Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ENDLF wants another IPKF to implement 13th Amendment

Featured Replies

[TamilNet, Monday, 15 November 2010, 21:11 GMT]

In an ‘extraordinary meeting’ convened in Bangalore, Saturday and Sunday, Eezham National Democratic Front (ENDLF), a paramilitary group based in India, passed a resolution urging India to send a ‘new peace making force’ to fulfil the promise made by Rajiv Gandhi on the North-East Provincial Council. If India can’t help it should constitute a higher level international committee of countries that accommodated the refugees to bring in justice, the resolution further said. ENDLF, mainly having former members of PLOTE and led by Paranthan Rajan, is a pro-Indian militant outfit created by the Indian intelligence agencies to defend the Indian agenda in the late 1980s. The ENDLF sacrificed 1700 of its cadres pinning faith on the promise made by Rajiv Gandhi, the resolution said.

“We cannot live any longer in fool’s paradise hoping in vain that Sri Lankan government will condescend to agree to give us a free and peaceful life,” the resolution observed.

The ENDLF urged India to conduct judicial inquiry on the carnage of Tamils by Sri Lanka. It requested India to maintain the refugee camps in Tamil Nadu properly and also requested the central government to free the refugees from the fear of the Q Branch (Tamil Nadu state police intelligence), which according to the resolution intimidates and treats the refugees as slaves.

The ENDLF wanted India to stop Sinhala colonisation, evict those who were brought in after 1948, stop the construction of Buddhist temples in Tamil land, demolish those that were already constructed, and wanted India to evict Sinhala fishermen colonised the north-east coast.

For a brief period of three years when the IPKF was there the colonisation was stopped, the resolution pointed out.

Parallel to former RAW Deputy Director, Dr. Chandrasekaran’s briefing to the diaspora in London, the ENDLF resolution in Bangalore is another probing exercise of India, political observers said.

As the TamilNadu state elections are approaching soon there will be a conning competition between the Congress and the DMK, the observers also said, citing the exposure of the Q Branch.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33024

************************************************************************************************************************************************

2010ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13 மற்றும் 14ம் நாட்களில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினரால் பெங்களுரில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

November 14,2010

(01) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யினர் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல. பலதரப்பினரும் எதிர்த்தவேளை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இறுதிவரை ஆதரித்துச் செயற்பட்டது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம். மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ்காந்தி அவர்களது வாக்குறுதியை ஏற்று மாநில அரசொன்றை ஏற்படுத்துவதற்காக 1700க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை இழந்துள்ளது ஈ.என்.டி.எல்.எப். ஆதலால் இன்றைய நிலையில் எங்களது ஈழத்தமிழ் இனத்தை சிங்கள எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் கோரும் உரிமை எங்களுக்கு உண்டு.

(02) சிங்கள ஆட்சியாளர் தமிழ் இனத்தவரை வாழவைக்கப் போகிறார்கள், உரிமைகள் வழங்கப் போகிறார்கள் என்று கூறுவதும், எதிர்பார்ப்பதும் வீனான கற்பனையாகும். தமிழ் இனத்தை அழிப்பதுதான் பௌத்த சிங்கள இனத்தவரின் கொள்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்தத்தான் இந்தியா 1987ல் இலங்கை விடயத்தில் தலையிட்டது. 50,000 துருப்புகளை வைத்துக் கொண்டு தமிழருக்கு உரிமை பெற்றுக் கொடுக்க முடியாமல் திரும்பியது இந்தியா. சிங்களத் தலைமை ஓர் நயவஞ்சகமான தலைமை, அவர்களை நம்பி எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது. எனவே இந்தியா ஈழத் தமிழரையும் அவர்களது உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், முன்னைநாள் பிரதமர் அமைதிப்படையை அனுப்பியது போன்று ஓர் படையை அனுப்பி தமிழ் இனத்துக்கு உயிர்ப் பாதுகாப்பையும் நில உரிமையையும் பெற்றுத் தரவேண்டும் என்று ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

(03) 1987ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கிய மாநிலம் ஒன்றினை ஈழத் தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

(04) இந்தியாவையும் ஈழத் தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. மறுவாழ்வு, மறு கட்டமைப்பு என்று கூறி சிறிலங்கா அரசு சிங்கள மக்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றி வருகிறது. இதனை இந்தியா உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

(05) பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட 1948ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரது பூர்விக நிலங்களில் சிங்கள அரசால் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் முற்றாக அகற்ற வேண்டும்.

(06) புத்த பிக்குகள் ஈழத்தமிழருக்குச் சொந்தமான பூர்விகப் பகுதிகளில் எங்கெங்கு அரசமரங்கள் இருக்கின்றனவோ அவற்றின் கீழே பொளத்த மதத்தைப் பரப்ப அரசின் பலத்த ஆதரவோடு புத்தர் கோவில்களைக் கட்டி வருகின்றார்கள். அவ்வாறு கட்டும் சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுத்த நிறுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே கட்டப்பட்ட புத்தர் கோவில்களை இடித்து அகற்ற வேண்டும் என்றும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

(07) 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாத எதிர்நடவடிக்கை அல்ல, சிங்கள இனத்தவரின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பயங்கரவாதம் என்று உலகுக்குக் காண்பித்த சிங்கள அரசு செய்தது இனப்படுகொலைதான். இதனை விசாரிப்பதற்கு மிகப்பெரிய சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய மக்கள் இதனை கண்டிப்பாக வரவேற்பார்கள். எந்த நாடும் தனது சொந்த மக்கள் மீது இவ்விதம் குண்டுகள் வீசி அழித்தது கிடையாது. அங்கு நடைபெற்றது எதிர் நாட்டின் மீது படையெடுப்புத்தான், எனவே நடத்தப்பட்ட படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு இந்தியா முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

(08) ஈழத் தமிழரது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஈழத்துக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை மத்திய அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் கேட்ட எங்கள் மக்கள் தமிழக பொலிசாரால், குறிப்பாக கியூ பிரிவினரால் முகாம்களுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எங்கள் மக்களை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும். தீபெத்திய அகதிகளுக்கு வழங்கிய உரிமைகள் போன்று ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்கள் நாடு திரும்பும் வரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்விதமான ஓர் தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை இந்தியாவில் இருக்கும் ஈழத்து அகதிகள் யாரையும் திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

(09) வடக்குக் கிழக்குக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. வடக்கு-கிழக்குக் கரையோரப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டும்.

(10) மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியா கருதினால், சிறிலங்கா அரசு தமிழர் மீது யுத்தம் புரிவதற்கு நிதி உதவி வழங்குவதற்காக, “நன்கொடை நாடுகள்” என்று (னுழழெசள ஊழரவெசநைள) ஓர் அமைப்பை ஏற்படுத்தி போர்க்கருவிகள் வாங்குவதற்கு பெருமளவு பணஉதவி செய்தனர் அதேபோன்று தமிழ் இனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க, தமிழர்கள் அகதிகளாக வாழும் நாடுகள் அனைத்தையும் இணைந்த அமைப்பொன்றினை ஏற்படுத்த வேண்டும். “சமாதான நாடுகள்” என்ற அமைப்பின் மூலம் எங்கள் இனத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வொன்றினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி தீர்மானங்கள் அனைத்தும் இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒரே மனதாக தீhமானிக்கப்பட்டன.

http://www.theepori.com/newsfull.php?newsid=9970

Edited by Nellaiyan

நாம் எல்லோரும் இன்று ஒரே புள்ளியில் நிற்கிறோம்:

- விடுதலை புலிகளை எதிர்த்தவர்கள் / ஆதரித்தவர்கள்

- ஆயுத போரரட்டம் முடிந்தபின் (புலிகள் அழிக்கப்பட்டதில் இருந்து ) ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என நம்பியவர்கள் / நம்பாதவர்கள்

- இந்தியா மீது பலத்த நம்பிக்கை வைத்தவர்கள் / வைக்காதவர்கள்

எல்லோருக்கும் இந்த பதினெட்டு மாதங்கள் என்ன சொல்லியுள்ளன என மேலே வைக்கப்பட கோரிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.