Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து..

Featured Replies

ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு.

ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் விடுதலை புலிகள் சார்பு எதிர்ப்பு ஆர்;ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றியதால் அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டில் ஜயலத் ஜயவத்தனா மீது நம்பிக்கையில்லா பிரேராணை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

முன்னதாக, இன்று காலை நாடாளுமன்றத்தில், ஜெயலத் ஜயவர்தனா மீது அமைச்சர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டார்கள்.

நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் அரசதரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஒழுங்கு பிரச்சிணை ஒன்றை முன்வைத்து ஜயலத் ஜயவர்த்தனா மீது குற்றம் சுமத்தினார்.

புலம் பெயர் தமிழர்கள் ஏற்பாடு செய்த லண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஜயலத் ஜயவர்த்தனா கலந்து கொண்டமை நாடாளுமன்ற கூட்டுப்பொறுப்பை மிறிவிட்டதாகவும், சபை நடவடிக்கைகளில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டுமெனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜயலத் ஜயவர்த்தனா இதற்கு பதிலளிக்க முற்பட்டபோது அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் ஏனைய அமைச்சர்களும் ஓடிச் சென்று அவரது ஒலிவாங்கியை பிடுங்கி தாக்க முற்பட்டார்கள்.

அமைச்சர்கள் மிகவும் மோசமான வார்தைகளினால் அவரைத் திட்டியவாறு அவரது ஆசனத்துக்கு அருகில் சென்று தாக்க முற்பட்டபோது சபையில் இருந்த படைக்கல உதவி சேவகர்கள் ஜயலத் ஜயவர்த்தனவை சூழ்ந்து கொண்டு காப்பாற்றி சபைக்கு வெளியே பாதுகாப்பாக கொண்டு சென்றார்கள்.

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜயலத் ஜயவர்த்தனாவை அமைச்சர்களின் தாக்குதல் முயற்சியில் இருந்து காப்பாற்ற முற்படாது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த வேளையில் ஏற்பட்ட குழப்பத்தால், சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைத்தார்.

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5565

  • தொடங்கியவர்

ஜயலத் ஜயவர்த்தனாவுக்கு எதிராக அமைச்சர்கள் அரசியல் நாகரீகமற்ற முறையில் செயற்பட்டார்கள் - அரியநேந்திரன்

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தனாவுக்கு எதிராக அமைச்சர்கள் அரசியல் நாகரீகமற்ற முறையில் செயற்பட்டார்களென தமிழத்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் ஜயலத் ஜயவர்த்தனாவுக்கு கருத்துக்கூற இடமளிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், ஆனால், அமைச்சர் நாகரீகமற்ற முறையில் செயற்பட்டு வாhத்தைகளை அள்ளி வீசி, அவரைத் தாக்கமுற்பட்டமை கண்டனத்துக்குரியதெனவும் அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் சார்பாக யார் கருத்தை கூறினாலும் அவர்களை விடுதலை புலி ஆதரவாளர் என்று கூறுவது தென்னிலங்கை

அரசியல்வாதிகளின் பண்பு என்று குறிப்பிட்ட அரியநேந்திரன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வழங்காது விடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளும் மறுப்பு தெரிவிக்கும் முறைகளும் யதார்த்தத்திற்கு மாறானவையெனவும் கூறினார்.

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5564

  • தொடங்கியவர்

பிரித்தானிய அசௌகரியங்களுக்காக அரசாங்கம் என்னை பலிகடாவாக்குகிறது : ஜயலத்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை இரத்துச் செய்யப்பட்டமையால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அரசாங்கம் தன்னை பலிக்கடாவாக்க முயற்சிக்கிறது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் தான் பங்குபற்றியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது தான் பிரிட்டனில் இருக்கவில்லை எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரிட்டனில் நான் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகத வரை இருந்தேன். அதன்பின் இத்தாலிக்கு சென்றுவிட்டேன். ஜனாதிபதி நவம்பர் 29 ஆம் திகதிதான் லண்டனுக்கு சென்றார். எனது கடவுச்சீட்டை சோதிப்பதன் மூலம் அரசாங்கம் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என ஜயலத் ஜயவர்தன கூறினார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12318-2010-12-02-16-55-12.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.