Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அரசுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள்

Featured Replies

மீண்டும் அரசுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள சக்தியொன்றும் இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசுக்கெதிரான சிங்கள சக்தியொன்றும் தொடர்புபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே லக்ஷ்மன் ஹுலுகல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

“ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் நிலையில் அவருக்கும் நாட்டுக்கும் சர்வதேசமட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் அரசுக்கெதிரான சக்திகள் செயற்படத்தொடங்கியுள்ளன.முன்னர் வெளியான சனல் 4 ஒளிநாடாவை வெளியிட்டனர்.அது இறுதியில் பொய்யாக்கப்பட்டது.தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை அன்று ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு ஏற்றுக்கொண்டது.

சிறிது காலத்தின் பின்னர் அதே ஒளிநாடாவை சற்று விரிவுபடுத்தி அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.இப்போது அதே ஒளிநாடாவை மேலும் விரிவுபடுத்தி சர்வதேசத்துக்குக் காட்டத்தொடங்கியுள்ளனர்.அன்று 3 1/2 நிமிடமாக இருந்த காட்சிகள் இப்போது 5 நிமிடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நாம் அதனை அபிவிருத்திப்பாதையில் இட்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு நல்கும் சக்திகள் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அரசுக்கெதிரான செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றனர்.மீண்டுமொரு தடவை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் திட்டத்துக்கான நடவடிக்கைகளில் இந்தச் சக்திகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் இவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.இவர்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான தவறான தகவல்களை கூறத்தொடங்கியுள்ளனர்.மேற்குலகில் அவுஸ்திரேலியா உட்பட வேறு சில நாடுகளில் சிவில் அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இதற்கு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையை தடுப்பது இவர்களின் பிரதான நோக்கமாகும்.

ஜனாதிபதி லண்டன் சென்றிருக்கும் அதே காலகட்டத்தில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் எதிரணி சிங்களச்சக்திகளும் அங்கு சென்றிருக்கின்றனர்.

பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி நாட்டுப் பிரிவினைக்கோ ஜனநாயக அரசைக்கவிழ்ப்பதற்கோ துணைபோகமாட்டோமெனவும் தேசத்துக்கு துரோகமிழைக்கமாட்டோமெனவும் சத்தியப் பிரமாணம் செய்தவர்கள் இன்று மறைமுகமாக அந்தச் துரோகத்தைச் செய்யமுற்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க அரசு ஒருபோதும் பின் நிற்கப்போவதில்லை எனவும் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2522:2010-12-03-07-19-22&catid=51:local&Itemid=85

முன்னர் வெளியான சனல் 4 ஒளிநாடாவை வெளியிட்டனர்.அது இறுதியில் பொய்யாக்கப்பட்டது.தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை அன்று ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு ஏற்றுக்கொண்டது :lol: :lol: :wub:

  • தொடங்கியவர்

முன்னர் வெளியான சனல் 4 ஒளிநாடாவை வெளியிட்டனர்.அது இறுதியில் பொய்யாக்கப்பட்டது.தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை அன்று ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு ஏற்றுக்கொண்டது :lol: :lol: :wub:

சிங்களம் கட்டாயம் அதை "பொய்" என்றுதான் சொல்லும். அதை உண்மை என்று சொல்லும் கணமே அவர்களுக்குள் "பிளவு" வந்துவிட்டது என ஊகிக்கலாம்.

A notarized report of preliminary findings from a US-based forensic company that took nearly three weeks to analyze the Channel-4 broadcast video allegedly showing Sri Lanka Army (SLA) soldiers extra-judicially executing Tamil captives stripped naked and hands tied behind their back, said "[t]he video and audio of the events depicted in the Video, were continuous without any evidence of start/stops, insertions, deletions, over recordings, editing or tampering of any kind." US pressure group, Tamils Against Genocide (TAG) which sponsored the study, placed an embargo on revealing the details of the forensic company, until the final report is complete early November.

http://tamilnet.com/art.html?catid=13&artid=30466

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.