Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஒரு இலட்சம் இராணுவத்தினருக்கு சீன உதவியுடன் வீடுகள் உண்மையா? அப்பாத்துரை கேள்வி

Featured Replies

வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010

வடக்கில் நிலைகொண்டுள்ள ஒரு இலட்சம் இராணுவத்தினருக்கும் சீன அரசின் உதவியுடன் அங்கேயே வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.அப்பாத்துரை விநாயகமூர்த்தி வடக்கில் அறிவிக்கப்பட்டுள்ள அதியுர் பாதுகாப்பு வலயங்களுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

வடக்கின் 30 வீதமான பகுதியான வலிகாமம் வடக்கு ஆதியுயர் பாதுகாப்பு வலயமென்ற பெயரில் இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.48 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட வலிகாமம் வடக்கில் 28 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டள்ளது.12 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் முழுமையாக மீள்குடியேறியுள்ளதுடன் 5 கிராம சேவகர் பிரிவுகளில் பகுதியாக மீள்குடியேறியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு, மண்டைதீவு,யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை வரையான பகுதி கரம்பகம் எழுதுமட்டுவாள் வடக்கு,தெற்கு,நாகர்கோவில் மற்றும் மறவன்புலோ ஆகிய பகுதிகளும் பாதுகாப்பு வலயங்களாகவுள்ளன.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் பேரும் தென்மராட்சியிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் பேரும் தமது சொந்தஇடங்களில் சென்று குடியேறுவதற்கு அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல்மனு இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் யாழ்.மாவட்ட அரச அதிபரான இமெல்டா சுகுமார் ஜேர்மனியிலிருந்து வந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென்று எதுவும் இல்லை.கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டிய இடங்களே காணப்படுகின்றன எனக் கூறியிருந்ததை நாம் வன்மையாகக் கண்டிருக்கின்றோம்.அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணி இவ்வாறு அப்பட்டமாக பொய் கூறிவரும் துர்ப்பாக்கிய நிலையையிட்டு நாம் மனம் வருந்துறோம்.

இனிமேலாவது வாயைத் திறக்க முன் சரியாக தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.மண்டைதீவில் பிரதான வீதியில் ஒரு கிலோ மீற்றர் தூரம் தடை செய்யப்பட்டுள்ளதுடன் முதலாம் வட்டாரத்திலிருந்து 5 ஆம் வட்டாரம் வரையான பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில் ஏறக்குறைய 75 வீடுகளில் கடற்படையினர் தங்கியுள்ளனர்.மண்டைதீவிலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்ற எறக்குறைய 1500 குடும்பங்கள் தற்போது திரும்பிவந்து 6,7 ஆம் வட்டாரங்களில் உள்ள பொதுக்கட்டிடங்களில் தங்கியுள்ள இவர்களை தமது சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கவேண்டும்.

வடக்கில் தற்போது ஒரு இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.இவர்களுக்கு சீன அரசின் உதவியுடன் வடக்கிலே வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆசியாவிலே இலங்கை மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக உள்ளது.இயல்பு நிலையும் இராணுவ ஆட்சியிலிருந்து விடுதலையுமே தற்போது தமிழ் மக்களின் தேவையாகவுள்ளது.வடக்கில் உள்ள படையினை 1990 காலப்பகுதியில் இருந்த நிலைக்கு பின்னே கொண்டு சென்று வலிகாமம் வடக்கில் மக்கள் மீள்குடிறே அனுமதிக்கப்படவேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற 350 சிங்களக் குடும்பத்தினர் தற்போது நாவற்குழியில் தங்கியுள்ளனர்.இவர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசாரணை நடத்தியபோது இவர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னர் குடியிருந்ததாகவோ அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களோ அல்ல என்பது தெரியவந்துள்ளது.எங்களுக்கிடையில் கலகத்தை ஏற்படுத்த முனையும் சில குழுக்களே இவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தற்போது மீளக்குடியமர்த்தப்படுகிறார்கள்.ஆனால்,இந்த சிங்களவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் அவசரகால ஒழுங்கு விதியையும் நீக்கவேண்டும்.அத்துடன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென இந்த அரசாங்கத்தைக் கோருகின்றேன்.

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனம் கொண்டுவரப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் எப்பொழுது கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சர் எனக்கோ அல்லது இந்த சபைக்கோ உரிய விளக்கம் கொடுப்பாரா?

உண்மையில் வடக்கில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான பிரகடனத்திற்கு எந்த சட்ட அடிப்படையும் இப்போது இல்லை.இந்த உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா என்று கேட்க விரும்புகின்றேன்.

Eelanatham.Net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.