Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப் பின்னர் ஜனநாயகத் தோல் போர்த்திய இராணுவ ஆட்சி ‐ இது இனஒழிப்பு நடவடிக்கையின் இன்னுமொரு முகமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் பின்னர் ஜனநாயகத் தோல் போர்த்திய இராணுவ ஆட்சி ‐ இது இனஒழிப்பு நடவடிக்கையின் இன்னுமொரு முகமா? ‐‐‐‐ மங்களநாதன் அரவிந்தன்‐‐‐‐

22 November 10 03:06 am (BST)

இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்தம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ மயமான ஆட்சியின் கீழ் கடந்த வருடம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது,

பல்வேறு துறைகளிலும், பல்வேறு நிலைகளிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த பெரும்பான்மைக் கட்சிகளின் அரசாங்களுக்கு தீராத தலையிடியைக் கொடுத்து வந்த விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களை இல்லாதொழித்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரும். அவரது அரசியல் ஆதரவாளர்களும் பெருமை பேசி வருகின்றார்கள்.

நாட்டில் 30 வருடங்களாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தேசிய வீரனாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருவகிக்கப்பட்டுள்ளார். யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்களாகின்றன. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த வெற்றியைக் கொண்டாடும் மனப்போக்கிலிருந்து மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் இன்னும் விடுபடவில்லை.

இந்த வெற்றிப்பெருமிதம் மேலோங்கிய அரசியல் போக்கு இன்னும் பல வருடங்களுக்குத் தொடரக்கூடிய சாத்தியக் கூறுகளும், இராணுவ மயப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகளைக் கொண்ட ஒரு சிவில் நிர்வாகத்தையும் முன்னெடுக்கும் போக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும், இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளும், பாதுகாப்புச் செலவினங்களை யுத்தகாலத்தைப் போன்று மேலும் உச்சநிலைக்கு உயர்த்திச் செல்லுகின்ற தன்மையும் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வலுவிழக்கச் செய்ததன் ஊடாக மிகவும் வலுவான சர்வ அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்குள் இலங்கை இப்போது பிரவேசித்திருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அதன் பிதாமகனாகிய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த ஆட்சிமுறையில் ஜனாதிபதி ஜனநாயகக் கட்டுக்கோப்புகளுக்குத் தலைசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கான சட்டவிதிமுறைகளை அவர் புகுத்தியிருந்தார். அதில் முக்கியமாகக் கருதப்பட்டதும், கருதப்படுவதும் ‐ ஜனாதிபதியாக ஒருவர் தனது வாழ்நாளில் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்ற முக்கியமான அம்சமாகும்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரமும், நீதிமன்றத்தின் ஊடாகக் கூட கேள்வி கேட்க முடியாத உச்ச நிலை அதிகாரம் கொண்டவராகவும் ஜனாதிபதி பதவியை ஜே.ஆர்.ஜயவர்தன உருவாக்கியிருந்தார். நீதிச்சேவை, மனித உரிமை விவகாரம், தேர்தல் ஆணையகம், சிவில் நிர்வாகத்திற்கு உறுதுணை புரியும் பொலிஸ் சேவை, போன்ற விசேடமான பிரிவுகளுக்கான ஆணைக்குழுக்கள் அல்லது ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டிருந்தது. ஆயினும் பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இந்த அதிகாரங்கள் இப்போது ஜனாதிபதியின் வசப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதனால், ஊடக சுதந்திரம், மனித உரிமையாளர்கள், நீதிச்சேவையாளர்கள் போன்றவர்களின் அரசியல் தலையீடற்ற செயற்பாடுகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விசேட நிலைமைகளில் நியமிக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளும் கூட அரசியல் தலையீட்டு முறைமையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படையான பார்வையில் ஜனநாயக நடைமுறைக்கமைய மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதான ஒரு தோற்றப்பர்டு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் அது தனிமனித தீர்மானங்களை விருப்பு வெறுப்புக்களை கட்டுப்பாடுகள் எதுவுமற்ற நிலையில் நிறைவேற்றத்தக்க ஜனநாயகப் போர்வையில் ஒளிந்திருக்கின்ற சர்வாதிகார ஆட்சிமுறைக்கே இட்டுச் செல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஆட்சி முறையின் கீழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரும், அவருக்கு ஆதரவானவர்களும் அதிகாரம் நிறைந்த அரசாங்க பதவிகளை ஜனநாயக முறை என்ற போர்வையின் கீழ் ஆக்கிரமிப்பதற்கு வழி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்மூலம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாகரிக காலத்து ராஜ வம்வத்தின் வழியில் வந்தவரைப்போல குடும்ப ஆட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகோலப்பட்டுள்ளது.

இந்த அதிகாரங்களின் ஊடாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மை இனத்தவரின் அரசியல் அபிலாசைகளை நிரந்தரமாகக் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைக்கு நிரந்தரமான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராகவோ, ஜனாதிபதி மற்றும் முக்கிய ஆட்சியளார்களுக்கு எதிராக நாட்டு மக்கள் குரல் எழுப்பவோ ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்புகளைத் தெரிவிக்கவோ முடியாது. நீதிச்சேவையின் ஊடாகக் கூட அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி போராட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக போருக்குப் பின்னரும் நாட்டின் பாதுகாப்பைக் குறிக்கின்ற தேசிய பாதுகாப்பு என்ற மாய வார்த்தையைப் பயன்படுத்தி சிவில் நடவடிக்கைகள், சிவில் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்திலும் தலையீடு செய்யத்தக்க அதிகாரத்தை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் பெற்றிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவராகிய கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார். முப்படைகளின் தளபதியாகப் பதவி வழியாகத் திகழும் ஜனாதிபதியிலும் பார்க்க பாதுகாப்பு விவகாரங்களிலும், இராணுவச் செயற்பாடுகளிலும் அதிகாரம் மிக்கவராக அவர் விளங்குகின்றார்.

யுத்த காலத்திற்காகவே முழுமையான இராணுவ பயிற்சி பெற்ற அதிரடிப்படைப் பொலிஸ் அணி நாட்டில் விசேடமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவு அண்மைக்காலம் வரையில் பொலிஸ் சேவையின் கீழேயே செயற்பட்டு வந்தது. அது இப்பொழுது இராணுவ சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. இராணுவ விவகாரங்களில் சர்வ வல்லமை மிக்கவராகக் கருதப்படுகின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே இதனை ஏற்படுத்தியுள்ளார்.

இவருடைய தலைமையின் கீழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ முகாம்களையும், அதிரடிப்படை முகாம்களையும் அமைப்பதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இடம், காலம், நேரம் என்ற வித்தியாசமின்றி நாட்டின் எந்தப் பகுதிகளிலும் தற்கொலைத் தாக்குதல்களும், குண்டு வெடிப்புக்களும் இடம்பெறலாம் என்றிருந்த யுத்த காலத்தில் கூட இத்தகைய இராணுவ பிரசன்னம் நாட்டில் எவராலும் ஏற்படுத்தப்படவில்லை.

யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் பாதுகாப்பிற்காகவும், யுத்தச் செயற்பாடுகளுக்காகவும் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினரும், அதிரடிப்படையினரும் இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பிரதேசங்களில் இராணுவப் பயிற்சி முகாம்களும், நவீன வசதிகள், குடியிருப்புக்களுடன் கூடிய நிரந்தர இராணுவ முகாம்களையும் அமைப்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் காடுகளில் விடுதலைப் புலிகள் தமது முகாம்கள் பலவற்றையும், பயிற்சி முகாம்களையும், விமான ஓடுபாதைகள், வெடி பொருள் களஞ்சியங்களுடன் கூடிய மறைவிடங்கள் என்பவற்றை அமைத்திருந்தார்கள். கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு, ஏனைய இரண்டாம் நிலை மற்றும் முன்னணி தலைவர்கள் அனைவரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். இதனால் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முற்றாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இப்போது, காடுகளில் எல்லாம் இராணுவத்தினர் நிறுத்தப்பட்ருக்கின்றார்கள். நிலையான இராணுவ முகாம்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தம் நடைபெற்ற காலங்களில் பாதுகாப்பு காரணத்திற்காக சிவிலியன்கள் காடுகளுக்குள் செல்வது தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிந்தபின்பும் அந்த நிலைமை இன்னும் நீடிக்கின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்ற இந்த வேளையில் காணிகளில் சென்று குடியிருப்பதற்கு வீடுகள் இல்லாதனால், தற்காலிகக் கொட்டில்களை அமைத்து அதில் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், காடுகளுக்குள் சென்று மரம் தடிகள் வெட்ட முடியாத நிலைமை நிலவுகின்றது.

நீர்வளம் மிகுந்த முக்கிய நீர்ப்பாசன குளங்களின் அருகில் காட்டுப்பாங்கான பிரதேசங்களில் இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் குளிப்பதற்கும், தமது குளங்களில் மீன்பிடிப்பதற்கும் ஏனைய விவசாயத் தேவைகளுக்கும் இந்தக் குளங்களுக்குச் செல்ல முடியாதவாறு அந்தப் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இராணுவ மயமாகியுள்ள மீள்குடியேற்றப் பிரதேசங்கள், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் இல்லாத வேளையில் இத்தகைய இராணுவ ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மீள்குடியேறியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் தமது இயல்புக்கு மாறான வகையில் சிவிலியன்களது வாழ்க்கையில் குறுக்கீடு செய்து வருகின்றார்கள்.

கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவத்தி;னருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கிராம அபிவிருத்திச் சங்கக் கூட்டம் தொடக்கம் அனைத்து வைபவங்களும் இராணுவத்தினரின் பங்களிப்பின்றியும், அவர்களுக்குத் தெரியாமலும் நடத்த முடியாது.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள குடும்பங்களில் ஆண்துணையற்ற பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கான தற்காலிக வீடமைப்பு உட்பட உழைப்பாளிகள் செய்ய வேண்டிய வேலைகளில் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். வசதியற்ற குடும்பங்களுக்கு இராணுவத்தினர் உதவி செய்கின்றார்களாம். இப்படித்தான் அரசாங்கம் இதற்குக் காரணம் கூறுகின்றது.

போரினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு உடைமைகள், உற்றவர்களை இழந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் கிராமங்களில் கொண்டு சென்று இறக்கப்படுகின்ற இந்தக் குடும்பங்களுக்கு இராணுவத்தி;னரின் இந்த சரீர உதவிகள் மிகமோசமான அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படுகின்றது.

இனப்பிரச்சினையின் அடிப்படையில் பெரும்பான்மையினராகிய சிங்கள இராணுவத்தினருக்கு எதிராக அரசியல் உரிமைகளுக்காக தமிழ் மக்கள் சார்பில் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டு, பயங்கரவாதம் என வர்ணிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்தியர்வகளுக்கும், (அவர்கது ஆதரவாளர்கள் என தெரிவித்து) ஆயுதம் ஏந்தாதவர்களுக்கும் எதிராக சகட்டு மேனிக்கு சிங்களவர்கள் மட்டுமே நிறைந்துள்ள படையினரால் இராணுவ நடவடிக்கை ஏவிவிடப்பட்டிருந்தது. அந்த இராணுவ நடவடிக்கையின் போது என்னென்ன நடந்தது என்பது குறித்து சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு, அதற்கான விசாரணைகளை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சிங்கள இனத்தைச் சேர்ந்த தமிழ் மொழியில் பேச முடியாத அதே இராணுவத்தினர் எந்த வகையில் தமிழ்க் குடும்பங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் உதவ முடியும் என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை அரசுகளின் மீது காலம் காலமாகத் தமிழ் மக்கள் சுமத்தி வந்த இன அழிப்பு நடவடிக்கையை மிகவும் நாகரிகமான முறையில் இன்னும் சொல்லப்போனால் ஜனநாயக மனிதாபிமான போர்வையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்பதே உண்மையாகும்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=32711&cat=1

தொடரும் இராணுவ செலவுகள் சிங்களத்தை மேலும் பொருளாதார ரீதியில் சங்கடத்துகுள்ளே தள்ளும்.

"கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவத்தி;னருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கிராம அபிவிருத்திச் சங்கக் கூட்டம் தொடக்கம் அனைத்து வைபவங்களும் இராணுவத்தினரின் பங்களிப்பின்றியும், அவர்களுக்குத் தெரியாமலும் நடத்த முடியாது."

சிங்களத்தின் வரவு செலவு திட்டப்படி, பத்து மில்லயன் அமெரிக்கன் டாலர்கள் ( அல்லது 1214 மில்லயன் ரூபாய்கள் ) முழு தீவின் அபிவிருத்தி கட்டுமாணதுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஏழு தமிழ் பேசும் மாவட்டங்களில் 1% (( அல்லது 12 மில்லயன் ரூபாய்கள் ) மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Less than 1% of rural infrastructure spending in Tamil areas

President Mahinda Rajapakse’s home district of Hambantota received the largest allocation (Rs 408 million), while the second highest went to Kurunegala (Rs157 million) ,with Matara the third largest beneficiary (Rs128 million).

Of the 1% allocated to the seven war-shattered Tamil districts, Jaffna received Rs 7 million, Vavuniya Rs 3 million, Mannar Rs 1 million and Trincomalee Rs 1 million.

Nothing was spent on rural infrastructure in the districts of Mullaitivu, Killinochi and Batticaloa.

For all the hype about ‘Eastern Awakening’ and ‘Northern Spring’, the Sinhala-dominated government constructed a magnificent total of 7.32 km of rural roads in the Tamil speaking areas - out of a total for the island of 533.73km.

http://www.tamilguardian.com/article.asp?articleid=2842

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.