Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ மாவீரர் நாள் 2010 மூன்றாம் நாள் இன்று

Featured Replies

கார்த்திகை 27 கல்லறைத்திரு நாள் ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் மூன்றாம் நாள் இன்று. உதிர்ந்துபோன உதிரப்பூக்களிடம் மன்றாட நிரை நிரையாக சென்று, நெக்குருக நின்று, வழிபாடு செய்ய ஆயத்தம் செய்வோம். மடியிருத்தி நாம் வளர்த்த மைனாக்களை நினைந்துருக அவர் நினைவிடம் தேடி செல்ல ஆயத்தம் ஆவோம்.

MV10.jpg

மாவீரர் தின உறுதிமொழியாக தமிழக மக்களே ! ஓவியன் கரூர்

மாண்ட வீரர்களின் கனவு பலிக்கும் , நாளை நமது ஈழம் பிறக்கும் !

நம்பிக்கை மிகுந்த இந்த வரிகள் நமக்கு உணர்த்துவதென்ன?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாக்கப்பட்ட தமிழினம் இன்று வரை அடிமையாக வாழ்ந்து வருகின்றது , தனக்கேற்பட்ட இன்னல்களுக்கு காரணம் தேடி அலைகிறார்கள் நம்மில் பலர் . ஏதேதோ பிதற்றல்களை காரணமாக காட்டி நமக்கு ஆறுதல் தருவதுபோல் நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள் சிலர் . பொதுஉடமைத் தத்துவம் கூட நமக்கு விடியலைக் தரவில்லை .

தமிழ்நாட்டில் தமிழனைத் தவிர அனைவரும் தமிழினத் தலைவர்கள்தாம் , அந்தத் தலைவர்களால் நமக்கான உரிமைகளை பெற்றுத்தரமுடியாது. ஏனனில் அவர்கள் தமிழரல்லர் ! நண்பன் யார் ? எதிரி யார் ? என அடையாளம் காணமுடியாதபடி தமிழினம் மாயைகளில் மயக்குண்டு கிடக்கின்றது.

ஈழம் வீரம் நிறைந்த மண்தான் . அந்த மண்ணின் மாவீரர்களுக்கு நம்மால் மௌன அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும் , அதுவும் அரசின் அனுமதி பெற்றபிறகுதான் ! ஏனனில் இது தமிழ்நாடுதான் ஆனால் தமிழர்களுக்கான நாடல்ல . இது எதைக் காட்டுகிறது. தமிழன் தன்னை ஆளவில்லை , வந்தாரைஎல்லாம் வாழவிட்டு ஆளவிட்டு அழகு பார்க்கிறது தமிழினம் . முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பின்பும் அவர்களைத்தான் நம்புகிறது தமிழினம் .

தன்னால் எதாவது செய்ய முடியுமா என ஏங்கும் ஒரு சில தமிழர்களும் இந்தி வல்லாண்மை கூட்டாச்சி அரசால் தளைப் படுத்தப்படுகின்றனர் .எழுத்துரிமை பேச்சுரிமை மறுக்கப் படுகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதால் தமிழர்களின் பொதுவான சிக்கல்களைத் தீர்க்க தோள்கொடுக்க தயங்குகின்றனர் . காரணம் ஆயிரக்கணக்காக சொல்லலாம் . தமிழக அரசின் அச்சுறுத்தல்கள் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் தோற்றுவிக்கப் படுகின்றன . தமிழர் அல்லாதோரை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டுள்ளான் .

உண்மைகளை உரக்கச் சொல்லும் பாவலர் காசியானந்தனின் பாடல் வரிகளும், தமிழரை எழுச்சிகொள்ளச் செய்யும் புலவர் செம்பியனின் கவிதை வரிகளும் , அறிஞர் குணா , போன்றோரின் எழுத்துகளும் தமிழினத்தை தலை நிமிரச் செய்யவல்லன . ஆயினும் ஊடகங்களின் கயமைத் தனத்தால் உண்மைகளை தமிழர்கள் அறிய முடியா வண்ணம் சிந்தனை மழுங்கி வாழ்கின்றனர் .

காலம் மாறும் , காட்சிகளும் மாறும் இது இயங்கியல் விதி . வரலாற்றை ஒன்றின் ஊடாக ஒன்றை மீளாய்வு செய்ய வேண்டும் . அவற்றின் ஊடாக நாம் நம்மை அடையாளப்படுத்தி நமக்கான உரிமைகளை பெறுவோம், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவோம் ! தமிழகத்தின் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண தமிழர்கள் ஓரணியில் திரள்வோம் . தமிழர் நாட்டை தமிழர்தானே ஆளவேண்டும் . இந்த நன்னாளில் அதற்கான உறுதிமொழியை ஒவ்வொரு தமிழரும் ஏற்போம் . தமிழ்நாடு தமிழர்கே ! இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம் !!

- மா.முருகானந்தம் ,

ஓவியன் . கரூர்.

ramathas%20angli2.jpg

-----------------

மாண்ட வீரர்களின் கனவு பலிக்கும் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.