Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா. - கெடு முடிய இன்னும் 22 நாள்களே

Featured Replies

ஐ. நா. நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன

இந்த நிபுணர் குழு கடந்த யூன் 21 ஆம் நாள் நியமிக்கப்பட்து. அப்போது பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் பொறுப்புடமை ஒன்றுதான் சிறீ லங்காவில் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் அவசியமான அடித்தளமாக இருக்கிறதாக தான் நம்புவதாகவும் இந்த நிபுணர் குழு மூலம் அய்யன்னா அதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

அய்யன்னா நிபுணர் குழுவின் பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்தெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு அதன் பணிகளை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள பேச்சாளர் நெசிர்கி, தேவையேற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் என்றும் தெரிவிததார்.

இலங்கையில் சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட பான் கீ மூன் நியமித்த இந்த நிபுணர் குழு தனது பங்களிப்பைப் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள அய்யன்னா பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அறிக்கையின் எந்த விடயங்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது? எந்த விடயங்களைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குத் தெரிவிப்பது என்பது தொடர்பாக இந்தக்குழுவே தீர்மானிக்கும் எனப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக்குழு இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. ஆனால் இலங்கைக்குச் செல்லும் நோக்கம் அதற்கு இல்லை என நெசிர்கி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்யவேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, பான் கீ மூனின் உடனடி தேவைகளுக்கான நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க சிறீ லங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த போதும் அதனை மீறி அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இது இராசதந்திர மட்டத்தில் சிறீ லங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

அய்யன்னா நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீ லங்கா அமைச்சர் ஒருவர் கடந்த யூலை மாத முற்பகுதியில் அய்யன்னாவின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பவுத்த தேரர்கள் புடை சூழ சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் அய்யன்னா தூதுவராலயத்தை நாள்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.

இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீ லங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர் குழுவை எதிர்த்து உருசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது. அதில் அய்யன்னா பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. .

அய்க்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு நான்கு மாதங்கள் வரை விசாரணைகளை நடத்தும். . இது தொடர்பாக நிபுணர் குழு விடுத்த அறிக்கையில் பின்வரும் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

1) முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம்.

2) ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம். முறைப்பாட்டில் குறிப்பிடப்படும் சாட்சிகளின் தொடர்பு விபரங்கள் கொடுக்கப்பட வேண்டும். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே நல்லது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புதல் வேண்டும்.

3) முறைப்பாடு சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மானிட உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் (alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka) பற்றியதாக இருக்க வேண்டும்.

3) யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக :

அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்

ஆ) உறவுகள் பாதிக்கப்பட்டவர்கள்

இ) மனித உரிமை மீறல், இன அழிப்பு பற்றித் தெரிந்த அனைவரும்

ஈ) அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

உ) ஊர்ச் சங்கங்கள்

ஊ) மாணவர் அமைப்புகள்

எ) தொழில்சார் வல்லுனர்கள்

ஏ) வணிக வாரியங்கள்

ஒ) இதர சங்கங்கள்

ஓ) பிற மொழி நண்பர்கள், அமைப்புகள்,

4) ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம். அனுப்பவேண்ட்டிய முகவரி: panelofexpertsregistry@un.org. இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.

5) காலக்கெடு: டிசெம்பர் 15, 2010 ( December 15, 2010)

7) முறைப் பாட்டாளர்களின் முறைப்பாடு இரகசியமாக வைக்கப்படும்.

கீழ்க்கண்ட இணைய தளங்களில் மேலதிக தரவுகள் தரப்பட்டுள்ளன. அதனைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

http://www.facebook.com/group.php?gid=222716130480

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77243

முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு படியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org) வைக்கலாம்.

சிறீ லங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப் பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீ லங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்க குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில் நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றையும் அய்யன்னா அவைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.

1) சிறீ லங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை (The institution of an independent War Crimes Inquiry panel) அமைத்தல்.

2) வட - கிழக்கில் வாழும் தமிழ்மக்களது உண்மையான விருப்பத்தை அறிந்து கொள்ள அய்யன்னாவின் கண்காணிப்பில் ஒரு நேரடி வாக்கெடுப்பு (UN supervised referendum on right of self-determination of Thamils in the North and East to asceratain the politicaal aspirations) நடத்தல் வேண்டும்.

எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. அய்யன்னா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவே தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்தையும் அந்தப் போரில் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புக்களையும் அனைத்துலக மயப்படுத்தப்பட வழிசமைத்துள்ளது. தாய் தந்தையர்களை, மனைவி பிள்ளைகளை, உடன் பிறப்புக்களை, உற்றார் உறவினர்களை இழந்தவர்கள், உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சொந்த வீடு வாசல்களை இழந்தவர்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டவர்கள், மொத்தமாக சிங்கள ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த வாய்பைப் தக்கவாறு பயன்படுத்த வேண்டும்.

அய்ரோப்பா, கனடா, மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா நாடுகளில் வாழ்வோர் அவரவர் நாட்டில் இயங்கும் மக்கள் அமைப்புக்கள் ஊடாக வேண்டிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாகச் செயற்படும் உலகத் தமிழர் பேரவை (info@globaltamilforum.org) பிரித்தானிய பேரவை அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு (mte.france@gmail.com - 00 33 615 88 4221) கனடா போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம் (un@cwvhr.org - 416-628-1408) போன்ற அமைப்புகளோடு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன என்பதால் விரைந்து வினைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

http://www.tamilcanadian.com/article/tamil/979

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.