Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15ம் நூற்றாண்டில் சிறிலங்காவினை ஐக்கியப் படுத்துவதற்கு சீனர்கள் உதவியது எவ்வாறு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15ம் நூற்றாண்டில் சிறிலங்காவினை ஐக்கியப் படுத்துவதற்கு சீனர்கள் உதவியது எவ்வாறு?

[ திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010, 13:47 GMT புதினப்பலகை] [ தி.வண்ணமதி ]

சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் அனுராதபுரக் காலதிலிருந்து இருக்கும் ஒன்று. அனுரதபுரம் மற்றும் சிகிரியா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது.

15ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சீன 'அட்மிறல் செங் கீ'யினது [Admiral Zang He] சிறிலங்காவிற்கான பயணம் தவிர்ந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தீவினது அரசியலில் சீனா தலையீட்டினை மேற்கொள்ளவில்லை.

Sri Lanka Guardian என்னும் இணையத்தளத்தில் Dr. Janaka Goonetilleke என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றுக் கட்டுரையை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

சீனாவில் மிங் அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தின் போது குறிப்பிட்டதொரு நோக்கத்திலமைந்த பயணமாக அட்மிறல் சங் கீயினது சிறிலங்காவிற்கான பயணம் அமைந்தது.

குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் அனைத்துலக அளவிலான வர்த்தகத்தில் பேராதிக்கம் செலுத்திய உலகின் பலம்பொருந்திய வளம் மிக்க, அளவில் பெரிய பேரரசாக இந்தச் சீனா சாம்ராஜ்சியம் திகழ்ந்தது.

அந்தக் காலத்தின் கடல்வழி வர்த்தகத்தின் Silk Sea Route முக்கிய விநியோகப் பாதையாகத் திகழ்ந்த பட்டுக் கடல்வழிப் பாதையில் சீனப் பேரரசின் மேலாண்மையினை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்காவில் தனது சிற்றரசினை நிறுவும் முனைப்புக்களில் ஈடுபடுவதற்குமாகவே இந்தச் சீன அட்மிறல் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டார்.

அந்தக் காலப்பகுதியில் தரைவழிப் பட்டுப்பாதை மூடப்பட்டிருந்தது.

கடல்வழியான பட்டுப்பாதையினை உருவாக்குவதற்காக தொடர்புடைய நாடுகளுடன் உறவினை ஏற்படுத்தும் வகையில் ஒரு கப்பல் நிறைந்த அன்பளிப்புப் பொருட்களுடன் அட்மிறல் செங் கீ சீனாவிலிருந்து புறப்பட்டார்.

குறிப்பிட்ட இந்தச் சுற்றுப்பயணத்தின் விளைவுகள் அதிக பலனெதனையும் தராதமையினால் ஈற்றில் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்தச் சுற்றுப்பயணத்தின் போது அட்மிறல் செங் கீ 50,000 கி.மீ பயணம்செய்து 30 நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். இவற்றில் சிறிலங்காவும் ஒன்று.

தேரவாத பௌத்தத்தின் [Theravada Buddhism] மையமாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததொரு பகுதியில் சிறிலங்கா அமைந்திருப்பதும், நட்புறவுடன் பழவகல்ல மக்கள் வாழும் இந்தத் தீவில் முக்கியமான பொருட்கள் சில உற்பத்திசெய்யப்படுவதும்தான் இதுபோன்ற வெளிநாட்டு தூதுவர்களின் வரவின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

அட்மிறல் செங் கீ ஐந்து முறை சிறிலங்காவிற்கு வருகை தந்திருக்கிறார்.

இவற்றில் ஒரு வருகையின் போது அவர் காலியில் உலகப் பிரசித்திபெற்ற மும்மொழிக் கல்வெட்டினைத் [Tri Lingual Inscription of Galle] திறந்துவைத்திருக்கிறார்.

1911ம் ஆண்டு பிரித்தானிய பொறியியலாளரான ரொம்லின்சன் [Tomlinson] என்பவர் காலியிலுள்ள கிறிப்ஸ் வீதியில் இந்தக் கல்வெட்டினைக் கண்டுபிடித்தார்.

குறிப்பிட்ட இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தின் மொழிபெயர்ப்பினை வாசிக்கும் வாசகர்கள் அனைவரும் குறிப்பிட்ட இந்த புகழ்பெற்ற கல்வெட்டு வாசகத்தின் முக்கியத்துவத்தினை விளங்கிக்கொள்வார்.

"உலகமே போற்றும் உத்தம புத்தரின் பின்னால் தனது கருத்துக்களைக் கூறிய மாட்சிமை பொருந்திய சீன சாம்ராச்சியத்தின் மிங் சக்கரவர்த்தி யுனஸ் சிங் கொ மற்றும் வாங் சிங் லெயின்; ஆகியோரை அனுப்பிவைத்தார்".

'

"நாங்கள் உங்களை ஆழமாகப் போற்றுகிறோம். இரக்கமுள்ள மதிப்புமிக்க ஒருவர் நீங்கள். எதனையும் முழுமையாக நிறைவேற்றும் உங்களின் அந்தப் பண்பு அனைவர் மனங்களையும் தொடுகிறது.

நல்லொழுக்கம் அனைத்து புரிந்துணர்வுகளையும் தாண்டி நிற்கிறது. மனித உறவுகளுடன் தொடர்புடைய உங்களின் நெறிமுறைகள் மற்றும் தங்களின் மகத்தான காலம் என்பன ஆற்றிலுள்ள மணலை எண்ணுவதற்கு ஒப்பானது. உங்களின் இரக்கம் சுறுசுறுப்பானது, உங்களின் பலம் தனித்துவமானது, தங்களின் மாயம்நிறைந்த வினைத்திறன் ஒப்பீட்டுக்கு

அப்பாற்பட்டது".

"இந்து சமுத்திரத்தின் தென்முனையில் சிலோன் என்ற மலைகளைக் கொண்ட தீவு அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் பௌத்த ஆலயங்கள் அதிசயமான சக்திகள் உறைந்து போயிருக்கும் புனிதத் தலங்கள். வெளிநாடுகள் தொடர்பான எங்களின் ஆணைகள் தொடர்பாக அறிவிப்பதற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணித்தோம். எங்களுக்கான பாதுகாப்பினை கடல்தாய் அருளினாள்".

சிறிலங்காவின் மத்திய மலைநாட்டுப் பகுதியிலுள்ள பௌத்த ஆலயங்களுக்கும் அட்மிறல் செங் கீ பயணம் செய்வதற்காகவும் அவர் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை கிடைக்கப்பெற்றிருக்கும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகிறன்றன.

இந்தத் சீனத் தூதுவரின் மலைநாட்டிலுள்ள கோவில்களுக்கான பயணத்தின் போது கீழ்க்காணும் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

"1000 தங்கக் கட்டிகள், 5000 சில்வர் கட்டிகள், பலவகைகளிலும் பல வர்ணங்களிலும் அமைந்த 50 உருளைகளில் பட்டுத் துணிகள், நான்கு கோடி தங்க ஆபரண பதாதைகள், தங்கம் பொறிக்கப்பட்ட பட்டுக்கள், ஐந்து பண்டைக்கால விளக்குகள், தங்கமுலாம் பூசப்பட்ட புராதன பூச்சாடிகள், 2500 குப்பிகளில் வாசனைத் திரவியங்கள், பத்துச்சோடி அரக்கு மெழுகுதிரிகள் என்பன அடங்கும்".

குறித்த அந்தக் காலப்பகுதியில் சீனாவினது இராசதந்திரமானது தங்களது இலக்குகள் எவையோ அவற்றினை அடையும் வகையில் மென்போக்கினைக் கொண்டதாகவும் முரட்டுத்தன்மை அற்றதாகவுமே பெரிதும் காணப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட சில சம்பவங்களின் போது தங்களது குறியிலக்கு எதுவோ அதனை அடைவதற்கு வன்முறையினைச் சீனர்கள் பிரயோகித்த வரலாறும் உண்டு.

சீனர்களின் இந்தப் போக்கு மேலைத்தேய கொலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவே அமைந்தது.

அடக்குமுறை, ஒடுக்குமறை, முறைகேடு மற்றும் மதமாற்றம் என்பன மேலைத்தேய கொலணித்துவ ஆட்சிக்குள் உட்பட்டிருந்த நாடுகளில் பெரிதும் காணப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன உலகில் கூட மேற்கு நாடுகளின் இராசதந்திரத்தில் முன்னர் இருந்ததுபோன்றதொரு அடிப்படை அம்சங்கள் காணப்படுவது விநோதமானது.

அந்தக் காலப்பகுதியில் கோட்டை இராசதானியை ஆண்டுவந்த வீர அழகேஸ்வரா என்ற மன்னர் சீன அட்மிறல் செங் கீயினது வருகையினைப் பெரிதும் எதிர்த்தார்.

யாழ்ப்பாண இராசதானியின் மன்னன் ஆரியச்சக்கரவர்த்தியின் தாக்குதலைத் தொடர்ந்து கோட்டை இராசதானியின் ஐந்தாம் புவனேகபாவு மன்னர் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து வீர அழகேஸ்வரா கோட்டை இராசதானியினை ஆண்டான்.

பேராசிரியர் செனரத் பரணவிதாரணவின் 'சிங்களாயோ என்ற நூலின்படி, 1411ல் மீண்டும் திரும்பிவந்த அட்மிரல் செங் வீர அழகேஸ்வராவைக் கைதுசெய்து அவனை சீனாவுக்கு நாடு கடத்தியதுடன் சிங்கள இராச்சியத்தை பின்னர் ஆறாம் பராக்கிரமபாகு எனப் பெயர்மாற்றிக் கொண்ட செபனானவிடம் கையளித்தார்.

தனது இராச்சியத்தைப் பலப்படுத்திய ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையைத் தனது தலைநகராக்கிக்கொண்டதுடன் மலையக இராச்சியத்தைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து சிங்கள இராச்சியங்களை ஒன்றிணைத்தான்.

பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பிய ஆறாம் பராக்கிரமபாகு அதனையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததுடன் பிரித்தானியர் இலங்கையை ஒன்றிணைப்பதற்கு முன்னர் இறுதியாக இலங்கையை ஒன்றிணைத்துத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தான்.

அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய செய்தியால் அங்கு சிங்களவர்கள் ஏற்படுத்திய கலவரமே அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

அவனது முயற்சிகளில் புகழ்பெற்ற விதாகம மகாதேர உதவினார். அவனது புகழ் கவிஞர் துட்டகமுவ சிறி ராகுலவினால் கவிகளில் வடிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா, மலாய் குடாநாடு மற்றும் சுமாத்திரா ஆகிய நாடுகளிலும் செல்வாக்கு விளங்கும்வகையில் அவன் அலங்கையை ஐம்பத்தைந்து வருடங்கள் ஆட்சிபுரிந்தான்.

ஆறாம் பராக்கிரமபாகு 1416 மற்றும் 1420 ம் ஆண்டுகளில் சீனாவுக்கு பயணம் செய்த பெருமையைக் கொண்டிருப்பதாக வி.எல்.பி மெண்டிஸ் சிறிலங்காவின் வெளியுறவு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமது பொம்மை இராச்சியங்களை நிறுவிய ஏனைய கொலணி வல்லரசுகளைப் போலன்றி சீனா ஒருபோதும் தனது அதிகாரத்தை இலங்கைமீது திணித்ததில்லை.

இன்றுகூட, சிறிலங்கா மன்னனின் வழித்தோன்றல்கள் என்று கூறும் குடும்பம் ஒன்று சீனாவின் குவான்சௌ மாகாணத்தில் இருக்கிறது.

சிலர் ஏற்றுக்கொள்ளாதபோதிலும், அவர்கள் வீர அழகேஸ்வராவின் வழித்தோன்றல்கள் என்பதே பெரிய விடயமாகும்.

ஆறாம் பராக்கிரமபாகுவின் இறப்பைத் தொடர்ந்து இந்தியப் படையெடுப்புக்கள், சிங்களவர்களின் ஒற்றுமையின்மை மற்றும் பௌத்த ஆலயத்தின் பிளவு ஆகியவற்றினால் பிளவுகள் ஏற்பட்டது.

இறுதியாக, சிங்களவர்களுக்கு உதவுவது என்ற பெயரில், சிறிலங்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் ஏறத்தாழ 450 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

நாம் மீண்டும் வரலாற்றின் அதே காலகட்டத்தில் இருக்கிறோம்.

வரலாறு மீண்டும் திரும்பி வருமா என்பதே தற்போதுள்ள வினாவாகும். வரலாற்றின் மிகப்பெரிய பாடம் நாம் அதிலிருந்து ஒருபொழுதும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்.

http://www.puthinappalakai.org/view.php?20101122102554

கடைசியாக தமிழ் மக்களுக்கு செய்யக்கூடிய நன்மை இலங்கயின் வரலாற்று பெருமைகளையும் அரச தலைவரின் நல் எண்ணத்தையும் தமிழர்கள் அறிந்து கொள்ளுகிறது தானோ....???

இப்பவும் புதினப்பலகை...

:D :D :D

எப்படி எண்றாலும் அருமையான சிங்களவரின் வரலற்றை தந்தமைக்காக நண்றிகள்...

15ம் நூற்றாண்டில் சிறிலங்காவினை ஐக்கியப் படுத்துவதற்கு சீனர்கள் உதவியது எவ்வாறு?

......

......

யாழ்ப்பாண இராசதானியின் மன்னன் ஆரியச்சக்கரவர்த்தியின் தாக்குதலைத் தொடர்ந்து கோட்டை இராசதானியின் ஐந்தாம் புவனேகபாவு மன்னர் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து வீர அழகேஸ்வரா கோட்டை இராசதானியினை ஆண்டான்.

..........

.........

.........

அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய செய்தியால் அங்கு சிங்களவர்கள் ஏற்படுத்திய கலவரமே அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது

இதன் மூலம் சொல்ல வருவது என்ன எண்றால் யாழ்ப்பாணமும் சிங்களவருடையது தான் என்பது தானே....??

Edited by தயா

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள். போர்க் குற்றவாளிகள், ....., ……

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.