியல் வியூகத்தை அமைப்பது (இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான் என அந்த வளையம் அமைந்துள்ளது.) என்பவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

மறுபுறத்தில் இந்தியாவும் தனது பின்வரும் நலன்களைக் முதன்மைப்படுத்துகிறது.

மேலதிக அமெரிக்க முதலீடுகளை ஊக்குவித்தல். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒபாமாவின் திட்டத்தையிட்டு இந்திய வியாபாரிகள் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொண்டுள்ள நெருக்கம் இந்தியாவை கவலை அடையச் செய்கிறது. அண்மையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் :lol::D டொலர்களை இஸ்லாமியத்தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கென வழங்கி இருந்தது.

பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் பெற்றுக் கொள்ளும் நவீன ராணுவத்தொழில் நுட்பங்களும் தளபாடங்களும் எதிர்காலத்தில் தனக்கெதிராகத்திரும்பலாம் என இந்தியா அஞ்சுகிறது.

பெரும்பான்மையான இந்திய உயர்வர்க்கத்தினர் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருங்கி வருவதைவிடவும் இந்தியாவுடன் நெருங்கி வருவதை விரும்புகிறார்கள்.

அமெரிக்காவுக்கு இங்கு தலையிடியாக இருக்கும் விடையம் என்னவெனில் அமெரிக்காவிடம் இருந்து அளவுக்கு மீறி உதவிகளைப் பெற்றுக்கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போலக் காட்டிக் கொண்டாலும் பாக்கிஸ்தான் மறுபுறத்தில் காஷ்மீரிலும், இந்தியாவினுள்ளும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது. மேலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் உளவு நிறுவனங்கள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்தின் உயர் மட்டத்தில் தலிபான்களுக்கு ஆதரவு இருப்பதாகவும் கருதுகின்றன.

ஆனால் அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எதிர்க்க முனையுமாயின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே உதவிகளைச் செய்யக்கூடும்.

எனவே என்ன விலை கொடுத்தேனும் அது பாகிஸ்தானைத் தன்னருகே வைத்திருக்கவே விரும்புகிறது. எனவே இந்தப் பயணத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தங்களுக்கு இடையில் உள்ள கசப்பையும் முரண்பாடுகளையும் தீர்த்துக் கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி திரைமறைவில் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவையும் தனது பொருளாதார நலன்களுக்காக நண்பனாகவே வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. சர்வதேச விவகாரங்களில் சீனாவுக்கு அளிக்கப்படும் சம அந்தஸ்து தனக்கு அளிக்கப்படுவதில்லை என்னும் எரிச்சலும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலைக்கு வெளியே இன்னமும் வரவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறுவதற்கும் இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது. ஆயினும் அமெரிக்கா இது தொடர்பாக சாதகமான சமிக்கைகள் எதனையும் வெளிக்காட்டவில்லை.

மறு புறத்தில் இந்தியா அமெரிக்காவுடன் கொள்ளும் நெருக்கம் சீனாவையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.

ஒபாமாவின் வருகை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கலக்கமூட்டுவதாக உள்ளது. ஏனெனில் குறிப்பாக அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை முழுமையாகக் திறக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

ஒபாமா வின் வருகையை எதிர்த்து யத்மல் மாவட்டத்தில் முக்கியமான எதிர்ப்புக் கூட்டமும் ஊர்வலமும் நடத்தப்படுகின்றன. விதர்பா பண்ணை விதவைகளின் சங்கம் இந்த எதிர்ப்பை ஒழுங்கு செய்துள்ளது. 1999 ம் ஆண்டில் இருந்து அமெரிக்க பருத்தி விதைகளின் இறக்குமதிகாரணமாகவும் அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்கள் காரணமாகவும் இந்திய பருத்தி உற்பத்தியாளர்கள் மிகக்கடுமையான நட்டங்களை எதிர்கொண்டனர்.இதன் விளைவு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். இந்த விவசாயிகளின் விதவைகள் ஒன்று திரண்டு “ஒபாமாவே திரும்பிப்போ” என்கிறார்கள். அவர்களின் ஒபாமாவினை சந்தித்து மனு ஒன்றைக்கையளிக்கும் கோரிக்கையும் இந்திய அதிகாரிகளால் நிராகரிகப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது. சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி சிலபகுதிகளில் அபரிமிதமாகவும் பலபகுதிகளில் பின்தங்கியதாகவும் இருக்கிறது. இந்தியாவின் அரச இயந்திரம் ஊழல் நிறைந்ததாகவும் வினைத்திறன் குறைந்ததாகவும் இருக்கிறது.

ஓலிம்பிக் போட்டிகளை சீனா நடாத்திய விதமும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடாத்திய விதமும் இரண்டு பிராந்திய வல்லரசுகளின் அரச, பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதனைக் காட்டின.

நிர்மாண வேலைகளில் ஏற்பட்ட தாமதம், விளையாட்டுவீரர்களுக்கான சுத்தமான தங்குமிடங்களை அமைக்க முடியாது போனமை ,சரியாக இயங்காத உபகரணங்கள் என இந்தியா சர்வதேச அரங்கில் மிகவும் அவமானப்பட்டிருந்தது.

சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா 10 வருடங்கள் பின்தங்கியதாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் சீரான பொருளாதார வளர்ச்சியும் அதன் பலம்பெற்று வரும் ஆசியபிராந்திய ராணுவ வலையமைப்பும் அமெரிக்காவை உலக அரசியலில் தனது முதன்மையான பாத்திரம் குறித்து கவலைப்பட வைத்துள்ளது.

2005 ம் ஆண்டில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு தொடர்பான விடையங்களில் மேலும் நெருங்கி வந்துள்ளன.

2009 ம் ஆண்டு மலபாரில் நடந்த யப்பானும் பங்கு கொண்ட இராணுவ ஒத்திகையைக் இங்கு உதாரணமாகக் கூறலாம்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்தியா இராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற வியாபார ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 30 பில்லியன் டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் தனது இராணுவத்தளபாடங்களுக்கு ரஸ்சியாவை நம்பியிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.

இக்கட்டுரை எழுதப்படும் போது அமெரிக்கா போயிங் விமானங்கள் இலத்திரனியல் இயந்திரங்கள் போன்றவற்றை இந்தியாவுக்கு விற்பது தொடர்பான இந்திய‐அமெரிக்க 10 பில்லியன் டொலர் வியாபார ஒப்பந்ததைத் செய்துள்ளது. இது அமெரிக்காவில் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றால் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் என்ன நன்மைகளை அடையுமென எவர்க்கும் தெரியாது.

வளர்ச்சி அடைந்து வரும் ஆசியப்பொருளாதாரங்களைத் தனக்கு கீழ்நிலையில் வைத்து பார்க்காமல் சமதையாக பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்பதைப்பயன்படுத்தி சரியான பொருளாதர ஒப்பந்தங்களை செய்ய முடியும் என ஆசிய பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்திய ஆளும் வர்க்கம் தனதும் தான் சார்ந்த முதலாளிகளினதும் நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் தன்மையே வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 மில்லியன் புதிய மத்திய வர்க்கத்தை உருவாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.

அதே நேரத்தில் பில்லியன் :D கணக்கானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்ச்சென்றுள்ளனர்

இவர்களுக்கு அமெரிக்காவின் முதலாவது கறுப்பு சனாதிபதி தான் பார்வையிடச் செல்லுமிடங்களில் தேங்காய்களை பறிக்கவும் குரங்குகளைப் பிடிக்கவுமான தற்காலிக வேலையே வழங்கியுள்ளார்.

ஒபாமாவின் இந்தியப்பயணமும் குலைகளை இழந்த தென்னை மரமும்…GTN ற்காக தேவன்:‐

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=32148&cat=3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.