Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிநாடு கோரிப் போராடியதற்கான காரணங்கள் வலுப்பெறுகின்றன

Featured Replies

தமிழ்மக்கள் தனிநாடு கோரிப் போராடியதற்கான காரணங்கள் வலுப்பெறுகின்றனவேதவிர, தளர்வடையவில்லை

இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் யுத்தத்தினால் 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு துரித மீள்கட்டுமானத்திற்கென விசேட அமைச்சு எதுவும் உருவாக்கப்படவில்லை. விவசாயம்,மீன்பிடி,கால்நடை போன்ற துறைகள் வடக்கு,கிழக்கில் மிக முக்கியமான துறைகளாகும். யுத்தம் முடிவடைந்து நீண்டகாலம் சென்றுவிட்ட போதிலும் வடக்கு,கிழக்கில் இம்மூன்று துறைகளும் வழமை நிலைக்குத் திரும்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்கில் இம்மூன்று துறைகளும் செழிப்படையாத வரை உணவுப் பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், பால் மா போன்றவற்றின் இறக்குமதிகளையும் குறைக்க முடியாது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அதிகூடிய முதலீடு அவசியமானதாகும். உள்நாட்டு முதலீடு போதாது என்னும் நிலையில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவையாகும். ஆனால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் செல் காஸ் என்பன அரசுடைமையாக்கப்பட்டமை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. இவ்வாறான நிச்சயமற்ற நிலையில் எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகள் உருவாகும். சிங்கப்பூர்,மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளின் விரைவான வளர்ச்சிக்கு உறுதியான அரசியல் தலைமை மட்டுமல்ல, ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியும் முக்கியமாக இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்கு கசினோக்களை சட்டரீதியாகத் திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. நாடு சூதாட்டக்களமாக மாறப்போகின்றது. தற்போது பாண் உண்பது பயங்கரவாதம் என்றும் தோட்டங்களுக்கு உரத்தை உபயோகிப்பது பயங்கரவாதம் என்றும் பேசப்படுகின்றது. கையடக்கத் தொலைபேசி, ஜீன்ஸ், சேட், மாசிக்கருவாடு, கார், சிறுபிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் யாவுமே வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏன் இவற்றையும் பயங்கரவாதம் என்று சொல்லத் தயங்குகின்றீர்கள்? நீங்கள் பயங்கரவாத மாயையிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகின்றது.

மத்திய கிழக்கில் வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின் மாதாந்த சராசரி சம்பளம் 10 ஆயிரத்திற்கும் 15 ஆயிரத்திற்குமிடைப்பட்ட சிறு தொகையாகும். 10 ஆயிரம் சம்பளம் பெறக்கூடிய வேலைவாய்ப்புகளைக் கூட அவசரகால அடிப்படையில் உருவாக்குவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்வில்லை. எமது நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கில் வெறும் 10 ஆயிரம் ரூபாவுக்காக மிகக் கடுமையான தமக்குப் பழக்கமற்ற வேலைகளைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பாண் உண்பது பயங்கரவாதம் என்றும் தோட்டங்களுக்கு உரம் உபயோகிப்பது பயங்கரவாதம் என்று கூறுவோர் எமது நாட்டுப் பெண்களைத் தரங்குறைந்த வேலைகளுக்கு மத்திய கிழக்கிற்கு அனுப்புவதை ஏன் பயங்கரவாதம் என்று கூறுவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்ததன் பின்பாக 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் யுத்தம் நடந்த காலத்தை விட அதிகப்படியான நிதியாக 202 பில்லியன் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டது. அன்று வன்னியில் இருந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகி முகாம்களில் தங்கியிருந்த பொழுது அவர்களின் மீள் குடியேற்றத்திற்காக ஒதுக்கப்பட்டது வெறும் மூன்று பில்லியன் ரூபா மட்டும்தான். யுத்தம் முடிந்து 18 மாதங்கள் ஆன இன்றைய நிலையில் 2011 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்காக 13 பில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டு 215.2 பில்லியன் இன்று பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே வரவுசெலவுத் திட்டத்தில் புனர்வாழ்வுக்காக மூன்று பில்லியன் ஒதுக்கப்பட்ட அதேசமயம், இன்று மீள்குடியேற்றத்திற்காக 1.7 பில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வருடங்கள் அவர்கள் தேடிய வீடுகள், சொத்துகள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக இருக்கக் கூடிய மக்களுக்கு அரசாங்கம் காட்டும் கரிசனை இவ்வளவுதான். இவர்கள் தான் நாம் ஒரே இனம். ஒரே தாயின் பிள்ளைகள் என ஏமாற்றுக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாவட்டக் கச்சேரிகளுக்கான நிதியொதுக்கீட்டிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வட,கிழக்கு மாகாணங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தென் மாகாண மாவட்டங்களுக்கு அதிக நிதியொதுக்கப்பட்டுள்ளது. தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் மாவட்டக் கச்சேரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிநிலைமையைப் பார்க்கின்றபோது மிக வளர்ச்சியடைந்த கொழும்பு மாவட்டத்திற்கு 605 மில்லியனும் கம்பஹா மாவட்டத்திற்கு 596 மில்லியனும் ஒதுக்கப்பட்ட அதேசமயம், தென்பகுதியைச் சார்ந்த காலி,மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களுக்கு முறையே 626 மில்லியனும் 591 மில்லியனும் 437 மில்லியனுமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், யுத்தத்தால் தரைமட்டமாக்கப்பட்ட வன்னி மாவட்டங்களான கிளிநொச்சிக்கு 145 மில்லியனும் முல்லைத்தீவுக்கு 133 மில்லியனும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூறும் வடக்கின் வசந்தம் எவ்வாறு இருக்கின்றதென்பது கச்சேரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியொதுக்கீடுகளில் இருந்து புரிந்துகொள்ளலாம்.

வட,கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ ஆட்சி நீக்கப்படுவது எப்போது? வட மாகாண ஆளுநர் ஒரு இராணுவ அதிகாரி. கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு கடற்படை அதிகாரி. திருமலை மாவட்ட அரச அதிபர் ஒரு இராணுவ அதிகாரி. இவை மட்டுமல்ல, அண்மையில் நடைபெற்ற சிற்×ழியர் நியமனங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட 21 சிற்×ழியர்களில் 17 பேர் சிங்களவர்கள்,4 தமிழர்கள். இந்த 17 சிங்களவர்கள் கூட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராதவர்கள். மன்னாரில் சிற்×ழியர் நியமனங்களுக்காக தமிழ் மக்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டபோதும் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அமைச்சர் கொடுத்த பட்டியலின் பிரகாரமே நியமனங்கள் வழங்கப்படுவதாக அறிகின்றேன்.

இதேபோன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் சிற்×ழியராக நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்த பட்சம் சிற்×ழியர்கள் நியமனத்தில் கூட தனது சொந்த மாவட்டங்களிலே தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதுடன், அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா நிர்வாகசேவைத் தெரிவில் கூடத் தெரிவு செய்யப்பட்ட 257 பேரும் சிங்களவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து உள்ளூர் நிர்வாகத்தில் கூட சிங்களவர்களை நியமிப்பது என்பது அரசாங்கத்தின் சிங்களமயமாக்கலின் நிகழ்ச்சி நிரலையே வெளிக்காட்டி நிற்கின்றது.

நாட்டிற்குள் சர்வாதிகாரமான ஆட்சிமுறையை முன்னெடுக்கும் அதேவேளை, வடக்கு,கிழக்கில் இனவாத இராணுவத்தைப் பயன்படுத்தி இனவொழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் இவ்வாட்சியாளர்கள்தான் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கவும் அடுத்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை சீனாவுக்கு ஈடாக 11,12% உயர்த்துவதற்கான வரவுசெலவுத் திட்டமாகவும் இவ்வரவுசெலவுத் திட்டத்தை விபரிக்கின்றனர்.

ஆனால், இலங்கையின் உள்நாட்டுக் கொள்கையும் சரி,வெளிநாட்டுக் கொள்கையும் சரி இவர்கள் விரும்பும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையில் அமைந்ததாக இல்லை. யுத்தம் முடிவடைந்து 18 மாதங்கள் ஆன பின்னரும் கூட மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடரவே செய்கிறது. இராணுவ புலனாய்வுத்துறை என்பது இப்பொழுது தனக்கு விரும்பாத அல்லது அரசுக்கு விருப்பமற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளை அழித்தொழிப்பதிலேயே அக்கறையுடன் பணிபுரிகின்றது. தமது கொள்கைக்கு முரணான பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் எப்படி வழக்குகளைச் சோடிப்பது, அவர்களை எவ்வாறு சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளுவது, இதன் மூலம் அவர்களைப் பணிய வைப்பது,அவ்வாறான கட்சிகளைச் சிதறடிப்பது இதுதான் இன்று இலங்கையின் சகல புலனாய்வுத்துறையினரும் செய்கின்ற வேலையாகவுள்ளது.

குடும்ப அரசாட்சியை எப்படி நிலைநிறுத்துவது,இதற்கெதிரான சக்திகளை எப்படி துவம்சம் செய்வது என்பதுதான் அரசாங்கத்தின் கவலையாகவுள்ளது. அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வேலையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. புதிய,புதிய சட்டமூலங்கள் மூலம் தனிநபர்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதுடன், வெளிப்படைத் தன்மைக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் மூடுவிழா நடைபெறுகின்றது.

இதுபோன்றே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் சர்வதேச சமூகத்தைக் கவர்வதாக இல்லை. குறிப்பாக ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்ட ஐரோப்பா,அமெரிக்கா போன்ற நாடுகளை இலங்கை அரசு எதிரிகளாகவோ அல்லது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் சக்திகளாகவோ தான் பார்க்கின்றது. ஜனநாயகம், மனித உரிமைகள்,தொழிலாளர் உரிமை தொடர்பான சர்வதேச சட்டங்கள் இலங்கை அரசால் மதிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசை சர்வதேச சமூகம் வற்புறுத்துகின்றது. ஆனால், வற்புறுத்தல்கள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமனானது என இலங்கை அரசு கருதுகின்றது. இவ்வாறான மோதல்களால் ஐரோப்பிய யூனியன் வழங்கி வந்த ஜீ.எஸ்.பி.+ போன்ற வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை தவிர யுத்த காலத்தில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் என்பனவும் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவது மாத்திரமல்லாது, இந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுவும் இலங்கைக்குப் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

நடந்து முடிந்த யுத்தம் மனிதாபிமானத்தை நிலைநாட்டுவதற்கான யுத்தம் என்றும் அங்கு எந்தவிதமான உயிரிழப்புகளும் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்தும் கூட பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வைத்தியசாலைகளுக்கு மேல் குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் உருவாக்கிய பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வைத்தியசாலைகளுக்கு மேல் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் உருவாக்கிய பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பால் உணவுக்காக வரிசையில் நின்ற சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். முதியவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடைந்தவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் ஆகிய உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் யுத்தக் குற்றங்களாகவே கணிக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உண்டென்பதை எந்தப் பொருளாதார வல்லுநரும் நம்பப் போவதில்லை. யுத்தம் முடிந்திருக்கலாம். ஆனால், நாடு இன்னும் அவசரகால சட்ட ஆட்சிக்குள்ளும் ஜனநாயக மறுப்பிற்குள்ளும் சர்வாதிகார போக்கிற்குள்ளும் தான் இருக்கின்றது.

இப்படியான சூழ்நிலையில், அந்நிய முதலீடுகள் வந்து குவியும் என்று எதிர்பார்ப்பதும் அதிசயங்கள் நடக்கும் எனக் கூறுவதும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் புலுடா விடும் கதையே தவிர அதில் எதுவித உண்மைத் தன்மையுமில்லை என்பதை நாடறியும்.

இவற்றைப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான் கே.பி. மூலம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மூலதனத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள். ஆனால், அதுகூட உங்களால் முடியாது. கே.பி.யை நம்பி தமது பணத்தை முதலீடு செய்ய அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. வட,கிழக்கு தமிழ் மக்களின் அரசியல்,பொருளாதார,கலாசார,பாதுகாப்பு,நிர்வாக வேலைகளைக் கவனிக்கக் கூடிய சகல அதிகாரங்களுடன் கூடிய ஓர் நிறுவனமொன்று தோற்றுவிக்கப்படுகின்றதோ அப்பொழுதுதான் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய முன்வருவார்களே தவிர, கொழும்பை நம்பியோ, கே.பி.யை நம்பியோ அவர்கள் எதனையும் செய்யமாட்டார்கள் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

எனவே தான் உங்கள் உள்நாட்டுக் கொள்கைகளையும் வெளிநாட்டுக் கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்யுங்கள். சிங்களக் கடும் போக்காளர்களும் சிங்கள மேலாதிக்கவாதிகளும் நாட்டுப்பற்றாளர்கள் என்ற பெயரில் ஐரோப்பியர்,அமெரிக்கர் எல்லோரும் காலனி ஆதிக்கவாதிகள் எனக் குதிக்கலாம். இந்நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களுக்காக உரிமைகள் கொடுக்கக்கூடாதென அறிவுரை கூறலாம். இன்றைய உலகில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத,காலம் கடந்த சிந்தனைகள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இத்தகையவர்களால் நாட்டை மேலும் அழிவுப்பாதையில்தான் கொண்டு செல்ல முடியும்.

ஒரு பக்கம் ஜனநாயக மறுப்பு,இன்னொரு பக்கம் குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரம்,மறுபக்கம் இன ஒழிப்பு நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகள் இன்னும் பலபடி அதிகரிக்கின்றதே தவிர, குறைவடையவில்லை. என்ன காரணங்களுக்காகத் தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்களோ அந்தக் காரணிகள் மேலும் வலிமை பெற்று வருகின்றதே தவிர, குறையவில்லை. இந்நிலையில், இலங்øயில் பொருளாதார சுபீட்சமும் ஏற்பட முடியாது. அதிசயமும் நிகழ முடியாது. ஆகவே, முதலில் உள்நாட்டுக் கொள்கையில் மாற்றம் வேண்டும். தமிழர்கள் தமது பாதுகாப்பு,பொருளாதார வளர்ச்சி,கல்வி,கலை, கலாசாரம்,பண்பாடு மற்றும் முழுமையான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் தமிழர்கள் தமது பிரதேசங்களை தாமே ஆளுகின்ற கூட்டாட்சி அரசியல் முறை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாகும் வரையில் இலங்கையில் பொருளாதார அதிசயங்கள் நிகழ்வது அபூர்வமாகத்தான் இருக்கும்.

எனவே, தமிழின அழிப்பிற்கென்றே தயாரிக்கப்பட்ட இவ்வரவுசெலவுத் திட்டம் பாரிய மாற்றத்திற்குள்ளாக வேண்டும். போரினால் அழித்தொழிக்கப்பட்ட திருகோணமலை,மட்டக்களப்பு,வன்னி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்புக்காக போதிய நிதியொதுக்கப்பட வேண்டும். இராணுவச் செலவீனங்கள் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டு வடக்கு,கிழக்கில் இராணுவ முகாம்களும் செயற்பாடுகளும் 83 இற்கு முந்திய நிலைக்குச் செல்ல வேண்டும். வடக்கு,கிழக்கில் அழிக்கப்பட்ட மக்களின் சொத்துகளுக்கு நிவாரணமும் அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தப் போதிய நிதியும் சிறப்பாக ஒதுக்கப்பட வேண்டும். இல்லாதவிடத்து இது வெறும் தமிழின ஒழிப்பு வரவுசெலவுத் திட்டமாகவே இருக்கும் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய அப்பட்டமான இனவாத வரவு செலவுத் திட்டத்தை முற்று முழுதாக எதிர்க்கும் என்பதனையும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2033:2010-11-26-04-49-20&catid=72:article&Itemid=100

இல்லாதவிடத்து இது வெறும் தமிழின ஒழிப்பு வரவுசெலவுத் திட்டமாகவே இருக்கும் என்பதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய அப்பட்டமான இனவாத வரவு செலவுத் திட்டத்தை முற்று முழுதாக எதிர்க்கும் என்பதனையும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

சம்பந்தர் எதுக்கு விழுந்தடிச்சு தமிழினப் படுகொலையாளியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொன்னவர்.????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.