Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் சபை

Featured Replies

ஐக்கிய நாடுகள்

இலங்கை சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் சபை

2010 யூன் 22ந் திகதி ஐ.நா.செயலாளர் நாயகம், இலங்கையில ; நடைபெற்ற மோதலின் இறுதிக் கட்டங்களின் போது, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டதாகக் குற்றம ; சாட்டப்படும் விடயங்கள் சம்பந்தமாகத் தனக்கு ஆலோசனை கூறுவதற்காக நிபுணர்கள் சபையொன்றை அமைத்தார். மார்சுக்கி தருஸ்மன் , ஸ்ரீவென் ரட்னெர், யஸ்மின் சூக்கா ஆகியோர் அச்சபையின் உறுப்பினர்களாவர்.

இந்த சபை 2010 செப்ரெம்பர் 16ல் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை ஆரம்பித்தது. இச்சபை, இலங்கையில் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மீறல்களின் தன்மை மற்றும் நோக்கம் என்பனவற்றைக் கவனதத்திலெடுத்து, அவற்றைக் கையாள்வதற்கான முன் மாதிரிகள், நடைமுறையிலிருக்கும் சர்வதேசத் தராதரங்கள் மற்றும் ஒத்த தன்மையுள்ள அனுபவங்கள் என்பவற்றைக் கணக்கிலெடுக்கும். இச்சபை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஒன்றேயொழிய, உண்மையைக் கண்டறிவதற்கான அல்லது விசாரணை செய்வதற்கான ஒன்றல்ல.

எவராவது இதற்கு ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க விரும்பினால், முறையே பின்வருவனவற்றைச் செய்யலாம்.

1. ஸ்தாபனங்களும், தனிநபர்களும் 10 பக்கங்களுக்கு மேற்படாத எழுத்து மூலமான ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க முடியும். அதில்

நிச்சயமாக அந்த ஆலோசனையை எழுதியவர்களின் தொடர்பு விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. சபையானது 2010 டிசம்பர் 15 வரை ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும்.

3. ஆலோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி: panelofexpertsregistry@un.org

.

4. ஆலோசனைகள் யாவும் சபை நிபுணர்களால் இரகசியமாகப் பேணப்படும்.

மேலதிக விபரங்களை கீழ்காணும் முகவரியிலுள்ள சபை செயலகத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்:

panelofexpertsregistry@un.org

மூலம்: http://www.un.org/en/rights/pdf/Tamil%20translation.pdf

Edited by akootha

  • தொடங்கியவர்

இலங்கையில் கடந்த காலங்களில் என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியும்: அமெரிக்கா எச்சரிக்கின்றது

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக எச்சரித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெ ரிக்காவின் ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழில் துறை பிரதியமைச்சர் மைக்கல் போஸ்னர் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளார்.

நாங்கள் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களை கண்காணித்து வருகின்றோம். அதில் மாற்றம் இல்லை.

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்தது என்னவென்பதையும் நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அது மாத்திரமன்றி ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை விடயத்தில் எப்படிச் செயல்படப் போகின்றது என்பதையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளின் கண்களில் தொடர்ச்சியாக விரல் விட்டு ஆட்டலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் ஆணவத்துக்கு இந்த அறிக்கை ஒரு பலத்த அடியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.eelampress.com/2010/12/8731/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.