Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Research and Analysis Wing [RAW]இன் ராசதந்திரமும், பரமார்த்த குரு சீடர்களும் -ஜீவமுரளி

Featured Replies

ஒற்றர்கள், உளவாளிகள் என்ற சொற்பதம் வரலாற்று கதைகள் தொடங்கி அம்புலிமாமா, சிஐடி மூசா கதைகள் வரைக்கும் வாசிக்கும் வாய்ப்பு உங்கள் பலருக்கும் கிட்டியிருக்கும். இந்த சொற்பதங்கள் பல்வேறுபட்ட மனிதர்களுக்கும் பல்வேறுபட்ட உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. பயம் திகில் நடுக்கம் மானம் பழியுணர்ச்சி பாசம் நட்பு தேசம் காதல் வீரம் கௌரவம் திமிர் மொழியுணர்வு மதஉணர்வு தந்திரம் என பன்முகதன்மை கொண்டவை. பாமர மக்களுக்கு பயம் திகில் நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. புடித்தவர்களுக்கு மானம் தேசம் வீரம் பழியுணர்ச்சி ஆசை என்பவற்றை ஏற்படுத்தக்கூடியது. மேற்குறிப்பிடப்பட்ட உணர்வுகளை ஒற்றர்களும் உளவாளிகளும்தான் மனிதர்கள் மத்தியில் வெகுஜனமயப் படுத்தினார்கள். இதற்கான சான்றுகளை வரலாற்று கதைகள் முழுக்க தேடினால் வரிக்கு வரி பன்முகத்தன்மையுடன் இந்த உணர்வுகள் வெளிப்படும்.

இந்துமத அடிப்படைவாதத்தில் கட்டமைக்கப்பட்ட இந்தியதேசத்தின் வரலாற்றுக்கதைகளில் "நராதர்" என்றொரு பாத்திரம் உண்டு. இது ஒற்றர்களினதும் உளவாளிகளினதும் குறியீடு. நாரதரின் பாத்திரம் பாமர மக்களினாலும், படித்தவர்களினாலும், பல்கலைக்கழகங்களாலும் கூட அங்கீகரிக்கப்பட்டவை. இந்த நாரதரின் பாத்திரம் "தந்திரம்" என்ற உணர்வை மனிதர்கள் மத்தியில் மிகுதியாக ஏற்படுத்தும். தந்திரம் என்றால் ஏமாற்றுதல் காலைவாரிவிடுதல் மோசடிசெய்தல் நட்டாற்றில் விடுதல் அபகரித்தல் கொள்ளையிடுதல் சுத்துமாத்து என பல அர்த்தங்களில் தொழிற்படுகின்றது. தந்திரம் என்ற சொற்பதம் அன்றைய இந்தியாவினதும் இன்றைய நவீன இந்தியாவினதும் இராசதந்திரம் என்ற மந்திரமாக தொழிற்படுகிறது.

சும்மாயிருந்த முருகனையும் பிள்ளையாரையும் நாரதர் கொழுவிவைத்து சண்டையை மூட்டிவைத்த கதையை ஒருதடவை மீட்டுப்பார்ப்போம். சிவனே! என்றிருந்த சகேதரர்களை தூண்டிவிட்டு இந்த உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறீர்கள் என போட்டியைத்தொடங்க முருகன் வேலையும் மயிலையும் கொண்டோட பிள்ளையார் செய்வதறியாது திணற அப்பனையும் அம்மையையும் சுற்றிவந்தாலே உலகத்தை சுற்றிவந்தது சமம் ஆகும் என நாரதர் பிள்ளையாருக்கு போட்டுக் கொடுத்து ஞானப்பழத்தை பிள்ளையாருக்கு வாங்கிக்கொடுக்க முருகன் குடும்பத்தோடு கோவித்துக்கொண்டு கோவணத்துடன் நடுத்தெருவுக்கு வந்து ஆண்டியானார். இதே புனைகதைவழித் தொழிற்ப்பாடுதான் நாரதரின் துணையோடு முள்ளிவாய்காலில் கோமணத்துடன் ஊர்வலமாக செல்லும் பாய்க்கியத்தை பிரபாகரனுக்கு பெற்றுக் கொடுத்தது.

அரிச்சந்திரன் கதையைப்பார்ப்போம் வாழ்நாளில் பொய்யே சொல்லமாட்டேன் என்றிருந்த அரசனை பொய் சொல்லவைத்துக் காட்ட முடியுமா என சவால்விட்ட நாரதர் அரிச்சந்திரனையும் நடுத்தெருவுக் கொண்டுவந்தார். மனிதர்களை ஒருவருடன் ஒருவர் கொழுவிவைத்து முடிந்துகொடுத்து கோழ்மூட்டிவைத்து ஒட்டுப்பார்த்துகொடுத்து நாரதர் பலாபலன்கள் அடைவதைத்தான் "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என்ற கோட்டேசனுடன் இந்துமதமும் இந்தியவரலாறும் எங்களுக்கு சொல்லித்தந்திருக்கிறது.

மனிதர்களுக்கு தோன்றக்கூடிய உணர்ச்சிகளில் இரண்டுவகையான உணர்வுகள் இந்த ஒற்றர்களுக்கும் உளவாளிகளுக்கும் ஏற்படுவதில்லை அவை பின்வருமாறு

அ. வெட்கம்

ஆ. குற்றஉணர்வு

வெட்கம் குற்றஉணர்வு ஆகிய உணர்ச்சிகள் தனக்கு தோன்றிவிட்டதாக கூறும் ஒற்றரும் உளவாளியும் நாரதருமான சந்திரசேகரன் லண்டன் தமிழர்கள் மத்தியில் பழைய மொந்தையில் புதிய கள்ளை ஊற்றிக் கொடுத்திருக்கின்றார். இந்தக்கள்ளை தேசம் நெற் அன்ட் கொம்பனி பரிமாற பரமார்த்தகுருவின் சீடாகளான சம்பந்தனும் தமிழீழவிடுதலை இயக்கங்களின் வாரிசுகளும் அள்ளியள்ளி பருகியிருக்கின்றனர.

சந்திரசேகரனின் பேட்டியை மேலோட்மாக பார்த்தால் பாவமன்னிப்பு கேட்பது போல தோன்றும். ஆனால் அதற்குள் இந்தியாவின் பொருளாதார நலனும் திமிரும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை கீழேயுள்ள நாரதர்த்தனமான பதில் உணர்த்துகின்றது. "இலங்கைத்தமிழ் இளைஞர்களை ஆயுதப்பயிற்சிக்கு உட்படுத்திய இந்தியா இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைக்குப் பொறுப்பில்லையா?" என்ற கேள்விக்கு சந்திரசேகரன் பதிலளிக்கையில் "இந்தியா ஆயுதப்பயிற்சி மட்டும் கொடுத்தது. இந்தியா இலங்கைத்தமிழரின் அரசியற்பிரச்சினையை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அது தமிழரைப்பொறுத்தது. அவர்கள் ஆயுதத்தைப் பாவித்து தங்களைதாங்களே அழித்துக்கொண்டார்கள்." இதைவிட இன்னுமொரு நக்கலும் திமிரும் சேர்ந்த கூற்றை பாருங்கள்

"இந்தியா இயக்கங்களுக்கு ஒருநாளும் அரசியல் வகுப்பெடுக்கவில்லை ஈழத்தை பெற்றுத்தருவாக சொல்லவில்லை அது மகிந்தவிற்கும் தெரியும். ஏலுமெண்டால் இந்தியாவின் உதவியில்லாமல் ஈழத்தை பெறும் வழியைப்பாருங்கள்."

இது சந்திரசேகரன் சொல்லும் பச்சைப் பொய். உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிங்களவரை எப்பிடியெப்பிடி எல்லாம் கொல்ல வேண்டும் எண்று சொல்லித்தான் பயிற்சியளித்தார்கள். சேலம் கொள்ளிமலையில் ரொலோவிற்கு பயிற்சியளித்த முன்னாள் தமிழ் இராணுவ அதிகாரி--- சிங்களவரை கொல்லுங்கோடா என்று சொல்லித்தான் பயிற்சியளித்தார். ஏன், EPRLF க்கு சிவபுரத்தில் பயிற்சி அளித்த நாயர் கூட சிங்களவரைக் கொல்லுங்கோடா என்றுதான் பயிற்சி அளித்தார். இதற்கு சாட்சியாக என்னைப்போல இன்னும் பலர் புகலிடம் எங்கும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். இந்தியா எடுத்த அரசியல் வகுப்பில் முக்கியமானது என்னவென்றால் அது சிங்களவரை கொல் என்பதுதான்.

சந்திரசேகரனின் இந்தத் திமிர்த்தனமான பதிலை புரிந்து கொள்வதற்கு நான் உங்களை கோடம்பாக்கம் ENLF காரியாலயத்துக்கு அழைக்கிறேன். இந்தியா இயக்களுங்கு ஆயுதப்பயிற்சி வழங்கி ஆறுதல் அடைந்த பிற்பாடு

அங்கே கார்திகேசன் என்றொரு நாரதர் காலை எட்டுமணிக்கெல்லாம் வந்துவிடுவார். பாலகுமாரைச் சந்திப்பார் சிறிசபாரத்தினத்தை சந்திப்பார் பிபாகரனைச் சந்திப்பார் பத்மநாபாவைச் சந்திப்பார் ஏன் விசுவானந்ததேவனையும் சந்திப்பார் இப்படி ஓடியோடி எல்லாரையும் சந்தித்தார். ஒருகட்டத்தில் நம்ம தலைவர்கள் கார்த்திகேசனைக் கண்டால் ஓடி ஒழிக்கத் தொடங்கினர்கள். ஆனால் கார்த்திகேசனோ கண்ணுக்குள்ள எண்ணை விட்டுக்கொண்டு கோடம்பாக்கம் அடையாறு அண்ணாநகர் என சுத்திச்சுத்தி எல்லாரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரிடமும் ஆளுக்காள் என்ன செய்கிறீர்கள் என்று விசயங்களை கறந்தார். ஆளையாள் கோள் மூட்டிவிட்டார. தீ மூட்டிவிட்டார். தீ கனந்து கொண்டிருந்தது. இயக்கங்கள் உட்கொலைகளை செய்துகொண்ருந்தன. இந்தியாவில் உள்ள நாரதர்கள் எல்லோருக்கும் அது நன்றாகதெரியும் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பிரபாகரன் மற்றைய இயக்கங்களை அழிக்கத் தொடங்கினான் அப்பொழுதும் நாரதர்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் சந்திரசேகரன் சொல்வது போன்று இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட என்றுமே விரும்பியதில்லை என்பது காரணமாகவிருக்கலாம்??

பின்பு பிரபாகரன் ராஜீவ்காந்தியை கொன்றான் அப்பொழுதான் நாரதர்கள் பிரபாகரனை கண்டுகொண்டனர். வளர்த்தகடா மார்பில்பாய்தது அதன்பின் வளர்த்தவர்கள் முள்ளிவாய்காலில் கடாவை தங்கள் வேள்விக்கு பலியாக்கினர். இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற நயவஞ்சகமான இந்துத்துவக் கோட்பாட்டைத்தான்.

உலகத்திலுள்ள எல்லா உளவுத் துறைகளுக்கும் தனித்தனியா ஸ்ரைல்கள் பொதுத் தன்மைன்மைகள் உள்ளன. மாறாக இந்திய உளவுத்துறையான றோவிற்கு மட்டுட்மே இந்துத்துவ புனைகதை வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி இருக்கின்றது. நாரதரின் வாரிசுகள் மட்டுமே றோவை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தளவிற்கும் தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டுப் போன செல்வ நாயகத்தின் மகன் சந்திரகாசன்தான் இயக்கங்ளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கான தொடர்புகளை இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொடுத்தவர். அதன்பின் 85 ம் ஆண்டு இவரை CIA ஏஜன்ட் எனச் சொல்லி RAW ஒரு நாகமாடியது. சந்திரகாசனை நாடுகடத்த RAW விமானத்தில் ஏற்றியது. தமிழ் நாடு கொந்தளித்தது. அதனால் அவரை விமானத்திலிருந்து RAW இறக்கிவிட்டது . அதன்பின் அவரது குரலை பிபாகரன் கோவணத்துன் ஊர்வலமாகப் போன பின் பிபிசி வானொலியில் கேட்கமுடிந்தது. சந்திரகாசன் ஒரு மாதாமுடி! மலைவிழுங்கி! இவ்வளவு நடந்தபின்னும் ஒன்றுமே தெரியாதவர் போல் அமசடிக்கிக் கொண்டுடிருக்கிறார். இப்பொழுது அவர் நொந்து போன தமிழ் உறவுகளின் காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறார். ஒருவேளை ஆப்கானிஸ்தானில் ஒரு கமித்காசாய் உருவானதுபோல சந்திரகாசன் உருவாக இன்றளவிலும் முயற்சி செய்து கொண்டிருக்கலாம் யாரறிவார் பராபரனே! அதற்கான போட்டிகள் டக்ளஸ் பிள்ளாயான் கருணா கேபி சம்மந்தன் சிர்த்தாத்தன் செல்வம் அடைக்கலநாதன் என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன? கமித்காசாய்களால் இலங்கை மக்களுக்கு என்றுமே விடிவு வரப்போவதில்லை.

இந்த இடத்தில்தான் அருந்ததிராய் என்ற ஒரு மனிதப்பிறவியை நினைவு கூர விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து கொண்டே இந்திய அரசை விமர்சித்துக் கொண்டிருக்கும் அருந்ததிராய் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல காஸ்மீர் இந்தியாவின் பகுதியாக என்றுமே இருந்ததில்லை என்று சொல்லும் அருந்ததிராய் ஆதிவாசிளுக்காக போராடும் அருந்ததிராய் பத்து வருடங்களுக்கு முன் ஒருதடவை ஐரோப்பாவிற்கு வந்திருந்தார். அவரின் நாவல் பிரபலமான பொழுது ஐரோப்பா முழுக்க அவருக்கு மேடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. பேட்டிகள் எடுக்கப்பட்டன. பேர்ளின் நகரில் நடந்த கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன்

"ஐயையோ என்வீட்டுக்கு காசு தண்ணிமாதிரிவந்து கொட்டுகிறது யாரோ காசு கொட்டுகிற பைப்லைனை என்வீட்டிற்கு திருப்பிவிட்டிருக்கிறார்கள் நான் திணறிக்கொண்டிருக்கிறேன்" என தனது பேச்சில் குறிப்பிட்டார் கூட்டத்தில் சிரிப்பொலிகள் எழுந்தன.

அதன்பிறகு அருந்ததிராய் நர்மதா அணைக்கட்டுக்காக மக்களை வெளியேற்றாதே, ஆதிவாசிகளைக் கொல்லாதே, மாவோயிஸ்டுக்களை அழிக்கிறேன் என்று சொல்லி இந்தியாவின் கனிமங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்காதே, காஸ்மீரை தனியேவிடு என்று தெருவில் இறங்கி சனங்களுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். இந்த வரலாற்றுக் காலகட்டத்தில்தான் இந்தியா இலங்கைத் தமிழ் மக்களின் பொருளாதார மேப்பாட்டுக்கா பாடுபடுகிறது என உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்திய மக்கட்தொகையில் பாதிக்குமேற்பட்டவர்கள் அரை வயித்துக் கஞ்சிக்காய் பாடாய் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்தான் அது இலங்கைத் தமிழ்மக்களின் பொருளாதார வளர்ச்சிபற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதன் நீட்சியாகவே இந்திய நாரதர்த்துறையின் செயற்பாடுகள் புகலிடத் தமிழ் மக்கள்வரைக்கும் வந்தடைந்திருக்கிறது. றோவின் இரத்தக்கறை படிந்த கரங்களை சந்திரசேகரன் லண்டன் வரையும் தூக்கிகொண்டுவந்து பாவமன்னிப்பை மிகவும் திமிர்த்தனமாக கேட்டிருக்கின்றார். இதை பரமார்த்த குருவின் சீடர்களான தேசம்நெற் ரவிசுந்தரலிங்கம் இராஜேஸ்வரி சம்மந்தன் மற்றும் இயக்கவாரிசுகள் ஆறஅமர்ந்து கேட்டிருக்கின்றார்கள். இந்தியா தூங்கிவிட்டதா விழிப்பாக இருக்கிறதா என அணைந்த கொள்ளிக்கட்டையை எடுத்துக்கொண்டுபோய் தேம்ஸ்நதியில் வைத்துப் பார்த்திருக்கிறார்கள். கொள்ளிக்கட்டை சீறவில்லை அதற்காக தேசம்நெற்றின் ஆசிரியர் ரி.சோதிலிங்கம் அவர்கள் சந்திரசேகரனுக்கு நன்றி தெரிவித்து கௌரவித்தார். இவர்களைப் பொறுத்தவரையில் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதை உளப்பூர்வமக நம்புகிறார்கள். மனப்பூர்வமாக வரவேற்கின்றார்கள் இவர்களும் கோமணத்துடன் ஆண்டியாவார்களா? ஞானப்பழம் கிடைக்குமா? அல்லது நாரதரின் நாமமும் பட்டையும்தான் கிடைக்குமா? என்பதை இனிவரும் காலங்கள்தான் சொல்லு

http://www.appadiyaa.com/2010/11/research-and-analysis-wing-raw.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.