Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் இந்த பிரபாகரன்…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த பிரபாகரன்…?

Posted by: on Dec 3, 2010

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்

தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்

பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.

சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .

தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.

இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.

புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .

சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது

தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.

ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.

கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.

பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.

ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்

தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்

தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.

வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .

பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பி;டப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்

தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

தமிழ்க்கதிர்

நிச்சயமான உண்மை.

நான் படித்த வரலாறுகள்,தமிழ் மன்னர்களின் பழைய வரலாறுகள் எல்லாம் நேரில் கண்டசாட்சியம் போல் இருந்தது தலைவரின் போராட்ட காலம்.

இந்துநாகரிகம், தமிழ், மேற்படிப்புக்காக தேர்வு செய்தவர்கள் இதன் உண்மையை விளங்குவார்கள்.

வரலாற்று சான்றுகள் படிக்கும் போது ஈழ யுத்தம் கண்முன் நிற்கின்றது.

தமிழ் வரலாற்று ஞூல்களை கொப்பி அடித்தது போல் தலைவரின் போர்வரலாறும் அமைந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.